என்னைப் பற்றி
- லதாராணி(Latharani)
- "ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.
ஞாயிறு, 17 ஜூலை, 2011
கவி காளமேகம் - சிலேடைப் பாடல்கள் (7 - பாம்பும் வாழைப்பழமும்)
இந்தப் பாடலில் கவி காளமேகம், பாம்பையும் வாழைப்பழத்தையும் ஒன்றெனக் கூறுகிறார் ...
நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதர்முடி மேலிருக்கும்
வெஞ்சினத்தில் பற்பட்டால் மீளாது - விஞ்சுமலர்த்
தேம்பாயும் சோலைத் திருமலைரா யன்வரையில்
பாம்பாகும் வாழைப் பழம்.
(விஞ்சு - அதிகமாக , தேம்பாயும் - தென் பாய்கின்ற)
அதிகமான அளவிலே தேனைப் பொழிந்து கொண்டிருக்கின்ற பூக்களை உடைய சொலைகளைக்கொண்ட திருமலை ராயனின் மலைச் சாரலிலே இருக்கும் வாழைப்பழத்திற்கு ஒப்பானது பாம்பு என்று கூறுகிறார் )
எப்படி எனில்...
பாம்பானது விஷத்தைக் கொண்டது. ஒவ்வொரு பருவத்திலும் மேல் தொலை உரித்துவிடும் (பாம்பு சட்டை மாற்றும் என்று கூறுவோமல்லவா?) சிவபெருமானின் தலைமீது ஆபரணமாக இருக்கிறது. கோபத்தில் அது கடித்துவிட்டாலோ உயிர் போய்விட்டாலோ திரும்ப வராது.
வாழைப்பழமானது... நன்கு கனிந்து மென்மையாக நைந்து இருக்கும். அதை நாம் அப்படியே சாப்பிட முடியாது அல்லவா? அதனால் அதன் தோல் உரிக்கப்படும். இறைவனின் திருமுடி மீது அபிஷேகமாகச் சமர்ப்பிக்கப்படுவது (பஞ்சாமிர்தத்தில் முக்கிய பழம் வாழைப்பழம் ) வாழைப் பழத்தைச் சாப்பிடும்போது அதைப் பார்க்கலால் அறைக்கப்படுவதால் வயிற்றினுள் சென்றுவிடும் அதனால் மீண்டுவருவதில்லை.
இப்படி பாம்பையும் வாழைப்பழத்தையும் ஒன்றெனக் கூறுகிறார் கவிக் காளமேகம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக