என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.
சங்ககாலப் புலவர்களின் கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சங்ககாலப் புலவர்களின் கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 17 ஜூலை, 2011

கவி காளமேகம் - சிலேடைப் பாடல்கள் (7 - பாம்பும் வாழைப்பழமும்)


இந்தப் பாடலில் கவி காளமேகம், பாம்பையும் வாழைப்பழத்தையும் ஒன்றெனக் கூறுகிறார் ...

நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதர்முடி மேலிருக்கும்
வெஞ்சினத்தில் பற்பட்டால் மீளாது - விஞ்சுமலர்த் 
தேம்பாயும் சோலைத் திருமலைரா யன்வரையில்
பாம்பாகும் வாழைப் பழம்.

(விஞ்சு - அதிகமாக , தேம்பாயும் - தென் பாய்கின்ற) 

அதிகமான அளவிலே தேனைப் பொழிந்து கொண்டிருக்கின்ற பூக்களை உடைய சொலைகளைக்கொண்ட திருமலை ராயனின் மலைச் சாரலிலே இருக்கும் வாழைப்பழத்திற்கு ஒப்பானது பாம்பு என்று கூறுகிறார் )

எப்படி எனில்...

பாம்பானது விஷத்தைக் கொண்டது. ஒவ்வொரு பருவத்திலும் மேல் தொலை உரித்துவிடும் (பாம்பு சட்டை மாற்றும் என்று கூறுவோமல்லவா?) சிவபெருமானின் தலைமீது ஆபரணமாக இருக்கிறது. கோபத்தில் அது கடித்துவிட்டாலோ உயிர் போய்விட்டாலோ திரும்ப வராது.

வாழைப்பழமானது... நன்கு கனிந்து மென்மையாக நைந்து இருக்கும். அதை நாம் அப்படியே சாப்பிட முடியாது அல்லவா? அதனால் அதன் தோல் உரிக்கப்படும். இறைவனின் திருமுடி மீது அபிஷேகமாகச் சமர்ப்பிக்கப்படுவது (பஞ்சாமிர்தத்தில் முக்கிய பழம் வாழைப்பழம் ) வாழைப் பழத்தைச் சாப்பிடும்போது அதைப் பார்க்கலால் அறைக்கப்படுவதால் வயிற்றினுள் சென்றுவிடும் அதனால் மீண்டுவருவதில்லை. 

இப்படி பாம்பையும் வாழைப்பழத்தையும் ஒன்றெனக் கூறுகிறார் கவிக் காளமேகம்.

வியாழன், 14 ஜூலை, 2011

கவி காளமேகப்புலவர் - சிலேடைப் பாடல்கள் (வானவில், விஷ்ணு வெற்றிலை)

கவி காளமேகம் ... அடுத்த ஒரு பாடலில்... வானவில், விஷ்ணு வெற்றிலை இம்மூன்றும் ஒன்றெனக் கூறுகிறார்..

நீரி லுளதால், நிறம்பச்சை யாற்றிருவால் 
பாரிற் பகைதீர்க்கும் பான்மையால் - சாருமனுப் 
பல்வினையை மாற்றுதலால், பாரீர், பெருவான
வில்விண்டு நேர்வெற் றிலை 

பிரித்துப் படிக்க:
நீரில் உளதால், நிறம்பச்சையால் திருவால் 
பாரில் பகைதீர்க்கும் பான்மையால் - சாருமனுப் 
பல்வினையை மாற்றுதலால், பாரீர், பெருவான
வில்விண்டு நேர் வெற்றிலை

(சாருமனு - சார்ந்தவர்கள்.; 
திரு- அழகு, திருமகள், மங்கலப் பொருள் 
விண்டு - விஷ்ணு)

அதாவது, 

வானவில்லானது நீர்நிறைந்த மேகத்திலிருந்து உண்டாகிறது. அதில் முக்கிய முக்கிய நிறமாகப் பச்சை நிறம் உள்ளது. அழகாக உள்ளது. உலக வாழ்க்கைக்குப் பகையான கோடை வரட்சியிலிருந்து காக்கிறது. வானவில்லைப் பார்க்கும்போது மக்களுக்கு ஒரு புத்துணர்ச்சியும், மழை வரும் முன்னறிவுப்பு என்பதால் சோர்வைப் போக்கி மகிழ்ச்சியைத் தருகிறது.

விஷ்ணு, பாற்கடலில் பள்ளி கொண்டவர். பச்சை வண்ண நிறமுடையவர்(பச்சை மாமலை போல் மேனி) . திருமகளைத் தன் மார்பில் கொண்டவர். உலகில் பகைவரை(அரக்கர்களை) அழிக்கும் இயல்புடையவர், தன்னை நாடித் தன்னையே சார்ந்திருப்பவர்களை பல்வேறு வினைகளிலிருந்தும் பாவங்களிலிருந்தும் நீக்குபவர். 

வெற்றிலையானது நீர்நிலைகளில் வளரும் தாவரம். பச்சை நிறமுடையது, அது மங்கலப் பொருளாக விளங்குவது. உலகில் பகை தீர்ந்த இடத்தில் நட்புக்கு அடையாளமாகப் பயன்படுகிறது. (பகை தீர்ந்ததும் சண்டையிட்டவர்கள் சேர்ந்து வெற்றிலை போட்டுகொண்டாடுவார்கள்) பல் சம்மந்தமான நோய்களைத் தீர்க்கிறது. பற்களில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்குகிறது. (வெற்றிலையில் உள்ள குளோரஃபில் பற்களுக்கு நன்மை பயப்பது) 

இப்படி ஒரு அருமையான பாடலின் மூலமாக வெற்றிலையும் விஷ்ணுவும் வானவில்லும் ஒன்றெனக் கவி காளமேகம் கூறுகிறார். 

புதன், 6 ஜூலை, 2011

காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்

அற்புதமான இன்னொரு சிலேடைப் பாடல்:

இது முப்பொருள் உள்ளடக்கிய சிலேடைப் பாடல்...

என்ன வியப்பாக உள்ளதா?... படித்துப் பாருங்களேன்...

கீழ்வரும் பாடலில் விநாயகரும் முருகனும் சிவபெருமானும் ஒன்றெனக் கூறுகிறார் கவி..

சென்னிமுக மாறுளதால் சேர்கரமுன் னாலுகையால்
இன்னிலத்தில் கோடொன் றிருக்கையால் - மன்னுகுளக்
கண்ணுறுத லானுங் கணபதியும் செவ்வேளும் 
எண்ணரனு நேரா வரே .

பிரித்துப் படிக்க: 

சென்னி முகம் ஆறு உளதால் சேர் கரம் முன் நாலு கையால் 
இந்நிலத்தில் கோடு ஒன்று இருக்கையால் - மன்னு குளக் 
கண் உறுதலானும் கணபதியும் செவ்வேளும் 
எண் அரனும் நேர் ஆவரே ! 

(சென்னி - தலை , கோடு - கொம்பு,மலை; மன்னு - நிலை பெற்ற , குளம் - நெற்றி , உறுதல் - இருத்தல், பொருந்துதல், அரன்- சிவன் )

எப்படி இவர்கள் மூவரும் ஒன்றாவார்கள் என்றால்...

விநாயகரின் தலையும் முகமும் வழக்கத்திலிருந்து மாறுபட்டடவை. உடல் அமைப்பிற்கு முரணாக அமைந்தவை. (யானைத் தலை, மனித உடல்) முகத்தில் அமைந்த துதிக்கையானது முன்புறம் தொங்குகிறது. இந்த உலகத்தில் ஒற்றைக் கொம்புடையவராக உள்ளார். மண்ணெடுத்து அதில் பிள்ளையாரைப் பிடித்து வைத்தாலும் அதிலும் பிள்ளையாரின் பிரசன்னம் இருக்கும் என்கிறார்.

சரி, அடுத்து முருகன் எப்படி இருப்பாரென்று கூறுகிறார் என்றால் ....

இவர் தலையும் முகமும் ஆறு(6 ) உடையவர் . இவர் உடலில் 12 கைகள் சேர்ந்திருக்கிறது (சேர்கரம் முன் நாலு 3x4 =12) மலையில் வசிப்பவர்(திருச்செங்கோட்டில் வசிப்பவர்). சரவணப் பொய்கையில் அவதரித்தவர் (மன்னுகுளம்)

அடுத்து பரமசிவனையும் இவர்களோடு ஒப்பிடுகி
றா::

சிவனின் தலையில் கங்கை ஆறு உள்ளது , முன்புறம் நான்கு கைகளை உடையவர்(உடலுடன் சேர்ந்து நான்கு கைகள் முன்னால் உள்ளது) , இப்புவியின் சிறந்த கைலாச மலையில் வீற்றிருப்பவர் , நெற்றிக்கண் அமையப் பெற்றவர். 

இப்படி ஒரே பாடலில் மூன்று கடவுளர்களையும் அற்புதமாக ஒப்பிடுகிறார்!

சனி, 2 ஜூலை, 2011

காளமேகப் புலவர் சிலேடைப் பாடல்கள் - (வைக்கோலும் யானையும்)

வைக்கோலும் யானையும்

வாரிக் களத்தடிக்கும், வந்தபின்பு கோட்டைபுகும்
போரில் சிறந்து பொலிவாகும் - சீருற்ற
செக்கோல மேனித் திருமலைரா யன்வரையில்
வைக்கோலு மால்யானை யாம்.

விளக்கம்  : சிறப்புப் பொருந்திய செம்மை நிறமுடைய அழகான மேனியுடைய திருமலை ராயனின் மலைச்சாரலிடத்தில் வைக்கோல் மதயனைக்குச் சமம் என்று கூறுகிறார் கவி காளமேகம்.

எப்படியெனில் -
வைக்கோல், உழவர்களால் கற்றை கற்றையாக வாரிஎடுத்துச் செல்லப்பட்டு களத்துமேட்டில் அடிக்கப்படும். பிறகு பண்டகசாலைகளில் கோட்டையாகக் கட்டிச் சேர்க்கப்படும். ஊருக்குள் கொண்டுவரப்பட்டு. பெரிய பெரிய வைக்கோற்   போர்களாக  வைக்கப்பட்டு சிறப்பாகத் தோன்றும்.

அதே போல் -

யானையானது , போர்க்களத்தில் பகைவர்களைத் துதிக்கையால் தூக்கிஎடுத்துத் தரையில் வீடி அடித்துக் கொல்லும். பகைவர்களைக் கொன்ற பின் அவர்கள் கோட்டைக்குள் வெற்றியுடன் நுழையும். .இப்படி போர்க்காலத்தில் யானையானது சிறப்பாகத் தோன்றும்

இதனால் வைக்கோலும் யானையும் சமம் என கவிகாளமேகம் அழகாகக் கூறுகிறார்.

வியாழன், 30 ஜூன், 2011

காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள் (தேங்காயும் நாயும்)

தேங்காயும் நாயும்
ஓடு மிருக்குமத னுள்வாய் வெளுத்திருக்கும்
நாடுங் குலைதனக்கு நாணாது - சேடியே
தீங்காய தில்லாத் திருமலைராயன் வரையில்
தேங்காயு நாயுமிணைச்  செப்பு.  
(பிரித்துப் படிக்க :
ஓடும் இருக்கும் அதன் உள்வாய் வெளுத்திருக்கும்
நாடும் குலை தனக்கு நாணாது - செடியே
தீங்கு ஆயது இல்லாத் திருமலைராயன் வரையில்
தேங்காயும் நாயும் இணைச் செப்பு )

விளக்கம்: தோழி! (சேடி- தோழி) , தீமை இல்லாத திருமலைராயன் வாழும் மலைப்பகுதியிலே தேங்காயையும் நாயையும் ஒப்பாகக் கூறு... எப்படியெனில்..
தேங்காயிடம் [color=red]ஓடும்  இருக்கும் [/color].(ஓடு ஒன்றை கொண்டதாய் இருக்கும்) அந்த ஓட்டின் உட்புறம் வெளுத்திருக்கும். வெண்மையான தேங்காய் அதன் உள்ளிருக்கும். அனைவரும் நாடும் (விரும் பும்) தேங்காயானது  குலையாகத் தொங்குவதால் அது வளைவதில்லை(நாணாது). கோணுவதில்லை   . காய்களைத் தாங்க முடியுமா என அஞ்சுவது இல்லை.
அதே போல்...
நாய் ... சில நேரம் ஓடும். சில நேரம் ஒரே   இடத்தில்  நாக்கைத்  தொங்கப்  போட்டுக் கொண்டு  இருக்கும் ([color=red]ஓடும்  இருக்கும்[/color])
அதன் உள்வாய்  வெளுத்து  இருக்கும். எப்போதும்  குறைத்துக்  கொண்டிருப்பதற்கு   வெட்கப்படுவதே இல்லை. புதியவர்கள் யாரும்  வருவதை (நாடும்) உற்றுப்  பார்க்கும் , பிறகு  குலைக்கும் . குலைப்பதர்க்குச்  சிறிதும்  வெட்கப்படாது ...யாரைக் கண்டும் அஞ்சவும் அஞ்சாது.

இப்படி  நாயும் தேங்காயும் ஒன்று  என்று  கவி  காளமேகம்  அழகாக  எடுத்துரைக்கிறார் .

வெள்ளி, 24 ஜூன், 2011

காளமேகப்புலவர் -சிலேடைப் பாடல்கள் (வைக்கோலும் யானையும்)

வைக்கோலும் யானையும்

வாரிக் களத்தடிக்கும், வந்தபின்பு கோட்டைபுகும்
போரில் சிறந்து பொலிவாகும் - சீருற்ற
செக்கோல மேனித் திருமலைரா யன்வரையில்
வைக்கோலு மால்யானை யாம்.

விளக்கம்  : சிறப்புப் பொருந்திய செம்மை நிறமுடைய அழகான மேனியுடைய திருமலை ராயனின் மலைச்சாரலிடத்தில் வைக்கோல் மதயனைக்குச் சமம் என்று கூறுகிறார் கவி காளமேகம்.

எப்படியெனில் -
வைக்கோல், உழவர்களால் கற்றை கற்றையாக வாரிஎடுத்துச் செல்லப்பட்டு களத்துமேட்டில் அடிக்கப்படும். பிறகு பண்டகசாலைகளில் கோட்டையாகக் கட்டிச் சேர்க்கப்படும். ஊருக்குள் கொண்டுவரப்பட்டு. பெரிய பெரிய வைக்கோற்   போர்களாக  வைக்கப்பட்டு சிறப்பாகத் தோன்றும்.

அதே போல் -

யானையானது , போர்க்களத்தில் பகைவர்களைத் துதிக்கையால் தூக்கிஎடுத்துத் தரையில் வீடி அடித்துக் கொல்லும். பகைவர்களைக் கொன்ற பின் அவர்கள் கோட்டைக்குள் வெற்றியுடன் நுழையும். .இப்படி போர்க்காலத்தில் யானையானது சிறப்பாகத் தோன்றும்

இதனால் வைக்கோலும் யானையும் சமம் என கவிகாளமேகம் அழகாகக் கூறுகிறார்.

வியாழன், 23 ஜூன், 2011

காளமேகப்புலவர் -சிலேடைப் பாடல்கள் (பாம்பும் எள்ளும்)

காளமேகப்புலவர் -சிலேடைப் பாடல்கள் (பாம்பும் எள்ளும்)

நான்  மிகமிக  ரசிக்கும்  புலவர்களில்   அவ்வையாரும் காளமேகமும் முதன்மையானவர்கள்  
இம் என்றால் நூறு கவிதை இச்சென்றால் நூறுகவிதை யாக்கும் திறமைமிக்ககவி காளமேகம் ஆவார்.
அதேபோல் கவிகளுக்கே உரிய கர்வம் மிக அதிக அளவில் கொண்டவர். யாருக்கும் எப்போதும் பயப்படாமல் தனது கருத்துக்களை வெட்டென கூறுபவர்.
இவரது கவிதைகளில் சொல்லாடலும் இலக்கிய நயமும் படிக்கும்போது நம்மை வியப்பிலாழ்த்தும். அதுவும் அவரது சிலேடைப் பாடல்களைப் படித்தல் நாம் சொக்கிப் போவோம். உதாரணமாக:
பாம்பையும் எள்ளையும் குறித்து ஒரு வெண்பா:-
ஆடிக் குடத்தடையும் ஆடும்போ தேயிரையும்
மூடித் திறக்கின் முகங்காட்டும் - ஓடிமண்டை
பற்றிற் பரபரெனும் பாரிற்பிண் ணாக்குக்குமுண்டாம்
உற்றிடுபாம் பெள்ளெனவே யோது!  
விளக்க உரை: பாம்பானது படமெடுத்து ஆடியபிறகு அருகிலுள்ள பானை அல்லது குடத்தினில் புகுந்து கொள்ளும். படமெடுத்து ஆடும்போது சீற்றமுடன் ஒலியெழுப்பும். பாம்பு உள்ள பெட்டி அல்லது கூடையைத் திறந்தால் சட்டென்று தலையை உயர்த்திக் காட்டும்.  அதன் தலையைப் பிடித்தாலோ பரபரவென்று கையைச் சுற்றிக் கொள்ளும். அது கடித்துவிட்டாலோ அதன் விஷம் மண்டைக்கேறி உடலெங்கும் பரபரவென்று ஊரல் உண்டாக்கும். அதனுடைய நாக்கோ பிளவுபட்டதாக இருக்கும்
எள், செக்கிலிட்டு ஆட்டப்பட்டு அதன் எண்ணையானது குடத்தில் சேமிக்கப்படும். அதைச் செக்கிலிட்டு ஆட்டும்போது கரகரவென்ற ஓசை ஏற்படும். எண்ணைக் குடத்தை சிறிது நேரம் மூடிவைத்து நுரை அடங்கியபின்  திறந்து பார்த்தால்... திறந்து பார்ப்பவரின் முகத்தைத் தெளிவாகக் காட்டும். எள் எண்ணையை   மண்டையில் தேய்த்துக்கொண்டால் பரபரவெனக் குளிர்ச்சி உண்டாக்கும். அல்லது உச்சியில் தேய்த்தால் பரவியோடி மண்டையில் பரபரவென்று ஊரலெடுக்கும். எள்ளிலிருந்து பிண்ணாக்கும் கிடைக்கும்.
இப்படி அருமையாக பல சிலேடைப் பாடல்களைப் பாடியுள்ளார் கவி காளமேகப்புலவர்

வெள்ளி, 17 ஜூன், 2011

அவ்வையின் நூல்கள் - மூதுரை


நூல்கள் - மூதுரை


அவ்வையின் வாக்குண்டாம் (மூதுரை)
[
தமிழின் பொக்கிஷங்கள் எனப் போற்றப்படும் நூல்களில் முக்கியமான இடத்திலிருப்பது அவ்வை மூதாட்டியின் படைப்புக்களனைத்தும். இவர் படைப்புக்கள் அன்று முதல் இன்று வரை அழியாப் புகழ் பெற்று மணம் பரப்பக் காரணம், அதில் பொதிந்துள்ள அறநெறிக் கருத்துக்கள்தாம். 

அறிவுக்கு விருந்தாக இருக்கும் இந்நூல்களை சேனையில் பதிவிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அனைவரும் படித்து கரை கடந்த ஆனந்த வெள்ளத்தில் திளைத்திடுக!

காப்பு - வெண்பா 

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் 
நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு 
துப்பார் திருமேனி தும்பிக்கை யான் பாதந் 
தப்பாமற் சார்வார் தமக்கு. 

பிரித்துப் படிக்க: 
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் 
நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு 
துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம் 
தப்பாமல் சார்வார் தமக்கு. 
(துப்பு - சிவந்த பவழம் ; ஆர் - அழகு,; மாமலராள் - சரஸ்வதி ; நுடங்காது - நோய்பிடித்து சிதையாது)

பவழம் போல் சிவந்த திருமேனியையும் தும்பிக்கையையும் உடைய விநாயகக் கடவுளின் திருவடிகளை நறுமணமிக்க பூக்களைக் கொண்டு பூஜை செய்வோருக்கு நல்ல வாக்கும் மனமும் செந்தாமரையில் வீற்றிருக்கும் சரஸ்வதியின் அருளும் (அறிவும் ) கிடைக்கும் என்கிறார் அவ்வை பிராட்டி. 

மனிதப் பிறப்பில் நாம் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து வாழவேண்டும் ; அந்த உதவி/உபகாரம் பற்றி அவ்வை கூறுகிறார்...

உதவி எப்படி செய்ய வேண்டும் என்பதை; 

நன்றி யொருவருக்குச் செய்தக்கால் அந்நன்றி 
என்று தருங்கோல் எனவேண்டா - நின்று 
தளரா வளர் தெங்கு தாளுண்ட நீரைத் 
தலையாலே றான்தரு தலால்.

(தெங்கு - தென்னை ; தாள் - அடி, (வேர்) 

நிலைபெற்று உறுதியாக நீண்டு வளரும் தென்னையானது தான் வேர் மூலம் குடித்ததை நீரை எப்படி thalai மீது கொண்டு மிக்க இனிமையும் நல்லதுமான இளநீரைத் தருகிறதோ அதே போல் ஒருவருக்கு ஒரு உபகாரம் செய்துவிட்டு அவன் அதை எப்போது நமக்குத் திருப்பிச் செய்வானோ என சந்தேகப்படவேண்டாம்... தக்க நேரத்தில் அதன் பலன் கிட்டும் என்பதாக அழகாகக் கூறுகிறார் அவ்வை.

அடுத்ததாக ... 
[/b][/u]எப்படிப்பட்டவர்க்கு உபகாரம் செய்யவெண்டும் என்றும் கூறுகிறார் [/b][/u]

நல்லார் ஒருவருக்குச் செய்த உபகாரங் 
கல்மேல் எழுத்துப் போற் காணுமே - அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்
நீர்மேல் எழுத்திற்கு நேர்.

அதாவது, நற்குனங்களுடிய ஒருவருக்குச் செய்யும் உபகாரமானது கல்லின் மேல் எழுதிய எழுத்துப் போல என்றும் அழியாது நிலைத்து இருக்கும். அதே நேரம், அன்பற்ற தீய குணமுடைய ஒருவருக்குச் செய்யும் உபகாரமானது தண்ணீர்மேல் எழுதிய எழுத்துபோல் உடனே மறைந்துவிடும் என்கிறார்.

அடுத்து .... தொடர்வோம்....