என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.
அனுபவங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அனுபவங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 25 டிசம்பர், 2016

மதபோதகர்கள் என்னும் பித்தலாட்டக்காரர்கள்

என்னதான் அறிவியல் முன்னேற்றம் இருந்தாலும் எவ்வளவுதான் படித்திருந்தாலும் மூட நம்பிக்கைகளிலிருந்தும் முட்டாள்தனமான சில செயல்களிலிருந்தும்  இன்னும் வெளிவராமல் தான் நம்மில் பலர் இருக்கிறார்கள்.

ஜாதி பிரிவினைகள் வேண்டாம் என்கிறோம் மத நம்பிக்கைகள் கூடாது என்கிறோம் ஆனால் எங்கள் நம்பிக்கையைக் குறை சொல்ல நீங்கள் எல்லாம் யார் என்றும் பகுத்தறிவாளர்கள் என்று கூறிக்கொண்டு எங்களையெல்லாம் முட்டாள்கள் என்று சொல்பவர்கள் தானே நீங்களெல்லாம் என்று பொதுவாக எல்லோருமே எல்லா பகுத்தறிவாளர்களும்  கேட்பதுண்டு.

ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்கவும் ஒழுக்கங்களைக் கற்பிக்கவும் மட்டும் இருந்தால் மத நம்பிக்கை இருக்கட்டும் என்று நாங்களும் வரவேற்போம். ஆனால் மதத்தை ஒரு ஆயுதமாகவே பயன்படுத்தி மக்களின் உயிரையே காவு வாங்கும் மத போதகர்கள் என்ற பித்தலாட்டக் காரர்களிடம் சென்று உங்கள் பணத்தையும் பொருளையும் ஏன் உயிரையும் இழந்துவிடாதீர்கள் என்றுதான் ஒவ்வொருவரும் எச்சரித்துக்கொண்டிருக்கிறோம்.

குவைத் நாட்டில் திரு. ரவிச்சந்திரன் முத்துசாமி (புகைப்படத்தில் இருப்பவர்)குவைத் அம்மா பேரவையின் முன்னாள் தலைவராக இருந்திருக்கிறார். நன்கு படித்தவர். நல்ல நிறுவனத்தில் மேனஜர் ஆக இருந்திருக்கிறார். இந்துவாக இருந்தாலும் கிருத்துவ மதத்தின் மேல் ஈர்ப்புடையவராக இருந்திருக்கிறார். ஏசுவின் மீது அதீத நம்பிக்கை கொண்டே எல்லாக்காரியங்களையும் செய்திருக்கிறார். இளம் மனைவி இரண்டு குழந்தைகள்.

கடந்த 21-12-2016  ஆம் தேதி திடீரென்று   அவர் நெஞ்சு வலி உணர்ந்திருக்கிறார். அருகிலேயே மனைவியும் இருந்திருக்கிறார். மருத்துவமனைக்குச் -செல்லலாம் என அவரும் சொல்லவில்லை. மனைவிக்கும் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று தோன்றவில்லை .

 நெஞ்சுவலி அதிகமாக உணர்ந்தவர், இந்தியாவிலிருக்கும் ஒரு மத போதகருக்கு போன் செய்து தனக்கு அதிகமாக நெஞ்சு வலிக்கிறது என்று சொல்லி இருக்கிறார்.

அதற்கு அந்த மத போதகர் " எங்கே வலிக்கிறதோ அந்த இடத்தின் மேல் போன் ஐ  வைத்துக்கொள்ளுங்கள் நான் இங்கிருந்தே உங்களுக்காக ஜெபிக்கிறேன். போன் வழியாகவே என் ஜபம் உங்கள் நெஞ்சுக்குள் இறங்கி சுகமாக்கி விடும்  என்றும்  இயேசுவின் ரத்தத்தால் உங்களுடைய நெஞ்சுவலியை விரட்டி விடுகிறேன். இயேசு உங்களுக்கு பூரண சுகத்தைத் தருவார் என்றும்  சொல்லி இந்தியாவிலிருந்து ஜெபித்திருக்கிறார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஜெபித்திருக்கிறார்.

இரவிச்சந்திரனும் வலியோடு இருந்திருக்கிறார். அவர் மனைவியும் போன் பிடித்துக்கொண்டே இருந்திருக்கிறார். திடீரென்று இரவிச்சந்திரன் கீழே விழுந்து சுயநலம் இழந்திருக்கிறார். பிறகு தான் அவர் மனைவி அலறி அடித்து நண்பர்களை அழைத்திருக்கிறார். ஹாஸ்பிடலுக்கு கொண்டுபோயிருக்கிறார்கள். அனால் மருத்துவமனைக்குப் போகுமுன்னே அவர் உயிர் பிரிந்துவிட்டிருக்கிறது.

நெஞ்சு வலி வந்தவுடன் ஹாஸ்பிடலுக்கு போங்க என்று சொல்லாமல் கடவுள் நம்பிக்கை என்ற பேரில் எப்படி ஒரு அயோக்கியத்தனம் செய்திருக்கிறார் பாருங்கள் அந்த மத போதகர்.  இந்த மத போதகரை நம்பிக்கொண்டு எவ்வளவு முட்டாள் தனமாக இரவிச்சந்திரனும் அவர் மனைவியும்
இருந்திருக்கிறார்கள் என்று பாருங்கள்.

கண்முடித்தனமான இந்த நம்பிக்கையால் உயிரையே இழந்துவிட்டார் . இனி தனியாக இருந்துதான் இரு குழந்தைகளை வளர்க்க வேண்டும் அந்தப் பெண்.

இது சென்ற வாரம் நடந்த உண்மைச் சம்பவம். குவைத்
தந்தை பெரியார் நூலகக் காப்பாளர் செல்லபெருமாள் அய்யா அவர்கள் என்னிடம் கூறி  மிகுந்த வருத்தப்பட்டார்.

இப்படிப்பட்ட அயோக்கிய மத போதகர்களை கொலை செஞ்சாலும் தப்பில்லை என்று கூறி இதுபோன்ற முட்டாள் தனங்களுக்கெல்லாம் முடிவு எப்போதுதான் வரப்போகிறதோ... தந்தை பெரியார் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் இந்தமக்கள் திருந்தவில்லையே என்று வருத்தப்பட்டார்.



புதன், 19 டிசம்பர், 2012

21-12-12 ஐப் போல் முன்பொருநாள்...


35 வருடங்களுக்கு முன் ....அப்போது எனக்கு 7 அல்லது 8 வயதிருக்கும்.  இதே போலத்தான் நாளை உலகம் அழிந்துவிடும் என்று ஊரெல்லாம் புரளி பரவிக்கொண்டிருந்தது.

சிறு பிள்ளைகளாக இருந்த நாங்கள் ரொம்பவே பயந்து விட்டோம். இப்போது போல் அன்றைய நாட்களில் தொலை பேசி வசதியோ, இன்டெர்னெட் e-mailலோ இல்லாத நாட்களது.  வீட்டிலிருந்து வேகமாக ஓடி நண்பர்கள் வீட்டிற்கெல்லாம் சென்று எல்லோரிடமும் அந்தப் பயங்கரமான செய்தியைப் பரப்பி எல்லோரையும் அலற வைத்து, இன்னும் பக்கத்து தெருவிற்கெல்லம் சென்று அங்குள்ள நண்பர்களோடெல்லாம்  ஒன்றாகச் சேர்ந்து அய்யையோ  நாளைக்கு உலகம் அழிஞ்சுடுமாமே.  உலகம் அழிஞ்சுடுச்சுன்னா என்ன பண்றது? நாமெல்லாம் செத்து போய்டுவோமாடா , நாளைல இருந்து நம்மால் எதும் விளையாட முடியாதாடா...என்று எல்லோரும் ஒரே அழுகை.


நாங்கள் எல்லோரும் எப்போதும் ஒன்றுசேர்ந்து விளையாடும் அந்தப் புளிய மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு உலகம் எப்படி அழியும்னு பாட்டிசொன்ன கதைகளும் சினிமாவில் பார்த்த கல்கி அவதாரம் பற்றியும் ஒவ்வொருத்தரும் ஓரோர் விதமான கருத்துக்களைச் சொல்லி மனசு பூரா பயமும் அழுகையுமாக ஆலோசித்துக் கொண்டிருந்தோம்.

சினிமாவில் பார்த்தது போல் ஒரு வேளை பயங்கரமான வெள்ளம் வந்து எல்லோரையும் அடித்துக் கொண்டு சென்றுவிட்டால் என்ன செய்வது? அதிலிருந்து எப்படி தப்பிப்பது? என்று யோசித்துக் கொண்டிருந்தோம். அப்போ... நாம எல்லோரும் இந்த புளிய மரத்துமேல ஏறி உட்கார்ந்துக்கலாம். அப்போ நம்மை வெள்ளம் வந்தாலும் அடிச்சுகிட்டு போகாது.  நாமெல்லாம் தப்பிச்சுடுவோம்னு  சொல்லிகிட்டிருக்கும்போதே   இன்னொருத்தன்... அதெல்லாம் முடியாது பயங்கரமா சூறைக்காத்து அடிச்சு மரமெல்லாம் கூட வேரோடு சாஞ்சி  விழுந்துடுமே அப்போ எப்படி தப்பிக்கறதுன்னு சொல்லி கொஞ்சம் ஆறுதலா இருந்த எல்லாரையும் மறுபடி பயமுறுத்தினான்.

உடனே அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிச்சு ....சரி  பெரியகோவில் கோபுரத்து மேல ஏறிகிட்டா  கோபுரம் சாயாதுடா வெள்ளமும் அடிச்சுட்டு போகமுடியாது நம்மைனு சொல்லி கொஞ்சம் சமாதான மூச்சுவிட அடுத்தவன் சொன்னான்.... இல்ல இல்ல ... உலகம் அழியும் போது பூமியெல்லாம் பாளம்பாளமா வெடிச்சுடும் அப்படியே கோயில் கோபுரங்கள் கூட அதுல உள்ள போய்டும் ... நாம  கோபுரத்துமேல இருந்தாகூட தப்பிக்க முடியாது... எல்லாரும் அப்படியே பூமிக்குள்ள போய்  அழுந்தி புதைஞ்சு செத்து போய்டுவோம்னு  சொல்றான்....

பயம் ... என்ன செய்யறதுன்னே தெரியலே. எல்லோரும் அழுதுகிட்டே இருக்கோம். என்னோட தம்பி , அக்கா, தங்கைகள்.. இன்னும் எங்க  பிரண்ட்ஸ்  எல்லோரும் சேர்ந்து  ஒரு முடிவெடுத்தோம்....

சரி எப்படியும் உலகம் அழியப்போகுது. அதுக்கு முன்னாடி நாமெல்லாம் ஒண்ணு செய்வோம்னு சொல்லி... எங்களுக்கெல்லாம் தினமும் அப்பா பாக்கெட் மணி தருவார். செலவும் செய்வோம் . நிறைய சேர்த்தும் வைப்போம். அப்போ திடீர்னு தோணுச்சு  உலகம் அழிஞ்சு போச்சுன்னா...நாம எல்லோரும் செத்துபோய்ட்டா நாம சேர்த்து வச்சிருக்கற காசெல்லாம் வீணாதானே போகும். அதையெல்லாம் இன்னைக்கே செலவு செஞ்சுடுவோம்னு முடிவெடுத்து எல்லோரும் அவங்கவங்க வீட்டுக்குப் போய் எல்லாருடைய உண்டியலும் கொண்டுவந்து அந்தப் புளியமரத்தடியிலேயே  உட்கார்ந்து உண்டியலை உடைச்சு எல்லா காசையும் எடுத்துகிட்டு எங்க  தெருவில் இருக்கும் தாத்தா கடைக்கு(பெட்டி கடை) போய்  சோடா, கலர், பன்ன்னீர் சோடா , முருக்கு , தேன்மிட்டாய் , கம்மரகட்டு, போட்டி...இப்படி எங்களுக்குப் பிடிச்ச எல்லா அயிட்டத்தையும் வாங்கி வாங்கி சாப்பிடறோம்.  எத்தனை கலர்தான் குடிக்கறது.... ஒவ்வொருத்தரும் ரெண்டு மூணு  கலர்னு குடிக்கறோம் ... வயிறு எல்லாருக்கும் புல்லா ஆகி இனி இதுக்கு மேல எதுவும் சாப்பிட முடியாதுன்னு நிலைமை வந்துடுச்சி. அப்பவும் காசு மிச்சமா இருக்கு. அப்படியும் விடாம என்னன்னமொ வாங்கி  சாப்பிட்டு இருந்த காசையெல்லாம்  ஒரு வழியா காலி பண்ணிட்டோம்.

வீட்டுக்குப்  போக வேண்டிய நேரம் வந்துடுச்சி...  ரொம்ப வருத்தமா எல்லோரும்
டேய் ...  இன்னைக்கு ராத்திரி தூங்கினா  காலைல செத்துபோய்  இருப்போம்லனு சொல்லி சொல்லி.... அவ்ளோதான் இனி நாம யாரையும் பார்த்துக்க முடியாதுன்னு தேம்பித் தேம்பி அழுதுகிட்டே பிரிஞ்சோம்.

எப்படியோ பயத்தோடவே அந்த ராத்திரி தூங்கி இருக்கோம். அடுத்த நாள் காலைல....  அம்மா காபி போட்டுட்டு எங்களையெல்லாம் எழுப்பறாங்க.... சத்தம் கேட்டு கண்ணை திறந்து பார்த்தா சீக்கிரம் எழுந்துருங்க.... காபி குடிச்சிட்டு சீக்கிரம் குளிச்சுட்டு ஸ்கூலுக்கு கிளம்புங்கன்னு.... அம்மா குரல் கேட்குது ...எப்பவும் போல எல்லாமே நடக்குது....

ம்மா ...உலகம் அழியலியாம்மா... ன்னு கேட்டா... அடச்சீ...கழுத... உலகமாவது அழியறதாவது... எழுந்து ஒழுங்கா ரெடியாகிட்டு ஸ்கூலுக்கு கிளம்பு டைம் ஆகுது பார்ன்னு சொல்லிட்டு அம்மா சமையலறைக்குப் போய் எங்களோட டிபன் ரெடி பண்றதுல பிஸி ஆகிட்டாங்க....

எங்களுக்கோ ஒரே சந்தோஷம்.... ஹைய்யா... உலகம் அழியலே உலகம் அழியலேன்னு என்னோட தம்பி தங்கச்சியையெல்லாம் கட்டி பிடிச்சுகிட்டு ஒரே சந்தோஷமா சத்தம் போடறோம்...

ஆனா எங்களுக்கெல்லாம் உலகம் அழியலேங்கற  சந்தோஷத்தவிட நாளைக்கு உலகம் அழிஞ்சிடும்னு யாரோ சொன்னதை நம்பி சேர்த்து வச்ச காசையெல்லாம் கலர் கலரா வாங்கி குடிச்சு செலவு பண்ணிட்டோமேங்கற  வருத்தம்தான் ரொம்ப அதிகமா இருந்தது...

அந்த பழையநாள் போலவே இன்னும் ஒருநாள் இப்போது ....21.12.12

உலகம் என்பது மாயை ... மாயா காலண்டரும் அது போல் இன்னொரு மாயை... அவ்ளோதான்....

சாதாரண வாட்ச் போலத்தான் அந்த மாயன் கடிகாரமும் .  அந்த பிரம்மாண்ட கடிகாரம் 21.12.12  அன்று முடிவடைந்தால்  ... reset  பண்ண முடிந்தால் மறுபடி  ஆரம்பத்துல இருந்து ஓடப்போகுது. இதுக்குப் போயி அலட்டிக்கலாமா?

(எங்களைப் போலவே எந்த சின்னப்பசங்க எங்கெல்லாம் பயந்துகிட்டிருக்காங்களோ.... பாவம்... அவங்கள்ள   யாரோ  ஒருத்தர் என்னைப் போலவே இதே போல ஒரு அனுபவத்தை சில வருடங்கள் குறித்து எழுதக்கூடும்....  எனென்றால் இதுபோன்ற புரளி அடிக்கடி வந்துகொண்டுதானே  இருக்கிறது.)

(21.12.12 ...மாயன் காலண்டர் பற்றி என்னுடைய தம்பியுடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவன் எனக்கு நியாபகப் படுத்தினான்... உண்டியலை உடைச்சு எவ்ளோ கலர் குடிச்சோமே நியாபகம் இருக்கா லதான்னு சொல்லி சிரித்தான்.... அதை இங்கே பகிர்ந்தேன் )

ஞாயிறு, 24 ஜூலை, 2011

என் கலையுலகப் பயணம்

உலக அதிசயங்கள் ஏழு என்று சொன்னாலும் இவ்வுலகில் இன்னும் எத்தனையோ அதிசயங்கள் நிதம் தோன்றிக் கொண்டேதான் இருக்கிறது. ஆனால் அற்புதம் என்பது ஒன்றே ஒன்று தான். அதுதான் புத்தகம். 

எழுத்துக்களால் நிரப்பப்பட்டதா புத்தகங்கள்? இல்லை எழுதுபவனின் அனுபவங்களால் நிரப்பப்பட்டது. 

ஒரு எழுத்தாளராக என்னுடைய பயணத்தைத் திரும்பிப் பார்க்கிறேன். விளையாட்டுப் பிள்ளையாய் இருந்தபோதே படிப்பில் தீவிர பற்று இருந்தது. என் அப்பாவும் அம்மாவும் புத்தகங்கள் நிறையப் படிப்பார்கள். குமுதம் ஆனந்தவிகடன், கல்கி, வண்ணத்திரை, முத்தாரம், குங்குமம், கல்கண்டு என்ற வார இதழ்கள் அத்தனையும் முரசொலி, மாலை மலர், தினமணி என்ற செய்தித் தாள்கள் நாள்தவறாமல் எங்கள் வீட்டிற்கு வந்துவிடும்

மட்டும்ல்லாது, கண்ணதாசன், வைரமுத்து, வாலி யும் பட்டுக்கோட்டை பிரபாகரன், வாசந்தி , பால குமாரன் என அத்தனை பேரின் கதைப் புத்தகங்களும் எங்கள் வீட்டு அலமாரியில். இத்தனையும் போதாது என் அம்மாவிற்கு. அதனால் இன்னும் நிறைய நாவல்கள் அப்பா புத்தகசாலையிலிருந்து கொண்டுவந்து தருவார்.

அம்மா ஹவுஸ் வைப் என்றுதான் பெயர். ஆனால் அவர் ஒரு அறிவுக் களஞ்சியம். பிள்ளைகள் எல்லோரும் பள்ளிக்குச் சென்றுவிட்ட பின் நாளேடுகளையும் வார இதழ்களையும் படித்துவிடுவார். எனக்குத் தெரிந்து ஒரு புத்தகத்தை அரை மணி நேரத்திற்குள் படித்து விடுவார். அவ்வளவு வேகம் படிப்பதில், படித்துவிட்டு அதிலிருக்கும் ஜோக்ஸ் சில சின்னச்சின்ன அறிவுத் தகவல்கள் எல்லாம் எங்களுக்குச் சொல்வார்.

அப்பா காலையிலேயே கடைக்குச் சென்று காய்கறிகள் வாங்கும்போதே அன்றைய நாளேட்டையும் அவ்வாரத்தின் ஏதாவது ஒரு புத்தகத்தையும் (அப்போதெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒரு புத்தகம் வெளிவரும்... உதாரணமாக, புதன் - குமுதம் கல்கண்டு, அப்பா புத்தகம் வாங்கி கொண்டு வருவார். காலையில் பள்ளி செல்வதற்கு முன் காத்துக் கொண்டே இருப்போம். அவர் தெருமுனையில் வரும்போதே ஓடிச்சென்று கையிலிருந்து புத்தகத்தைப் பறித்துக்கொண்டு ஓடி ஏதாவது ஒரு மரத்தடியில் உட்கார்ந்து படித்துவிட்டுத்தான் வீட்டிற்கு வருவேன். ஏனென்றால் கொஞ்சம் மிஸ் ஆனாலும் புத்தகம் அக்காக்களின் கைகளுக்குச் சென்றுவிடும். என்னைப் போல் அவர்களெல்லாம் வீட்டை விட்டு வெளியே வர மாட்டார்கள் என்பதால் இந்த டெக்னிக் ஐத்தான் நான் பின்பற்றுவேன். குமுதத்தில் ஆறு வித்யாசங்கள் சின்னச்சின்ன ஜோக்ஸ், பெட்டிச் செய்திகள் என எல்லாம் படித்துவிட்டு வீட்டிற்குச் சென்று புத்தகத்தை யார் கேட்கிறார்களோ அவர்களுக்குக் கொடுத்துவிடுவேன். இப்படி வார இதழ்கள் மேல் அவ்வளவு வெறி. நான் வார இதழ்களைத்தான் தவறாது படிப்பேன். 

செய்தித் தாள்களில் நான் விரும்பி வாசிப்பது ரயில் விபத்து பஸ் விபத்து திருட்டு கொலை கொள்ளை என்பது போன்ற செய்திகளும், விளையாட்டுச் செய்திகளோடு காமிக்ஸ்.. மற்றபடி செய்தித்தாள்கள் மேல் அவ்வளவு விருப்பம் இல்லை. அதே போல் நாவல்களெல்லாம் சுத்தமாகப் படிக்கவே மாட்டேன். காரணம் முழு புத்தகம் படிக்குமளவிற்கு எனக்குப் பொறுமை கிடையாது. ஓடி விளையாடத்தான் பிடிக்கும். 

ஆனால்... கண்ணதாசன் , வைரமுத்து புத்தகங்களை என் அம்மாவும் அப்பாவும் படித்துவிட்டு அதைப்பற்றி சிலாகித்துப் பேசிக்கொண்டிருப்பார்கள். என் அம்மாவும் அக்காக்களிடம் சில புத்தகங்கள் கொடுத்து படித்துப் பார்க்கச் சொல்வார். ஆனால் எனக்கு வார இதழ்கள் தவிர இந்தப் புத்தகங்கள் பக்கம் திரும்ப மாட் டேன். ஆனால் எப்போதாவது விளையாடவும் செல்லவில்லை என்றால் வீட்டிலும் வேறு புதிய புத்தகங்கள் இல்லையென்றால்.... கண்ணதாசன் வைரமுத்து புத்தகங்களக் கொஞ்சம் திருப்பிப் பார்ப்ப்பேன். வைரமுத்துவின் தமிழ் சமகாலத்தது என்பதால் பொதுவாகப் புரிந்துவிடும். என் அப்பாவின் ஒரு பழக்கம். அவர் ரசித்துப் படித்த வரிகளை கோடிட்டு வைத்திருப்பார்....அந்த வரிகள் படிக்கும்போது மிகவும் நன்றாக இருக்கும். உதாரணமாக... 

நான் பத்தாவது படித்துக் கொண்டிருக்கும்போதென்று நினைக்கிறேன். வைரமுத்துவின் கவிராஜன் கதை... பாரதியாரின் கதையை புதுக்கவிதை பாணியில் எழுதிய ஒரு அருமையான புத்தகம். அதைப் பற்றி அம்மாவும் அப்பாவும் நிறைய பேசியதைக் கேட்டிருக்கிறேன். ஒரு நாள் அந்தப் புத்தகத்தை எடுத்து சும்மா திருப்பிப் பார்த்துக்கொண்டிருந்தால்.... ஆங்காங்கு எக்கச்சக்கமாக எழுத்துக்களின் கீழ் கோடு போட்டிருக்கிறார் அப்பா.. 

பாரதியின் வறுமையை 
" கம்பீரத்தை அறுப்பதற்கு 
வறுமைக் கரையானுக்கு 
வலிமை ஏது? 

பாரதி தெருவில் நடந்து செல்வார்... அப்போது எழுதி இருப்பார் வைரமுத்து... 
"இந்தச் சூரியன் நடந்து சென்றால் 
தெருவின் இருமருங்கிலும் 
கைத்தாமரைகள் குவியும்..." 

தீயை வளர்க்க 
ஒரு நெய் மழை வேண்டும்" ..
.என இன்னும் என்னென்னவோ வார்த்தைகள் கோடிட்டு இருந்தது. அதையெல்லாம் படிக்கப் படிக்க மனதிற்குள் இனம் புரியாத ஒரு மகிழ்ச்சி... ஒரு பரவசம்....ஆஹா எப்படியெல்லாம் எழுதுகிறார்கள் என்று ஒரு ஆச்சரியம் எப்படி இந்தக் கற்பனைகள் என்று நினைப்பேன்... அதற்குப் பிறகு அலமாரியில் இருந்த எல்லா வைரமுத்து புத்தகங்களையும் (வைரமுத்து மட்டும்) புரட்டி புரட்டி வெறும் கோடிட்ட வார்த்தைகளைப் படிக்க ஆரம்பித்தேன். இனம் புரியாத ஈடுபாடு வைரமுத்துவின் எழுத்துக்கள் மேல் எற்பட்டுவிட்டது...அதன் பிறகு முழுக்கவிதையும் பின் முழுப் புத்தகமும் படிக்க ஆரம்பித்தேன். 

பள்ளியில் எப்போதும் பேச்சுப் போட்டி கட்டுரைப் போட்டி இதிலெல்லாம் பங்கு கொள்வேன் அப்பாதான் எழுதித் தருவார். அதை மனனம் செய்து அப்படியே எழுதி பரிசு வாங்கி விடுவேன். (ஆரம்பப்பள்ளியில் இருக்கும்போது பிளாஸ்டிக் சோப் டப்பா, பென்சில் , நோட்டுப் புத்தகங்கள், திருக்குறள் புத்தகம் இப்படி...உயர்நிலைப் பள்ளியில் இருக்கும்போது ஸ்டீல் தட்டு, டம்ப்ளர், கப்ஸ் இப்படி, ஆனால் விளையாட்டுப் போட்டிகளில் ஸோனல், டிஸ்ட்ரிக்ட் எல்லாம் போகும்போதுதான் கப் வாங்குவேன்)

நான் +1 படித்துக் கொண்டிருக்கும்போது குழந்தைகள் தினம் அன்று நேரு பற்றி அங்கேயே ஒரு கவிதை எழுதச் சொல்லி சொன்னார்கள். என்ன எழுதுவதென்று புரியவில்லை. ஒரு நாள் டைம் கொடுத்தாலாவது அப்பாவிடம் கேட்டு எழுதிவிடுவேன். அதற்கும் சந்தர்ப்பம் இல்லை. 

திடீரென்று வைரமுத்துவின் ஒரு வரி நியாபகம் வந்தது....எந்த புத்தகம் என்று நினைவில் இல்லை...வார்த்தை மட்டும் நியாபகம் இருக்கிறது ..." அதோ ஒரு பறவை சோம்பல் முறித்துத் தன் சிறகை சோதித்துக் கொண்டிருக்கிறது" என்ற வரி நியாபகம் வந்தது.( அப்பா கோடிட்டு வைத்த வரி) உடனே எழுதிவிட்டேன்... 

சோம்பலை முறித்துத் தன் சிறகை 
சோதித்துக் கொள்ளும் 
பறவைகளைப் போலிருந்த மக்களிடம் 
இந்தியாவின் கஜானாவை 
ஒப்படைத்து விட்டுச் சென்றாய்... 
நீ ஒப்படைத்த கஜானா 
இன்னும் காலியாகவே இருக்கிறது... 
உன் புகைப்படத்தில் மட்டும் 
புழுதி சேர்ந்துகொண்டே இருக்கிறது 


முதல் பரிசு எனக்கு... சந்தோஷம் தாங்க முடியவில்லை - அப்பாவிற்கு. 

விளையாட்டுக்களில் 3 மாதத்திற்கொருமுறை ஏதாவது ஒரு மீட் க்கு போ கலந்து கொள்ளும் அத்தனை EVENT களிலும் பரிசினை வாங்கிக்கொண்டு வந்துவிடுவேன். இப்போது இலக்கியத்திலும் வாங்க ஆரம்பித்துவிட்டதால் ஏகப்பட்ட குஷி... எல்லோருக்கும். கவிதைப் போட்டி கட்டுரைப் போட்டி பேச்சுப் போட்டி இதிலும் நானே முதல்...இப்படித்தான் எழுத ஆரம்பித்தேன். 

வைரமுத்துவின் புத்தகங்கள் எல்லாம் கவிதைகள். அதேநேரம் அம்மாவும் அப்பாவும் ஆச்சரியப்பட்டு பேசிக்கொண்டிருக்கும் இன்னொரு கவிஞன் கண்ணதாசன். அர்த்தமுள்ள இந்து மதம் புத்தகம் எடுத்துப் பார்த்தேன். என்னதான் உள்ளது என.. உரைநடையில் இருந்ததால் படிப்பதில் சிறு கடினமும் இல்லை. வெகு எளிதாகவும் சுவாரசியமாகவும் இருந்தது. பத்து பாகங்களும் படித்து விட்டேன். வழக்கம் போல் கோடிட்ட வார்த்தைகளைப் படித்து விட்டுத்தான் பிறகு முதலிலிருந்து படிப்பேன். இதற்குப் பின் வாலி, பின் பாரதி, பாரதி தாசன்.... என்று படிப்படியாக என் ஆர்வம் ஈடுபாடாக மாறியது... இன்று அவ்வை, காளமேகம்,பத்துப் பாட்டு எட்டுத்தொகை என்று சங்க இலக்கியங்கள் வரை அவை தொடர்கிறது.

இப்படி பள்ளி இறுதியிலும் கல்லூரியிலும் கவிதைகள் எழுதி பரிசுகள் வாங்கியிருந்தாலும் அவ்வப்போது சிறு சிறு கவிதைகள் ஏதாவது எழுதுவேன். ஆனால் திருமணத்தின் பின் என் கவிதைகளை ரசிக்கவோ அல்லது ஊக்குவிக்கவோ யாருமில்லாமல் முடங்கித்தான் போனது. 

வாழ்க்கை என்ன நிலையானதா? சுழன்று கொண்டே அல்லவா இருக்கிறது? அப்படிப்பட்ட ஒரு கால கட்டத்தில்தான் மறுபடி எழுத ஆரம்பித்தேன். நான் குவைத்திற்கு வந்தேன். குவைத்தில் பாலைக் குயில்கள் கவிஞர்கள் சங்கத்தில் இணைந்தபின் என் கவிதைகளுக்கு நல்ல அங்கீகாரம். எல்லோரும் பாராட்ட ஆரம்பிக்க நிறைய எழுதினேன். நான் எழுதுவதை நண்பர்களுக்கு ஈ-மெயிலில் அனுப்புவேன். நன்றாக உள்ளது எனப் பாராட்டுவார்கள். அப்படி இருக்கும்போதுதான் சண்முகம் என்ற நண்பர் என் கவிதைகளை மு. மேத்தா, தென்கச்சி சுவாமிநாதன் மணவை முஸ்தபா, கவிஞர் ஜெயபாஸ்கரன் இப்படி ஒரு அருமையான இலக்கிய வட்டத்திற்கு என்னை அறிமுகப் படுத்தினார்.. கவிதைத் தொகுப்பும் வெளியிட்டேன். லதாராணி சொப்னபாரதி யாக மாறியது இப்படித்தான்.

அதேபோல் சிறுவயதில் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் சமயம் ஒரு ஏழாவது எட்டாவது போலிருக்கும் அப்போது எங்கள் தெருவில் இருந்த நூலகம் மாலை 4 மணியிலிருந்து ஏழுமணி வரைதான் திறப்பார்கள். அந்த நூலகத்திற்கு எங்கள் தெருவிலுள்ள ஒரு முதியவர் (தாத்தா என்று கூப்பிடுவேன்) தினமும் செய்தித்தாள் படிக்க வேண்டும். ஆனால் அவருக்குக் கண்சரியாகத் தெரியாது. அதனால் என்னைப் படிக்கச் சொல்வார். நானும் வேகமாக ஓடிச் சென்று அய்யோ தாத்தா காத்துகிட்டிருப்பாரே என்று ஓடி பேப்பர் எடுத்து அத்தனை தலைப்புச் செய்திகளையும் வேகமாக வாசிப்பேன். அதிலிருந்து முக்கியமானவற்றை மட்டு,ம் படிக்கச் சொல்வார் தாத்தா.. அவர் கேட்பதை வேகவேகமாகப் படித்துவிட்டு(... அதற்குள் என் நண்பர்களெல்லாம் வெளியே எனக்காக காத்துக்கொண்டிருப்பார்கள்) விளையாட ஓடிவிடுவேன். இப்படி அந்தத் தாத்தா என்னை படிக்கச் சொல்லி படிக்கச் சொல்லி என் வாசிப்புத் திறமையை வளர்த்து விட்டாரோ என்று இன்றும் நினைப்பேன்.

குவைத்தில் நிறைய மேடைகள்.... என் கவிதைகள் கேட்க ஆர்வமாக இருப்பார்கள். குவைத்தில் பெரியார் நூலகப் பெரியவர் திரு. செல்லப் பெருமாள் அவர்களிடம் புத்தகங்கள் வாங்கிப் படிப்பேன். என் தமிழ் ஆர்வம் கண்டு அவர் என்னை இராவண காவியம் சொற்பொழிவு செய்ய கேட்டுக்கொண்டதின் பேரில் அப்பொறுப்பை ஏற்று செய்து கொண்டிருக்கிறேன். பெரியார் பன்னாட்டு மையத்தின் குவைத் கிளை செயலாளராகவும் “குவைத் தமிழ்” என்ற மாத இதழில் ஆசிரியராகவும் உள்ளேன்.

இப்போது இருக்கும் யாதுமானவள் தமிழிலக்கணம் பயில வேண்டுமென வற்புறுத்தியது புலவர். திரு. சூசை மைக்கேல். என்னுடைய மானசீக குரு. என்னுடைய தமிழ் ஆர்வம் கண்டு, (ஏறக்குறைய நானொரு தமிழ்ப்பித்து) இத்தனை ஆர்வமுள்ள ஒரு தமிழ்ப்பெண்ணை நான் கண்டதே இல்லை இதற்குமுன் என்று கூறுவார். கீற்று மூலம் தான் நாங்கள் அறிமுகம். இராவண காவியத்திலும் ஏதாவது சந்தேகம் இருந்தால் ஈ-மெயில் மூலம் தெரிவிப்பேன்.அழகான விளக்கங்களுடன் அதற்கு பதில் அனுப்புவார். அவரின் வழிகாட்டுதல்களையும் அறிவுரைகளையும் ஏற்றுதான் என் எழுத்துப்பயணம் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது - என் தந்தையின் ஆசியுடன்.


அன்புடன்,
யாதுமானவள்

திங்கள், 18 ஜூலை, 2011

என் பாடசாலை வாழ்க்கையில் பசுமை நினைவுகள்..

பாடசாலை வாழ்க்கையில் பசுமை நினைவுகள்:

நான் பள்ளியில் சேர்ந்த முறையை என் தந்தை இன்னும் சொல்லிச் சொல்லி பெருமைப் படுவார். எனக்கும் நியாபகம் இருக்கிறது. 

எனக்கு 3 வயது. என்னுடைய இரண்டு அக்காக்களும் பள்ளிக்குச் செல்லும் போது நானும் பள்ளிக்குச் செல்லவேண்டுமென்று அடம் பிடித்து அழுது அவர்கள் பின்னாலேயே ஒரு ஸ்லேட்டும் பலப்பமும் மஞ்சள் பையில் எடுத்துக்கொண்டு ஓடுவேன். எவ்வளவு தடுத்தாலும் என்னை நிறுத்தவே முடியாது. 

என் பெரியப்பா தான் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் என்பதால் என்னை வகுப்பறையில் சென்று உட்கார வைத்து விடுவார். நானும் அக்காக்களுடனே சேர்ந்து அ ஆ , 1, 2, (எண்ணும் எழுத்தும்) படிக்க ஆரம்பித்துவிட்டேன். சொல்லப்போனால் மற்ற குழன்தைகளை விட வேகமாக நான் தான் கற்றுக்கொள்வேன் என்று எல்லோரும் சொல்வார்கள். இப்படி அதீத ஆர்வம் படிப்பின் மேல் இருந்ததால்.... மூன்றரை வயதிலேயெ முதல் வகுப்பில் சேர்த்துவிட்டார்கள். 

என் தந்தை இன்னமும் பெருமைப்பட்டு எல்லோரிடமும் சொல்லும் ஒரு விஷயம்... லதா 2ஆம் வகுப்பு படிக்கும்போதே நியூஸ் பேப்பர் நல்லா வாசிப்பா… (நான் சந்தோஷப்படும்படி எத்தனையோ விருதுகள்(படிப்பிலும் விளையாட்டிலும்) வாங்கினாலும் இந்த வார்த்தைகளை இப்போதும் அப்பா சொல்லக் கேட்கும்போது ஏற்படும் சுகத்திற்கு ஈடாகாது))

படிப்பில் சுட்டியாக இருந்தேன். விளையாட்டில் படு சுட்டியாக இருந்தேன். அரட்டை அடிப்பதில் நான் தான் கிங்க் (குயின் இல்லை கிங்க்) எப்போதும் ஆண்பிள்ளைகளுடன் தான் விளையாடுவேன். அந்த ஆரம்பப் பள்ளியில் ஒரு பேரீச்சை மரம் இருக்கும். அதில் சீசன் நேரத்தில் பிஞ்சு விடும். துவர்ப்பாக இருக்கும் அந்தப் பிஞ்சு காய்களைப் பறித்து சாப்பிட காலையில் ஆசிரியர்கள் வருவதற்கு முன்பே ஓடி விடுவோம். அப்படியும் பியூன் எங்களைத் தடை செய்து விடுவார். மதியம் ஒரு ஆசிரியர் மட்டும் பள்ளியிலேயே சாப்பாடு கொண்டுவந்து சாப்பிட்டு உறங்குவார். அப்ப தான் எங்களுக்கு அந்தப் பேரீச்சை பறிக்க தோதான சமயம். 

சில நாள் என்னோடு சேர்ந்து உத்தமன், குமார் என்ற இரு பையங்களும் ஆசிரியர் குறட்டை விட ஆரம்பித்தவுடன் நைசாக அந்த அறையை வெளிப்பைக்கமாக பூட்டிவிட்டு ஓடிப்போய் பள்ளி வளாகத்தில் இருக்கும் பேரீச்சையை பறித்து சாப்பிடுவோம். திடீரென்று ஒரு நாள் ஆசிரியர் விழித்துக்கொண்டு அவரை அறையில் பூட்டியதை அறிந்து எங்கள் மூன்று பேரையும் பள்ளிவளாகத்திலிருந்த வேப்பமரத்தில் கட்டிவைத்தது ... இன்னும் என் தம்பி என் பிள்ளைகளிடம் சொல்லி சிரிப்பார்.

உயர்நிலைப் பள்ளியின் அரட்டை எழுத பக்கங்கள் நிறைய வேண்டும். இருன்தாலும் சில நிகழ்ச்சிகள் சொல்கிறேன்.

எங்கள் பள்ளியில் கி.இராமகிருட்டிணன் என்ற ஒரு தமிழாசான் இருந்தார். அவர் எனக்குக் கொடுத்த பட்டம் வாலு. அவருக்குத் தூய தமிழில் தான் பேச வேண்டும். தப்பித் தவறி ஒரு வார்த்தை ஆங்கிலத்தில் வந்துவிட்டால் நெற்றிக்கண்ணைத் திறந்துவிடுவார். சார் என்றும் சாக்பீஸ் என்றும் மாணவிகளின் வாயில் சரளமாக வந்துவிடும். அய்யா என்றுதான் கூப்பிட வேண்டும் .

பள்ளிக்குத் தாமதமாக வந்து அவரிடம் மாட்டிக்கொண்டு அழுத என் தோழிகள் இன்னும் நினைவிலிருக்கிறது.? காரணம்.. ஏன் தாமதமாக வந்தாய் என ஆசிரியர் கேட்க...பயத்தில் அவர்கள் உளர ஆரம்பித்துவிடுவார்கள். சார்... பெல் அடிச்ச உடனே காம்பௌன்ட் கேட் க்ளோஸ் பண்ணிட்டாங்க சார்... அவ்வளவுதான்...

கற்பனை பண்ணிப் பாருங்க...
பெல்... காம்பௌன்ட்,... கேட்... க்ளோஸ்... அவ்வளவுதான் அந்த பெண் அன்னைக்கு க்ளோஸ்....

கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க...அய்யா நான் வரும்போதே பள்ளியின் மணி அடித்து விட்டது. அதனால் மதிற்சுவர் கதவை தாழிட்டு விட்டார்கள். அதுதான் எனது தாமதத்திற்குக் காரணம் என்று ஒரு 7 ஆம் வகுப்பு மாணவியால் சொல்ல முடியுமா?

இப்படி இம்சை பண்ணும் அந்தத் தமிழாசிரியரை.... நான் கலாய்க்க ஆரம்பித்துவிடுவேன். திடேரென்று சந்தேகம் கேட்பென்... தலையிலிருந்து CLIP எடுத்து... அய்யா... இதை என்னவென்று சொல்வது தமிழில்? என்று கேட்பென்...

அடுத்த பெண்ணின் தலையிலிருந்து ரப்பர் பாண்ட் எடுத்து அய்யா இதற்ற்கு தமிழில் என்ன பெயர் என்று கேட்பென்... இப்படி நான் ஏடாகுடமாகக் கேள்விகள் கேட்டு தம்ழிகாசிரியரை பள்ளிக்கே அகராதி கொண்டுவர வைத்த பெருமையைப் பெற்றென்.... 

கிளிப் க்கு அவர் சொன்னது : கவ்வி, இரப்பர் க்கு... நெகிழ்பொருள்... சாக்பீஸ்க்கு : சுண்ணக்கட்டி.

யோசித்துப் பாருங்கள், என் தலையிலிருந்து நெகிழ்பொருள் அறுந்துவிட்டது என்று சொன்னால் எப்படி இருக்கும்? என் தலைமுடிக்கு ஒரு கவ்வி இடவேண்டும் என்றுதான் சொல்ல முடியுமா?

அடுத்து கஸ்தூரி என்ற ஆங்கில டீச்சர். இவரிடம் அடிவாங்காத ஒரே ஒரு மாணவி கூட இருக்க முடியாது. இவரும் இப்படித்தான் ஏடாகுடமாக கேள்விகள் கேட்டு பதில் சொல்லவில்லையென்றால் ஸ்கேல் கொண்டு அடிப்பார். 

பதில் தெரியவில்லையென்று எல்லோரும் அடி வாங்குவார்கள் . என் முறை வரும். நான் டக் என்று பதில் சொல்லி விடுவேன், பளீரென்று எனக்கு அடி விழும்..." எப்படிடீ எது கேட்டாலும் பதில் சொல்றெ?" னு கேட்டு பதில் சொன்னாலும் அடிப்பா....(என் அப்பாவிடம் டியூஷன் படிக்க பிள்ளைகள் வீட்டிற்கு வருவார்கள் நான் ஏழாவது படித்தாலும் எட்டு, ஒன்பது பத்தாவது பாடங்களில் அத்துப்படி. ஏனென்றால் அப்பா வீட்டில் பிள்ளைகளுக்கு நடத்துவதை பக்கத்திலிருந்து படித்துவிடுவேன். அதனால் என்பாட சம்மந்தமான கேள்விகள் எனக்கு வெகு சுலபம்)

ஆனால் என் பள்ளித் தலைமை ஆசிரியருக்கும் PT டீச்சருக்கும் நான் செல்லப்பிள்ளை. ஏன்னா... பள்ளி சார்பில் செல்லும் எல்லா விளையாட்டுப் போட்டிகளிலும் நான் ஜெயித்து விடுவேன். Zonal level, Distict level, state level nnu எங்க போனாலும் இந்த லதாராணி ஹீரோயின் ஆகிடுவா. அதுல எங்க ப்ரின்சிபால் ரொம்ப ரொம்ப பெருமை படுவாங்க. ஒரு முறை டிஸ்ட்ரிக்ட் லெவெல் அதெலெடிக் மீட்... அது வேலூர் கோட்டை மைதானத்தில் நடந்தது ... அதுல ஹெப்டத்லான் சாம்பியன் ஆனேன். மேடையிலே என்னை கட்டிபிடித்து என் ப்ரின்சிப்பால் ராஜேஸ்வரியம்மா எனக்கு முத்தம். கொடுத்தாங்க. என்னுடைய அம்மா எல்லாம் வந்திருந்தாங்க. ரொம்ப பெருமைப் பட்டாங்க. 
இப்படி கலாட்டக்களும் சந்தோஷங்களும் நிறைந்தது என் பள்ளி வாழ்க்கை.

ஒரு நெகிழ்ச்சியான சம்பவம். என்பள்ளியில் என்னுடைய வகுப்பிலேயே ஒரு தாழ்த்தப்பட்ட மாணவி(அப்பொல்லாம் அவங்க கிட்டே நட்போடு இருந்தா திட்டுவாங்க அது போல ஒருகால கட்டம்) ஸ்டெல்லான்னு பேரு. ரொம்ப ஏழை. ஆனா நல்லா படிப்பா... சாப்பாடு கொண்டு வரவே மாட்டா.. எங்க செட் ஒரு எட்டு பேர்..தினம் ஒன்றாகத்தான் மரத்தடியில் உட்கார்ந்து சாப்பிடுவோம். அவளையும் சேர்த்துக்கொண்டு. எல்ல்லோரும் நாங்கள் கொண்டு செல்லும் சாப்பாட்டில் கொஞ்சம் கொடுத்து எல்லோரும் பகிர்ந்து உண்போம். இது ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்புவரை ஒரு நாள் விடாமல் தொடர்ந்தது. ... நாங்கள் இதை எப்படி ஆரம்பித்தோம் என்று நினைவிலில்லை. இப்போது நினைத்தாலும் பெருமையாக இருக்கும். அறியாப் பருவத்திலேயே இப்படி ஒரு எண்ணம் இருந்தது நினைத்து))

அடுத்து கல்லூரி..
ஹப்பப்பா... கல்லூரியில் பண்ணின கலாட்டா.... அளவிட முடியாதது ...

கல்லூரிக்குப் போகும் நாட்களைவிட நான் விளையாட்டு கேம்ப் க்கு போன நாட்கள்தான் அதிகம். மாதத்தில் பாதி நாட்கள் ஏதாவது Tournament, கேம்ப் என்று சென்று விடுவேன். மீத நாட்களில் கல்லூரிக்கு வந்தால் முதல் Period முடிந்தவுடன் தியேட்டருக்குச் சென்றுவிடுவோம். 

என் அக்கௌன்ட்ஸ் மாம்.. பெயர் விமலா. ஒரு சாது... அவளுக்கு என்னைப் பார்த்தால் பயம். நான் இருந்தா சரியாவே பாடம் நடத்த மாட்டா. ஏதாவது கேள்வி கேட்பேன்.( பாதி நாட்கள் நான் கல்லூரியில் இல்லாததால் தனியாக நான் அக்கௌன்ட்ஸ் டியூஷன் படித்தேன். அதனால் ...இவள் நடத்துவதற்கு முன்பே படித்துவிட்டிருப்பேன். கேள்வி கேட்பது சுலபம் ) கேள்வி கேட்டா கிளாஸ் ரூம் விட்டு போய்டுவா... 

அதுக்கப்புறம் டேபிள் மேலே ஏறி பாட்டு டான் ஸ்னு ஆட.. பக்கத்து க்ளால் ல இருந்து Complaint ப்ரின்சிபால் க்கு போகும். அவங்களும் சொல்லுவாங்க... லதா தானே.. பரவால்ல விடுங்க... ஏன்னா சென்னை யுனிவர்சிடியில நீச்சலில் முதலாவதாக வந்து எங்க காலேஜ்க்காக தங்க மெடல் வாங்கின முதல் பெண் நான். அதனால இங்கயும் அதே செல்லம். ரன்னிங், லாங் ஜம்ப் ஹைஜம்ப் என்று எல்லாவற்றிலும் கண்ண்டிப்பாக பரசு தட்டிக்கொண்டுதான் வருவேன் எங்கு சென்றாலும் . அதே போல... இன்டெர் College Hokey ல வேலூர் அக்ஸீலியம் காலேஜ் க்கு எதிரா நாங்க ஒன்பது கோல் அவங்க ஸீரோ... அதுல தொடர்ந்து மூனு கோல் போட்டு ஹாட்ரிக் அடிச்சு அந்த மாட்ச்ல மட்டும் அம்மனி 5 கோல் போட்டேன்... சோ.. லதா என்ன பன்னாலும் எங்க ப்ரின்சிபால் கண்டுக்கவே மாட்டாங்க...

நான் கேம்ப் முடிச்சுட்டு காலேஜ் வந்தவுடனே ப்ரென்ட்ஸ் சொல்லுவாளுங்க..."நீ இல்லாம விமலாக்கு ரொம்ப குளிர் விட்டுப்போச்சுடீன்னு (அதாங்க எங்க அக்கௌன்ட்ஸ் மேடம்)

சில பொண்ணுங்க சொல்லுவாளுங்க... சீ பாவம்டீ விமலா... இத்தனை நாளா சந்தோஷமா இருந்தா.. "

காலேஜ் டே ஹாஸ்டல் டே வந்துட்டதுன்னாலும் அந்த ஸ்டேஜ் நம்மோடதுதான். (நான் வீட்டிலிருந்துதான் காலேஜுக்குச் செல்வேன். இருந்தாலும் வார இறுதிகளில் விடியற்காலை விளையாட்டுப் பயிற்சி இருக்கும் அதனால் வார இறுதிகளில் ஹாஸ்டலில் தங்கிவிட்டு பயிற்சி முடித்துவிட்டு வீட்டுக்குச் செல்வேன்) அதனால் விடுதியும் நம் வசம். 

பொதுவாக, விழாக்களுக்கு வரும் சீப் கெஸ்ட் எல்லோருடைய பேச்சும்முடிந்தபின் இரண்டு மூன்று டாண்ஸ் பார்த்துவிட்டு சென்றுவிடுவார்கள். அதற்குப்பின்னும் விழா தொடருமல்லவா? அப்போது யார் ஆடினாலும் அது எந்த பாடலானாலும் நான் ஏறி ஆடுவேன். 

ஒருமுறை குரூப் டாண்ஸ் ஆடுவதற்க்கு ஆரம்பித்தார்கள். அதில் இரண்டு பெண்களைத்தவிர மற்றவர்கள் நிகழ்ச்சிக்காக அப்பொதுதான் கற்றுக்கொண்டு ஆடுகிறார்கள். நடனம் ஆரம்பித்த சில நொடிகளில் நான் மேடையில் தோன்றி ஆட ஆரம்பிக்க... கல்லூரி மாணவிகள் எல்லாம் ஒரே கைத்தட்டல் ஆரவாரம்.... நான் கண்ணா பின்னாவென்று ஆடுகிறேன்... புதிய அன்த நான்கு பெண்கள் டாண்ஸ் ஸ்டெப் மறந்துவிட்டு திரு திரு வென்று முழித்துக்கொண்டு அப்படியே நிற்கிறார்கள்...அப்படி ஒரு கலாட்டா...

அதில் என்ன கொடுமைன்னா ... அந்த நடனம் முடிந்தப்புறம்... ONCE MORE லதா ONCE MORE லதான்னு ஒரே கூப்பாடு போட்டு ஆர்ப்பாட்டம் பண்ணுவாளுங்க என் தோழிகளெல்லாம்....

ஹாஸ்டல் டே லயும் அப்படித்தான் பிரின்சிபால் சென்றுவிட்ட பின் இதே போல் தான் மேடை எனக்குச் சொந்தமாகிவிடும். எங்க ப்ரொபசர்ஸ் லெக்சரர்ஸ் எல்லாம் சில நடனத்தை ONCE MORE கேக்க கேக்க களைத்து கீழே விழும் அளவுக்கு தொடர்ந்து ஆடிகிட்டே இருப்பேன்.

சினிமா தியேட்டருக்கு போவோமே அங்கயாவது சும்மா இருப்போமா? அதுவும் இல்லை. தியேட்டர்ல எப்பவுமே நாங்க டிக்கட் வாங்க கவுண்டர்ல போய் நின்னதா சரித்திரமே இல்லை. எங்க காங்க் (Gang) பார்த்தா... உடனே எத்தனை பேர்ன்னு எண்ணிகிட்டு அவனே எங்களுக்கு டிக்கெட் தியேட்டருக்குள்ள வந்து தந்துடுவான். 

ஏன்னா நாங்க அதுக்குமுன்னாடியே போய் உக்கார்ந்துடுவோம். தியேட்டர்ல அன்னைக்கு படம் பாக்க வந்தவங்க... எந்த சனியன் முகத்துல முழிச்சமோ தெரியலே... இன்னைக்குன்னு படம் பாக்க வந்திருக்கோமேன்னு அவங்களை அவங்களே திட்டிக்கற அளவுக்கு அப்படி ஒரு கலாட்டா பண்ணுவோம். எங்களை மீறி எங்களை சுத்தி உள்ளவங்க ஒரே ஒரு டயலாக் கூட கேட்டுடக் கூடாது... அப்படி பண்ணுவோம். அதுல ரொம்ப கவனமா செயல் படுவோம்.

இப்போ வந்த சண்டைக்கோழி பார்த்துட்டு ஒரு பிரண்ட் இந்தியால இருந்து போன் பண்ணி சொல்றான்... லதா நீ பண்ணின கலாட்டா மாதிரியே இந்தப் படத்துல மீரா ஜாஸ்மின் பண்றா...உன் நியாபகம் தான் அந்தப் படம் பார்க்கும்போதுன்னு சொன்னான். எங்க அம்மாவே எனக்கு போன் பண்ணி சொன்னாங்க...அந்த படம் பாரும்மா உன்ன மாதிரியே கலாட்டா பண்ணுது அந்த பொண்ணு -னு)

ஒரு முறை சின்னத்தம்பி பெரியத்தம்பி படம் பார்க்க இப்படித்தான் லதா& Co, (இது எங்க விமலா Miss வச்சது.. எங்க காங்கை(Gang) இப்படித்தான் கூப்பிடுவா)

ரொம்ப சீரியஸ் சீன்லல்லாம் கொல்லுன்னு சிரிப்போம். தியேட்டர்ல எக்ஸ்ட்ரா சீட் போட்டு உக்காந்து பார்க்கறாங்க அந்த அளவுக்கு ரஷ். நாங்க தொடர்ந்து சிரிக்க சிரிக்க ஒரு ஆளுக்கு பயங்கர கோவம் வந்து அந்த போல்டிங்(Folding CHAIR) சேரை அப்படியே தூக்கி எங்களை அடிக்க வந்துட்டான். "பொண்ணுங்களையா பெத்திருக்காங்க சரியான தருதலைங்களாஇப் பெத்து போட்டு நம்ம உயிரவாங்கறாங்கன்னு" அன்னைக்கு எங்க அப்பா அம்மாவையெல்லாம் திட்டினான் அவன். .

இன்னோரு தியேட்டருல... எங்க காலேஜுக்கு எதிர்ல ஒரு IIT இருக்கும். அங்க இருக்கற ஒரு பாய்ஸ் டீம்..எப்பவும் எங்களுக்குள்ள சண்டை வரும்...அவனுங்க எங்க பின் சீட்ல லைன்னா உக்கார்ந்து சிகெரெட் பிடிக்க ஆரம்பிக்க ...எனக்கு சுர்ர்ர்ர்ர்.... ரெண்டு மூனு முறை சொல்லி பார்த்தோம் நிறுத்த சொல்லி .. வேணுமின்னே பண்ணவும் நான் திடீர்னு எழுந்து... ரெண்டு பையன் வாயில இருந்த சிகரெட்டை வெடுக்குன்னு பிடுங்கி வீசி எறிஞ்சுட்டேன்... சண்டை ஆரம்பம்... பப்ளிக் எங்களுக்குத்தான் சப்போர்ட்...

படம் முடிஞ்சி வெளிய போறோம்... வாலாஜா பேட்டை ரௌடிங்களை கூட்டிகிட்டு பத்து பதினஞ்சு பேர் பைக் ஸ்கூட்டர்ன்னு நின்னுகிட்டிருக்கனுங்க... அப்புறம் ஒருவழியா தப்பிச்சோம் அது வேற கதை..

இப்படி கலாட்ட நிறைய நிறைய பண்ணி இருந்தாலும்....இங்கேயும் எங்களுக்கு மனம் திருப்தியான ஒரு விஷயம் செஞ்சிருக்கோம். 

எங்கள் கூட படித்த ஒரு ஏழைப் பெண் . திடீரென்று பார்வை மிக மிக மோசமாக பாதிக்கப்பட்டாள். நாங்க எல்லாரும் எப்பொல்லம் முடியுதோ அப்பொல்லாம் பணம் சேர்த்து வச்சு...தொடர்ந்து செக் அப் க்கு அழைத்துச் சென்று அவளுக்கு கண் ஆபரேஷன் செய்து கண்ணாடி வாங்கி போட்டொம். அவங்க அம்மா ஆஸ்பத்திரியிலே எங்க கைய பிடிசுக்கிட்டு அழுதுகிட்டே எங்களை ஆசீர்வாதம் பண்ணினது அப்படியே என் கண்ணுக்குள்ள இன்னும் இருக்கு.
இப்படி இன்னும் இன்னும் நிறைய ... ஒவ்வொரு நாளும் பசுமையாக நினைவில் ஓடிக்கொண்டே இருக்கிறது....

இங்கு அதில் சிலவற்றை நினைத்துப் பதிய வைப்பதில்   மகிழ்கிறேன்

செவ்வாய், 10 மே, 2011

மாய்ந்து மாய்ந்து தும்மிக்கொண்டிருக்கும் மஞ்சுபஷினி என்கிற நளினி சம்பத்

நேற்றைய என் திரிக்கு பாவம் எதிர்பார்த்த அளவு ஈ-கரையிலிருந்து எந்த எதிர்ப்புகளும் வராததினால் கலை அவர்கள் கண்ணீர்விட்டு அனுதாபம் தேடிக்கொள்ள அதைக்கண்டு  மூக்கு சிந்தாத குறையாக மஞ்சுபாஷினி என்ற நளினி  சம்பத் அழுது அழுது எழுதிக்கொண்டிருக்கிறார். 

காலையில் சென்றுவிட்ட கலை மாலையில் திரும்பி வந்து பார்க்கிறார்... ஏகப்பட்ட ஆதரவு தனக்கும் எக்கச்சக்கமான எதிர்ப்பு லதாராணிக்கும் இருக்கப் போகிறதென்று  வந்து பார்த்தவருக்கு அதிர்ச்சி... அங்கே நான் சொன்ன அந்த நாலுபேரைத் தவிர மற்றவர்கள்  "மூச்". அப்போதுதான் புரிகிறது கலை அவர்களுக்கு. ஆஹா...  நம்மை மற்றவர்களும் புறமொதுக்குகிறார்கள் என்பதை புரிந்து கொண்டு.... "யாருமே எனக்கு ஆதரவளிக்கவில்லையே இதனால் எனக்கு வருத்தமில்லை" என வருத்தப்பட்டு  கண்ணீர் வெள்ளம் பாய்ச்ச.... அந்த ஈரம் பட்ட ஜலதோஷத்தில் தான் மஞ்சு அங்கே இன்னமும் தும்மிக் கொண்டிருக்கிறார்.

இப்படி ஒரு அனுதாப அலை அங்கு ஏற்படுமென்று நானும் கனவிலும் நினைக்கவில்லை. அடேங்கப்பா   ... 1000  பேர்களுக்கு மேல் படித்துவிட்ட திரியில் வெறும் 4  பேர் மட்டுமே மாற்றி மாற்றி எனக்கு எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டிருக்கும்போது பாவம் அதை உணர்ந்த கலை கூட      கையெடுத்துக் கும்பிட்டுவிட்டார் இனி யாரும் எனக்கு ஆதரவாக அனுதாபப் படவேண்டாம் என்று. ஆனால் விடுவாரா மஞ்சு பாஷிணி..  காலையில் பதிவிட்ட திரிக்கு யாருமே   எதிர்ப்பு  தெரிவிக்க   வில்லையே 
எனப் புரிந்த பின்னர்  கண்ணீர் கொப்புளித்து கரைபுரண்டோட எனக்கு பதில் கொடுப்பதாக நினைத்துக்கொண்டு கலையை மறைமுகமாகத் தாக்கி  நான் எழுதியதை விட அதிகமாக அவரின் நிலையைக் குலையச்
செய்துகொண்டிருக்கிறார்.  எத்தனை  நாள்  ஆதங்கமோ  என்புண்ணியத்தில்
 தீர்த்துக்கொண்டிருக்கிறார்.   எத்தனை பேருக்குத்தான் புரியப்போகிறதோ இதுவும்?  இப்படியானது இன்றைய நிலை.

இப்படி மஞ்சுவின் அன்பான தும்மலில்  வெளியேறப்போகும் கிருமி இன்னும் எத்தனை நிர்வாகிகளை அங்கு தும்மச் செய்யப் போகிறதென்று நாளை பார்க்கிறேன். இபபோது நேரமாகிவிட்டது. இந்த நாடகத்தை
பார்த்துக்கொண்டிருந்தால் எனக்கு காலவிரயம் ஆகுமாதலால் .. அடுத்த எபிசொட் நாளைக்குப் பார்க்கிறேன். இப்போதைக்கு the  end .


(மறக்காம நாளைக்கு mask  போட்டுக்கிட்டு தான் அந்தப்பக்கம் போகணும் எனக்கு ஈரம் ஆகாதுப்பா .... தோஷம் தாங்கும். அதாங்க ஜல தோஷம்.... அவ்ளோ ஈரமாம் அங்க)


"இங்க  எனக்குப்  புரியாத  ஒரு  விஷயம்  என்னான்னா.... நான் கலைங்கற   அந்த அடாவடித்தன ஆளுக்கு எழுதின போஸ்டிங் க்கு நளினிக்கு  ஏன் இவ்ளோ கோவம் வருதுங்கரதுதான். பனைமரத்துக்கு தேள் கொட்டினா இங்கயேன் நெறிகட்டுதுங்கறது புரியாத புதிரா இருக்கு. அங்க எத்தனையோ உறுப்பினர்களும் நிர்வாகிகளும் படிச்சு அமைதியா இருக்கும்போது இந்தம்மா ஏன் இப்படி வார்த்தைக்கு வார்த்தை Red  Font  ல போட்டு    என்னை தாக்கறாங்களோ தெரியலியே... என்னை தாக்கவேண்டிய அவசியம் இவளுக்கு ஏன் வந்ததுன்னு இன்னும் என்மண்டையை  கிளறிகிட்டிருக்கேன். என்ன கண்றாவியோ..... யாமறியேன் பராபரமே! இதுக்காக   காலைல என் போன் நம்பர் வேறு ஒருத்தர்கிட்டே இருந்து வாங்கி கலைக்கு வக்காலத்து வாங்க என்கிட்டே பேசி இருக்காங்க.

ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன். நான் 2 ,3  ID ல வந்தது பெரிய குற்றம் போலவும் அதனால்  ஏதோ என்னோட பண்பாட்டுக்கு / தமிழர்
பண்பாட்டுக்கு இதனால்   இழுக்கு வந்துட்டதுபோலவும் ஆதிராவும், மஞ்சுபாஷினியும் மாத்தி மாத்தி பேசிகிட்டிருக்காங்க. 

லதாராணிங்கற ஒரிஜினல் பேரை மறைச்சு ஈ-கரைல உலாவந்தேனாம்.
கணினியில் 2003லிருந்து யாதுமானவள்ங்கற  பேர்ல  எழுதிகிட்டிருக்கேன். காலைல போன்ல பேசும்போதுகூட என் ப்ளாக் படிச்சுட்டு உங்க 
குழந்தைங்களப் பத்தி ரொம்ப நல்லா  எழுதி இருக்கீங்கன்னு பாராட்டி பேசறவங்க... என்னைப்பற்றி ன்னு என் ப்ளாக்ல யாதுமானவள் என்கிற  என்புனைப்பெயர் குறிப்பிட்டத
பாக்காமலா என் ப்ளொக்ஸ் படிச்சுகிட்டிருக்காங்க?
சரி அப்படியே வச்சுக்குவோம்.  . மஞ்சு பாஷிணி ங்கற பேரே ஒரு பொய்  பேர்தான். 

அந்தமாவோட உண்மையான பேர் நளினி. இந்தம்மா வேற பேர்ல வரும்போது தமிழர் பண்பாடு பவித்ரமா அப்படியே இருக்காமே  இது எப்படின்னுதான் எனக்கும் புரியலே.

ஒரு கருத்தை சொல்லனும்னு முடிவு பண்ணிட்டா  எவ்ளோ தடை வந்தாலும் நம்ம குறிக்கோளை விட்டுடக்கூடாதுன்னு அவங்களுக்குத் தெரியலே.

நம்ம நடிகை வேள்  MR ராதா இருந்தாரே அவர்  நம்மளை மாதிரிதான் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு தான்.  "கீமாயணம்னு" ஒரு நாடகம் போட்டார். அதை பார்த்துட்டு  ஆய்  ஊய் ன்னு அப்போ ஒரே கூப்பாடு போட்டுக்கிட்டு ஒரு கூட்டம் அலைய அந்த நாடகத்தை தடை செஞ்சுடுச்சி நம்ம கவர்மென்ட்.

விடுவாரா நம்ம ஆளு... அந்த பேர்லதானே போடக்கூடாதுன்னு உடனே "கீமாயணம்" ங்கற    பேரை "வரலாறு" ன்னு வச்சு அதே நாடகத்தை
அடுத்தநாள் போட்டாரு. கூட்டம் அலை மோதுது.

அதுக்கும் தடை... இந்த பேர் கொண்ட நாடகமும் தடை செய்யபபடுகிறதுன்னு கவர்மென்ட் தடை போடுது.  ஆனா  தடை போட போட  இவரும் தினம்  ஒருபேரா choose  பண்ணி  பேரை மட்டும்
மாத்திகிட்டு அதே நாடகத்தை 40  முறைக்கும் மேல ஒரே மாசம் போட்டிருக்கருன்னா பார்த்துக்கோங்க.

எடுத்த காரியத்தை எப்பாடுபட்டாவது முடிக்கணும்னு ஒரு குறிக்கோள் கொண்டிருந்தாருன்னுதானே அர்த்தம்.

அப்படித்தான் லதாராணியும் கவிதாவாகி யாதுமானவளாகி கலையின் கொட்டத்தை அடக்க பல அவதாரங்கள் எடுக்க வேண்டியதாகிடுச்சி.

இவ்ளோ கஷ்டப்பட்ட எனக்கு சபாஷ் சொல்ல ஈ-கரையில இன்னைக்கு அமைதியா படிச்சுட்டு போன அத்தனை பேருக்கும் என் மனமார்ந்த நன்றி. மௌனம் என்பது வேதம் னு சொல்வாங்க. இன்றைய ஈ-கரை உறுப்பினர்களின் மௌனம் அங்க எல்லோருக்கும் புரிஞ்சுபோக எல்லோரும் சொல்றாங்க இந்த "வேதம் புதிது" ன்னு. .

சரி இன்னைக்கு இவ்ளோதான்... மீதி நாளைக்கு.

 

திங்கள், 9 மே, 2011

இப்படி ஒரு அனுபவம்

ஈகரை என்ற இனிய தளத்தின் இன்றைய நிலைமை குறித்து ஒரு கண்ணோட்டம் :
உறுப்பினராகத் தேவையான தகுதிகள்:
முதல் தகுதியாக கைதட்டத் தெரிந்திருக்க வேண்டும்
நீ முட்டாள் என்று கலை சொன்னால்... ஆமாம் தலை என்று தலை ஆட்டவும் தெரிந்திருக்க வேண்டும்.
அரைவேக்காட்டுத் தலைமைக்கு அடிபணிந்து நடக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
இம்முன்று தகுதிகளும் இருந்தால் போதும் நீங்கள் ஈகரையின் உறுப்பினர்.

தலைமை நடத்துனர் மற்றும் நிர்வாகிகளின் வேலை:
பிரச்சனைகளைத்  தொடங்கி வைப்பவர் எல்லாத் திரிகளிலும் தலைமை நடத்துனர் கலையாகவே இருப்பார். இதுவே அவரின் முதன்மைப் பணி.. இது ஈகரைக்குப் பிடித்த பிணி அல்லது சனி (படிப்பவர்களின் சாய்ஸ் எதைவேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்)
கலை இல்லாத தருணத்தில் அந்தப் பொறுப்பு  சுத்த அறிவு சுதாவைச் சேரும்.  என்ன எழுதுவது என்பதே தெரியாமல் ஏதாவது ஒன்றை உளறிக் கொட்டி அத்திரியின் பாதையை மாற்றி   அலங்கோலமாக்கும்  வித்தை ஒன்றைமட்டுமே அறிந்தவர். ஏனென்றால் அறிவுக்கும் இவருக்கும் சம்மந்தம் இல்லை.
அடுத்து, யாராவது ஒரு அறிவு சார்ந்த பதிவோ அல்லது  இடுகையோ இட்டால் அது கலைக்குப் பிடிக்காது.  ஏனென்றால் அப்பதிவையோ அல்லது பினூட்ட த்தையோ  ரசித்தோ புகழ்ந்தோ யாராவது எழுதிவிட்டால் அங்கு கலைக்கு B +ve கொதிக்கத் தொடங்கிவிடும். என்னைப் புகழாமல் யாரயோ புகழ்கிறார்களே என்ற பொறாமை தலைவிரித்தாடும். ஏனென்றால் விவரமும் தெரியாது விவாதிக்கவும் தெரியாது. உடனே  அந்த பின்னூட்டத்தைத் திருத்திக்கொள்ளச் செய்வார். மறுத்தால் அவர்களுக்கு எச்சரிக்கைப் புள்ளியும் அதைத் தொடர்ந்து உறுப்பினரிலிருந்து வெளியேற்றமும் நடக்கும்.
இங்கு ஒரு சூட்சுமம் கவனிக்க வேண்டும் அதாவது, அந்த எச்சரிக்கை குறிப்பிட்ட நபருக்கல்ல... மற்றவர்களுக்கு, அப்போது தானே ஐயோ கலையை எதிர்த்து ஒருவார்த்தை பேசிவிட்டல்  என்னையும்  எங்கே வெளியேற்றி விடுவற்காகளோ என்று பயந்து யாரும் இவருக்கு எதிராகப் பேச மாட்டார்கள்.
ஆசிரியர் கொம்பெடுத்தால் ஒண்ணாம் கிளாஸ் மாணவன் பயப்படுவான் . ஒன்றுமறியாதவன் எடுக்கும் கொம்புகண்டு குரங்குகளல்லவா ஆடும். இப்படி  ஆடிக்கொண்டிருப்பவர்கள் தான் கலைக்கு வேண்டும்.
இவர் எழுதும் வெண்பாக்களுக்கு அர்த்தம் புரியவில்லையென்றாலும் அருமை என்று சொல்லி கைதட்ட வேண்டும்..... கவிவேந்தே கலைவேந்தே என வேந்த வேண்டும். இவரைச் சுற்றி இவர் இடுகைகளுக்கு எல்லோரும் கும்மியடிக்கவேண்டும் அதாவது கைதட்டவேண்டும் பாவம் இதுவரை இவர் வெண்பாக்களுக்கு நான் கை தட்டவில்லை என்ற ஆதங்கம் தான் நேற்று எனக்கு எச்சரிக்கைப் புள்ளி கொடுக்கவைத்தது இவரை.  என்ன செய்வது நான் கைதட்டுமளவிற்கு இவரின் கவிதைகள் இன்னும் உயரவில்லை என்பதை இன்னும் இவர் உணரவில்லையே என்பதுதான் இவர்மீது எனக்கேற்படும் தற்போதைய அனுதாபம்.
இரண்டடி திருக்குறளின் இரண்டு வார்தை சொல்லிவிட்டு மூன்று முற்றுப்புள்ளி தொடர்ந்து வைத்துவிட்டு உலகதத்துவத்தை வெளிப்படுத்திவிட்டதாக ஒரு நக்கல் சிரிப்பு சிரிப்பார். இதையும் தம்ஸ் அப் விளம்பரம் செய்வதுபோல் சில நடத்துனர்கள் ஐகான் போட்டு தங்கள் தரத்தினையும் குறைத்துக்கொள்வர்.
வரலாறு வரலாகாது என்று... இவரிடம் அது வரலாகதென இவரே ஒத்துக்கொண்டவர். வரலாறு மட்டுமல்ல,.... விவாதங்கள் கூட வரவில்லையே என்ற ஆதங்கம் கொண்டவர்
உறவுகள் தவறிய/சிதற விட்ட/ மறந்துவிட்ட கண்ணியமும் சொல்லொழுக்கமும் அங்கே எடுத்துரைக்க வேண்டி வருகிறது. அதன் பேரில் சிறு காரசாரமான விவாத நிலை ஏற்படும் நிலை வருகிறது.
எனவே என் அருமை உறவுகளுக்கு என் அன்பான வேண்டுகோள் என்ன என்றால் எங்கு வாக்குவாதம் மிகுந்தாலும் யாரவது ஒருவர் அலல்து இருவருமே அதனை நிர்வாகிகள் பார்வைக்கு கொணர்ந்துவிட்டு அமைதியாகி விடுவது சாலச்சிறந்ததாகும். – என்று கூறிய இவர்
பிரச்சனைகளின் ஆணிவேரே இவர்தான் என்பதை மறந்துவிட்டு ...மேற்கண்டவாறு அறிக்கை விடுவார். அதையும் ரசித்து இரண்டு கையையும் மேலே தூக்கி கும்பிடு பொட்டு வழிமொழியும் கூட்டமும் இங்கு உண்டு,.
எப்போதும் ஈகரையில் இன்னொரு விஷயமும் நடக்கும்.  கடவுள் இல்லை என யாராவது கூறிவிட்டால்.... எல்லோரும் ஏவுகணைகளைத் தொடுத்துவிடுகிறார்கள்.  உடனே எச்சரிக்கைப் புள்ளி வழங்கப்பட்டு சிலநேரத்தில் உறுப்பினர் நீக்கப்பட்டும் விடுகிறார்கள். ஆனால் நேற்றைய ஒரு பின்னூட்டத்தில்
Re: கல்கி போட்டோவில் இருந்து தேன், விபூதி கொட்டியதாக திருவண்ணாமலையில் பரபரப்பு
 -by கலைவேந்தன் Today at 12:56 pm
இன்னுமா கல்கியை நம்பறாங்க...?
இப்படி இவர் முட்டிக்கொண்டால் இவர்தலை புண்படுமென்பதைப்பற்றி எமக்குக் கவலையில்லை ஆனால் கல்கி பகவானை வழிபடுபவர்கள் மனது புண்படாதா? இதையே இவரைத்தவிர வேறு யாராவது எழுதியிருந்தால் .முட்டியிருந்தால்... அடுத்தவர் மனதைப் புண்படுத்தும்... அது...இது........ உடம்பில் ஏற்பட்ட வேதியல் மாற்றம் பின்னூட்டமாக குமட்டுமளவிற்கு வெளியில்  வரும்...இப்படி முட்டும் இவருக்கு யார் சாட்டை கொடுப்பது?
சரியாகவே எழுதினார் பிஜிராமன்.// அரி இருக்கலாம் நரி இருக்கக்கூடாதென்று//
ஈகரை அரியாசனத்தில் ஒரு நரி இருப்பதைத்தான் மறைமுகமாக எழுதினாரோ என்று எண்ணத்தோன்றுகிறது. அந்தக் கவிதைக்காக பிஜி ராமனுக்கு இப்போது என்சார்பில் ஒரு சபாஷ்.
ஏதோ இந்தப் புண்ணியவான் இருக்கும்வரையில் அன்பாக கைதட்ட மஞ்சுபாஷினியும், அதற்கு ஒத்து ஊத அவர் தம்பி மனைவியும் இன்னும் பலரும் ஈகரையின் இரண்டு கரையிலும் நின்றுகொண்டு யாரும் உள்வராமல் தடுக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபடுவார்கள் என்பதை ஈகரை உறுப்பினர்களுக்குக் கலை அறிவித்துக்கொண்டிருக்கிறார்.
இதைப் படித்துக்கொண்டிருக்கும்போதே கலையின் B+ve Negative ஆக மாறிவிடுமாதலால்.... மூளையின் செயல்திறன் குறைந்து இந்த உறுப்பினர் நம் தளத்திற்குத் தேவையில்லை என்ற முடிவெடுப்பாரே தவிர இவர் ஏன் இப்படி எழுதியுள்ளார். இதில் நம் தவறு என்ன வென்று அலசிப்பார்க்கும் பக்குவமோ மனநிலையோ வராதென்பது சர்வநிச்சயம். உடனே என் உறுப்பினர் பதவியைப் பறித்துவிடுவார்.  மற்றும் இந்தத் திரி இப்போதே நீக்கப்பட்டுவிடும்.  இதை அனைவரையும் படிக்க விடலாமே என்ற மனோதைரியம் கூட இல்லாதவர் என்பதை நானறிவேன் என்னைப்போல் ஈகரை உறுப்பினர்களும் நன்கு அறிவர்
என்னமோ இவர் பாரதப் பிரதமர் பதவியிலிருந்து இந்தியாவை ஆண்டுகொண்டிருக்கும் நினைப்பில் இப்படி என் உறுப்பினர் பதவியை எடுத்தால்  நானும் என்னமோ எனக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோய் விட்டது போ ல அலறித்துடிப்பேன் என்று நினைத்து இந்த முடிவு எடுப்பார். எனென்றால் இதைத் தவிர வேரொன்றும் அறியார் பாவம். இப்படி இவர் தயவால் ஈகரையிலிருந்த உறவுகள் அளவுக்கதிகமாக வெளியேறி ஈகரை வெளிறியிருப்பது இத்தளத்தின் நெடுநாளைய உறுப்பினர்கள் நன்கு  அறிவர்.
இவர் தலைமை வழி நடத்துபவர் அல்ல..  உறுப்பினர்களை வழியனுப்புபுவர்.
“இதனை இதனால் இவன்முடிப்பான் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.”- குறள் (படித்திருந்தாலோ படித்துப் புரிந்திருந்தாலோ ஒருவர் தம் தகுதியை அறிந்து நடப்பர். எத்தனைபேருக்கு இதன் அர்த்தம் புரிந்ததோ பராபரமே - ஈகரையை முடிக்கவேண்டுமென்று அர்த்தம் புரிந்தனரோ?)
தரமறிந்து தக்கவர்க்குத் தக்கபதவி கொடுத்தால் தக்கவாறு வழி நடத்திச் செல்வர். தரமில்லதவர்க்குத் தலைமைப்பதவி கிட்டிடின் இப்படித்தான் நடக்குமென்பதற்க்குத் “தலை” யான கலையின் கடந்த கால பின்னூட்டங்களைப் படித்தவர்களுக்குப் புரியும்.
எனவே. தரமற்ற ஒரு தலைமையின் கீழ் ஈகரையின் ஒரு உறுப்பினராகத் தொடரும் விருப்பம் எனக்கில்லை ஆதலால்... இக்கறை துடைக்கப்படும் வரை ஈகரையிலிருந்து நான் விலகி இருக்கிறேன் என்பதை சக ஈகரை உறுப்பினர்களுக்கு அக்கரையுடன் அறியத்தருகிறேன்.
“அரி இருக்கலாம் நரி இருக்கக் கூடாது”

ஞாயிறு, 8 மே, 2011

அன்பா சொல்லட்டுமா?

நான் இன்னைக்கு இங்க அன்பா ஒரு விஷயம் சொல்லப்போறேன். அது என்னங்க அன்பா சொல்றதுன்னு கேக்கறீங்களா... அப்படியே அவசரப் படாம படிச்சிட்டே வந்தீங்கன்னா.. அன்புகுக்கு அர்த்தம் தெரிஞ்சிடும். சரியா? 


இது  என்ன  இது  புது  effect ?  அட ஒண்ணுமில்லங்க  சும்மா பொழுது போகலன்னு சிலநாள் ஒருகரையோரமா நடந்து போய்க்கிட்டிருக்கும்போது
அங்க அன்பு அன்புன்னு ஒரே சத்த்தம் கேட்டுகிட்டிருந்ததை கேட்டு அது என்னதான்னு தெரிஞ்சுசுக்க போய் நின்னு வேடிக்கை பார்த்து  ஒண்ணுமே புரியாம நான் குழம்பிபோன விஷயத்தைதான்  இன்னைக்கு  இங்க  
உங்களுக்கு  அன்பா  சொல்லப்போறேன்.

ஏன்னா... அன்புன்னா affection , கருணை  ன்னு எனக்குத் தெரியும்... அன்பா பேசறது அன்பா உபசரிக்கறது அன்பா பார்த்துக்கறது அன்பை பரிமாறிக்கறதுன்னு நானும் எவ்வளோ படிச்சிருக்கேன் எழுதி இருக்கேன்  . ஆனா இந்த அன்பா கைதட்டறது அன்பா திட்டறது அன்பா வாழத்தறது  அன்பா  
பதிவிடறது  அன்பாசண்டை போடறது அன்பா இருமறது அன்பா தும்மறது 
அன்பா மூக்கு சிந்தறது  அன்பா அழறது ன்னு ஏகப்பட்ட episode  பார்த்துட்டு...
இன்னும் குழப்பத்துல அன்புக்கு என்ன அர்த்தம்னு தெரியாம  முழிசுகிட்டிருக்கேங்க.  யாராவது அன்புக்கு ஒழுங்கான அர்த்தம் தெரிஞ்சா  அன்பா சொல்லுங்க சரியா?

சரி இதை விடுங்க... நேத்து அத்தனை ஆர்ப்பாட்டத்துக்கப்புறம், மஞ்சு நாசினி அம்மா என்னமோ என்கிட்டே வருஷக்கணக்கா பழகி நாங்க ரெண்டுபேரும் நகமும் சதையுமா  ஒட்டி உறவாடிகிட்டிருந்தா மாதிரி என்னை இவங்களுக்கு  ரொம்ப நல்லா  தெரிஞ்ச மாதிரி ஈ கரைல ஒரே பில்டப் கொடுத்து ஓண்ணு கூப்பாடு  போட்ட  சத்தம் கேட்டுஅங்க கொஞ்சம் எட்டிப்பாத்தா.... அதான்....தும்மலால் பரவிய கிருமிகள் தொத்திக்காம இருக்க mask  எடுத்துகிட்டுதான் போனேன்... லதா லதா லதான்னுஒரு 100  லதா சொல்லி  எனக்கு அந்தம்மா அட்வைஸ் கொடுக்கறாங்களாம். அடடா..... 

விஷயம் என்னன்னா ... கலையின் அடாவடித்தனங்களை எடுத்துச் சொன்ன நான்... கலையபத்தி தெரியாம தப்புதப்பா சொல்லிட்டேனாம். நானும் அவரோட வயசுக்கு மரியாதை கொடுத்துதான் இத்தனை நாளா எல்லாத்தையும் பொறுத்துகிட்டிருந்தேன். ஆனா மனுஷன் சும்மா இருக்கற புழுவை  நோண்டி நோண்டி கொளவியா மாத்திட்டார் என்ன பண்ண நான்? அவர் வாத்தியார்தான் தெரியும் கொம்பை அவங்க ஸ்கூல் லையே விட்டுட்டு இல்ல ஈகரைக்கு வரணும் அப்படியே இங்கயும் தூக்கிட்டு வந்து... ஏய்... நீ இது பேசாதே. ஏய் ... நீ இது எழுதாதேன்னு சின்னப்பிள்ளத்தனமா அந்தப்பக்கம் போற எல்லாரையும்மிரட்டிகிட்டிருந்தா
எல்லாரும் என்ன கேணப் பசங்களா அவரைப்பார்த்து சலாம் போட?

"அவரே பாவம் இந்த தளத்தின் அழிவுக்கு ஒருவேளை நான்தான் காரணம் என்று நினைத்தால்"....ன்னு ஓரளவுக்குப் புரிஞ்சிகிட்டதால சொல்லிட்டார். சோ, அழியுதுன்னு நன்னா புரிஞ்சுண்டார்.

ஆனா இந்தம்மா என்ன பண்ணாள்.. அவர் அன்பானவர் , பண்பானவர், பாசமானவர், பொறுப்பானவர் பருப்பனவர் ன்னு ஒரே புகழ்ப்  புராணமா பாடிகிட்டிருக்கா...பாத்தியா உனக்கு விருது கூட கொடுத்தார் ன்னு அவர் பெரியமனசை தொறந்து காட்டறாங்க என்னமோ எனக்கு "ஞானபீடம்"
அவார்ட்  கொடுத்து அதுனால என்னோட பேரும் பெரும் புகழும் உலகளவில் உயர்ந்துட்டதுபோல...

அவருக்கு அன்பைத் தவிர ஒண்ணுமே தெரியாதாம்.- அதான் சர்கஸ் ரிங் மாஸ்டர் மாதிரி அங்க ரவுண்டு அடிசிட்டிருக்கரே.... எல்லாருக்கும்தான்
புரியுதே அவர் எப்படிப்பட்டவர்னு... (அவரே புரிஞ்சிக்கிட்டுதான் போதும் போதும்னு கூச்சப்பட்டு கும்பிட்டு கேட்டார் மஞ்சுநாசினி நீ இதோட   நிறுத்துன்னு)

ஐயையோ.... இப்போ நான் என்ன சொல்லவர்றேன்னே தெரியாத அளவுக்கு அன்பா குழம்பி இருக்கேன் இன்னைக்கு.

அதாவது.... களையோட பின்னுட்டங்கள்  எல்லாம் அன்பானதாம்... அறிவானதாம்.... இதுல கூத்து  என்னன்னா...என்பிள்ளைகள் கூட படிப்பாங்களாம்  கலை நல்லாதானே எழுதி இருக்காங்கன்னு சொல்வன்களாம்.என்ன கொடுமைன்னா... என்பிள்ளை களுக்கு  தமிழ் எழுதவோ படிக்கவோ தெரியாது என்பது தெரியாமலே பாவம் நானும் மஞ்சுவும் ஜெயாவும் சசியும் போல இருந்தமாதிரி ஒரு சூப்பர் act  கொடுத்து இருக்காங்க இன்னைக்கு.

இதெல்லாம் படிக்கும்போது எனக்கே என்னமோ இவங்க என் பக்கத்துவீட்டுக்காரோன்னு சந்தேகம் வந்துடுச்சி... ஒரே ஒரு நாள்... அது கூட ஒம்பது வருஷத்துக்கு முன்னாடி அவங்க முகம் பார்த்திருக்கேன். பேரு நளினின்னு தெரியும் அதைத்தவிர அவங்க யாரு என்ன எந்த ஊரு ன்னு என்ன பண்றாங்கன்னு ஒண்ணுமே எனக்கு தெரியாது ஆனா என்னமோ என்னோடு நெருக்கமா பாமிலி லெவல் ல பழகனாமாதிரி ஒரு பில்ட் up  கொடுத்து.... அடேங்கப்பா.... உலக மகா நடிப்புடா சாமி... அந்த திரியப் படிக்கறவங்க எல்லாம்... என்னமோ அவங்க அன்பா என்கிட்டே பழகின மாதிரியும் இப்போ அன்பா அறிவுரை சொல்றமாதிரியும்  நினைச்சுக்குவாங்க....

இந்த நடிப்பப் பார்த்து நானே மிரண்டுதான் போயிட்டேன். இருங்க இந்த வருஷம் செவாலியே க்கு வேணா நானே recomand  பண்றேன். வேலை நேரத்துல கூட வேலை செய்யாம பாவம் கம்பனி டைம் ல கூட பின்னூட்டங்களிலேயே   முழ்கிப்போன அம்மணி நேத்து மட்டும் குறைஞ்ச பட்சம் 2௦ பின்னூட்டமாவது எனக்கு அன்பா  அட்வைஸ் பண்ணி இவ்ளோ அன்பா performance  கொடுத்திருக்காங்கன்னா அதுக்கு ஏதாவது நாமளும் அன்பா  பண்ணணும்ல ? 

என்னவொன்னு ஓவரா மூக்கு சிந்திட்டதால அங்க கொஞ்சம் சோத சொதன்னு ஆகிடுச்சி. அதைபார்த்து டென்ஷன் ஆன சில தம்பிங்கள்லாம்.... நீ அடங்குக்கான்னு அன்பா சொல்லி இருக்காங்க. நல்ல வேளை அவங்களுக்கு எந்த இன்பெக்ஷன்  எதுவும் ஆகலே.. அன்பா தப்பிச்சுட்டாங்க..  

அடச்சீ... இதையே எழுதி எழுதி என்னோட 3  postings   வேஸ்டிங்க்ஸ். அதனால ஸ்டாப் இட் லதா ன்னு என்னை நானே திட்டிகிட்டு  இந்த கட்டுரைய இதோட நிறுத்திடறேன்.  

ஒன்னுமட்டும் சொல்லிக்கறேனே...

இத்தனையும் ஆனதுக்கப்புறம் கலையும் தான் திருந்திட்டதா  புதுக்கதை ... அதாவது புதுகவிதை விட்டிருக்கார். அனுதாப  அலை  பயங்கரமா  
அடிசுகிட்டிருக்கு  இப்போ.  சிவ  சிவா ... நான்  என்ன  சொல்றது ... எல்லாம்  அந்த  சிவனுக்கே  வெளிச்சம் . அந்த  சிவனா  பார்த்து  கூலி  கொடுக்கட்டும் .  ஆனா   நிஜமாவே இது நல்லாத்தான் எழுதி இருக்கார். இங்கருந்து ஒரு கைத்தட்டல் கொடுக்கறேன். திருந்தினா சரி. இதுக்குதானே நான் இவ்ளோ பாடு பட்டது...  அதேபோல  முழுசா  ஈரடியில்ஒரு  திருக்குறள்  கூட   இருக்கு  அங்க
. "லதா உனக்கு ஒரு சபாஷ்டி" ன்னு என்முதுகுல நானே தட்டிக்கறேன்.

எப்படியும் மஞ்சு இதை அன்பா படிச்சுட்டு அன்பா போய் அன்பா கலை கிட்டே அன்பா சொல்லுவாங்க. லதா அன்பா அவங்க ப்ளோக்ல அன்பா நம்மளப்பத்தி அன்பா எழுதி இருக்காங்கன்னு... இல்லன்ன அன்பா இங்கருந்து அன்பா கட் பண்ணி அன்பா அங்க போய் அன்பா பேஸ்ட் பண்ணிடுவாங்க. எல்லாரும் அன்பா அதை படிப்பாங்க.... எனக்கும் அன்பா ஒரு வாழ்த்து சொல்லுவாங்க.


இனியும் யாருக்காவது அன்புங்கற வார்த்தைமேல டவுட் வந்துச்சின்னு வச்சுக்கோங்க.... அப்புறம் அன்பா உங்களை கொலைபண்ணிடுவேன்.... ஜாக்கிரதை.