என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

வெள்ளி, 2 மார்ச், 2012

இலங்கையின் வெற்றி... !

இலங்கையின் - ஆஸ்திரேலியா கிரிகெட் போட்டி...

நேற்றிலிருந்தே இன்று நடந்த இலங்கை - ஆஸ்திரேலியா போட்டியில் ஆஸ்திரேலியா எப்படியாவது ஜெயித்துவிட வேண்டுமென்று மனது நினைத்துக்கொண்டே இருந்தது. ஆஸ்திரேலியா வெற்றிபெற்றால் தான் இந்தியா  முத்தரப்பு போட்டியின் இறுதிச் சுற்றில் விளையாட முடியும் என்ற நிலை இருந்ததால்.... இந்தியர்கள் அனைவரும் ஆஸ்திரேலியா அணியைத் தங்கள் அணிபோலவே நினைத்து அவர்கள் அடிக்கும் ஒவ்வொரு ரன்னுக்கும் சந்தோஷப்பட்டும் ஒவ்வொரு விக்கெட்டுக்கு வருத்தப்பட்டும் இருந் தோம். அநேகமாக எல்லோருமே அப்படித்தான்   இருந்திருப்பர். அதே போல இலங்கை அணி ஒவ்வொரு காட்ச் மிஸ் பண்ணும்போதும் ....பீல்டிங் தவறும்போது சந்தோஷப்ப்ட்டும்... ஒரு விக்கட் எடுதால் அவர்கள் மேல் வெறுப்பாகியும் ... இப்படி சென்று கொண்டிருக்க....

கடைசி ஓவர் ஆறு பந்துகள் பத்து ரன்கள் தேவையாயிருக்கும்போது... எப்படியாவது பத்து ரன்னை எடுத்து விடுங்களேன் என்று ஆஸ்திரேலியா அணியினரை அனேகமாக கிரிக்கட் மாட்ச் பார்த்துக்கொண்டிருந்த  இந்தியர்கள் மனதால் கெஞ்சிக் கொண்டிருந்திருப்பர்....

ஆனால் தில்ஷன் பொவுல் செய்த கடசி ஓவரின் முதல் பந்தை சந்தித்த D J ஹஸ்ஸி அடித்த பந்தை குலசேகர  காட்ச் பிடிக்க... பிடித்துவிட்டு அப்படியே தரையில் மல்லாந்து படுத்து ...இலங்கை அணியின் மன இருக்கத்தைத் தளர்த்தியதும்.... சிலநொடிகள் சலனமற்று பின்  நிம்மதிப் பெருமூச்சு  விட்டு தமது வெற்றியை கொண்டாடிய அணித்தலைவர் ஜயவர்தனேவும் .... விக்கெட் விழுந்தவுடன்...வெற்றிபெறவேண்டுமென்று   மனதில் கொண்டிருந்த வெறி தீர்ந்து ஆசுவாசப் பட்ட தில்ஷன்... இறுதிப்போட்டிக்குள் நுழைந்துவிட்ட சந்தோஷத்தில்.. மற்றும் .அணியின் ஒவ்வொரு வீரர்களின் மகிழ்ச்சியைப் பார்த்தவுடன்.... நம்மை அறியாமல்.... ஒரு சந்தோஷம் நம் மனதில் ஊடுருவியது...  They deserve to win... என்று மனதாரச் சொல்லுமளவிற்கு இலங்கை அணியினரின் உணர்ச்சி பூத்த அந்த நிமிடம் இந்திய அணி இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறவில்லையே என நிச்சயமாக நினைக்கவைக்கவும் இல்லை... ஏங்க வைக்கவும் இல்லை...


The best team always wins the game!

இலங்கை அணிக்கு வாழ்த்துக்கள்... இறுதிப் போட்டியில் எளிதாக வென்று வாகை சூடட்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக