உலக அதிசயங்கள் ஏழு என்று சொன்னாலும் இவ்வுலகில் இன்னும் எத்தனையோ அதிசயங்கள் நிதம் தோன்றிக் கொண்டேதான் இருக்கிறது. ஆனால் அற்புதம் என்பது ஒன்றே ஒன்று தான். அதுதான் புத்தகம்.
எழுத்துக்களால் நிரப்பப்பட்டதா புத்தகங்கள்? இல்லை எழுதுபவனின் அனுபவங்களால் நிரப்பப்பட்டது.
ஒரு எழுத்தாளராக என்னுடைய பயணத்தைத் திரும்பிப் பார்க்கிறேன். விளையாட்டுப் பிள்ளையாய் இருந்தபோதே படிப்பில் தீவிர பற்று இருந்தது. என் அப்பாவும் அம்மாவும் புத்தகங்கள் நிறையப் படிப்பார்கள். குமுதம் ஆனந்தவிகடன், கல்கி, வண்ணத்திரை, முத்தாரம், குங்குமம், கல்கண்டு என்ற வார இதழ்கள் அத்தனையும் முரசொலி, மாலை மலர், தினமணி என்ற செய்தித் தாள்கள் நாள்தவறாமல் எங்கள் வீட்டிற்கு வந்துவிடும்
மட்டும்ல்லாது, கண்ணதாசன், வைரமுத்து, வாலி யும் பட்டுக்கோட்டை பிரபாகரன், வாசந்தி , பால குமாரன் என அத்தனை பேரின் கதைப் புத்தகங்களும் எங்கள் வீட்டு அலமாரியில். இத்தனையும் போதாது என் அம்மாவிற்கு. அதனால் இன்னும் நிறைய நாவல்கள் அப்பா புத்தகசாலையிலிருந்து கொண்டுவந்து தருவார்.
அம்மா ஹவுஸ் வைப் என்றுதான் பெயர். ஆனால் அவர் ஒரு அறிவுக் களஞ்சியம். பிள்ளைகள் எல்லோரும் பள்ளிக்குச் சென்றுவிட்ட பின் நாளேடுகளையும் வார இதழ்களையும் படித்துவிடுவார். எனக்குத் தெரிந்து ஒரு புத்தகத்தை அரை மணி நேரத்திற்குள் படித்து விடுவார். அவ்வளவு வேகம் படிப்பதில், படித்துவிட்டு அதிலிருக்கும் ஜோக்ஸ் சில சின்னச்சின்ன அறிவுத் தகவல்கள் எல்லாம் எங்களுக்குச் சொல்வார்.
அப்பா காலையிலேயே கடைக்குச் சென்று காய்கறிகள் வாங்கும்போதே அன்றைய நாளேட்டையும் அவ்வாரத்தின் ஏதாவது ஒரு புத்தகத்தையும் (அப்போதெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒரு புத்தகம் வெளிவரும்... உதாரணமாக, புதன் - குமுதம் கல்கண்டு, அப்பா புத்தகம் வாங்கி கொண்டு வருவார். காலையில் பள்ளி செல்வதற்கு முன் காத்துக் கொண்டே இருப்போம். அவர் தெருமுனையில் வரும்போதே ஓடிச்சென்று கையிலிருந்து புத்தகத்தைப் பறித்துக்கொண்டு ஓடி ஏதாவது ஒரு மரத்தடியில் உட்கார்ந்து படித்துவிட்டுத்தான் வீட்டிற்கு வருவேன். ஏனென்றால் கொஞ்சம் மிஸ் ஆனாலும் புத்தகம் அக்காக்களின் கைகளுக்குச் சென்றுவிடும். என்னைப் போல் அவர்களெல்லாம் வீட்டை விட்டு வெளியே வர மாட்டார்கள் என்பதால் இந்த டெக்னிக் ஐத்தான் நான் பின்பற்றுவேன். குமுதத்தில் ஆறு வித்யாசங்கள் சின்னச்சின்ன ஜோக்ஸ், பெட்டிச் செய்திகள் என எல்லாம் படித்துவிட்டு வீட்டிற்குச் சென்று புத்தகத்தை யார் கேட்கிறார்களோ அவர்களுக்குக் கொடுத்துவிடுவேன். இப்படி வார இதழ்கள் மேல் அவ்வளவு வெறி. நான் வார இதழ்களைத்தான் தவறாது படிப்பேன்.
செய்தித் தாள்களில் நான் விரும்பி வாசிப்பது ரயில் விபத்து பஸ் விபத்து திருட்டு கொலை கொள்ளை என்பது போன்ற செய்திகளும், விளையாட்டுச் செய்திகளோடு காமிக்ஸ்.. மற்றபடி செய்தித்தாள்கள் மேல் அவ்வளவு விருப்பம் இல்லை. அதே போல் நாவல்களெல்லாம் சுத்தமாகப் படிக்கவே மாட்டேன். காரணம் முழு புத்தகம் படிக்குமளவிற்கு எனக்குப் பொறுமை கிடையாது. ஓடி விளையாடத்தான் பிடிக்கும்.
ஆனால்... கண்ணதாசன் , வைரமுத்து புத்தகங்களை என் அம்மாவும் அப்பாவும் படித்துவிட்டு அதைப்பற்றி சிலாகித்துப் பேசிக்கொண்டிருப்பார்கள். என் அம்மாவும் அக்காக்களிடம் சில புத்தகங்கள் கொடுத்து படித்துப் பார்க்கச் சொல்வார். ஆனால் எனக்கு வார இதழ்கள் தவிர இந்தப் புத்தகங்கள் பக்கம் திரும்ப மாட் டேன். ஆனால் எப்போதாவது விளையாடவும் செல்லவில்லை என்றால் வீட்டிலும் வேறு புதிய புத்தகங்கள் இல்லையென்றால்.... கண்ணதாசன் வைரமுத்து புத்தகங்களக் கொஞ்சம் திருப்பிப் பார்ப்ப்பேன். வைரமுத்துவின் தமிழ் சமகாலத்தது என்பதால் பொதுவாகப் புரிந்துவிடும். என் அப்பாவின் ஒரு பழக்கம். அவர் ரசித்துப் படித்த வரிகளை கோடிட்டு வைத்திருப்பார்....அந்த வரிகள் படிக்கும்போது மிகவும் நன்றாக இருக்கும். உதாரணமாக...
நான் பத்தாவது படித்துக் கொண்டிருக்கும்போதென்று நினைக்கிறேன். வைரமுத்துவின் கவிராஜன் கதை... பாரதியாரின் கதையை புதுக்கவிதை பாணியில் எழுதிய ஒரு அருமையான புத்தகம். அதைப் பற்றி அம்மாவும் அப்பாவும் நிறைய பேசியதைக் கேட்டிருக்கிறேன். ஒரு நாள் அந்தப் புத்தகத்தை எடுத்து சும்மா திருப்பிப் பார்த்துக்கொண்டிருந்தால்.... ஆங்காங்கு எக்கச்சக்கமாக எழுத்துக்களின் கீழ் கோடு போட்டிருக்கிறார் அப்பா..
பாரதியின் வறுமையை
" கம்பீரத்தை அறுப்பதற்கு
வறுமைக் கரையானுக்கு
வலிமை ஏது?
பாரதி தெருவில் நடந்து செல்வார்... அப்போது எழுதி இருப்பார் வைரமுத்து...
"இந்தச் சூரியன் நடந்து சென்றால்
தெருவின் இருமருங்கிலும்
கைத்தாமரைகள் குவியும்..."
தீயை வளர்க்க
ஒரு நெய் மழை வேண்டும்" ...என இன்னும் என்னென்னவோ வார்த்தைகள் கோடிட்டு இருந்தது. அதையெல்லாம் படிக்கப் படிக்க மனதிற்குள் இனம் புரியாத ஒரு மகிழ்ச்சி... ஒரு பரவசம்....ஆஹா எப்படியெல்லாம் எழுதுகிறார்கள் என்று ஒரு ஆச்சரியம் எப்படி இந்தக் கற்பனைகள் என்று நினைப்பேன்... அதற்குப் பிறகு அலமாரியில் இருந்த எல்லா வைரமுத்து புத்தகங்களையும் (வைரமுத்து மட்டும்) புரட்டி புரட்டி வெறும் கோடிட்ட வார்த்தைகளைப் படிக்க ஆரம்பித்தேன். இனம் புரியாத ஈடுபாடு வைரமுத்துவின் எழுத்துக்கள் மேல் எற்பட்டுவிட்டது...அதன் பிறகு முழுக்கவிதையும் பின் முழுப் புத்தகமும் படிக்க ஆரம்பித்தேன்.
பள்ளியில் எப்போதும் பேச்சுப் போட்டி கட்டுரைப் போட்டி இதிலெல்லாம் பங்கு கொள்வேன் அப்பாதான் எழுதித் தருவார். அதை மனனம் செய்து அப்படியே எழுதி பரிசு வாங்கி விடுவேன். (ஆரம்பப்பள்ளியில் இருக்கும்போது பிளாஸ்டிக் சோப் டப்பா, பென்சில் , நோட்டுப் புத்தகங்கள், திருக்குறள் புத்தகம் இப்படி...உயர்நிலைப் பள்ளியில் இருக்கும்போது ஸ்டீல் தட்டு, டம்ப்ளர், கப்ஸ் இப்படி, ஆனால் விளையாட்டுப் போட்டிகளில் ஸோனல், டிஸ்ட்ரிக்ட் எல்லாம் போகும்போதுதான் கப் வாங்குவேன்)
நான் +1 படித்துக் கொண்டிருக்கும்போது குழந்தைகள் தினம் அன்று நேரு பற்றி அங்கேயே ஒரு கவிதை எழுதச் சொல்லி சொன்னார்கள். என்ன எழுதுவதென்று புரியவில்லை. ஒரு நாள் டைம் கொடுத்தாலாவது அப்பாவிடம் கேட்டு எழுதிவிடுவேன். அதற்கும் சந்தர்ப்பம் இல்லை.
திடீரென்று வைரமுத்துவின் ஒரு வரி நியாபகம் வந்தது....எந்த புத்தகம் என்று நினைவில் இல்லை...வார்த்தை மட்டும் நியாபகம் இருக்கிறது ..." அதோ ஒரு பறவை சோம்பல் முறித்துத் தன் சிறகை சோதித்துக் கொண்டிருக்கிறது" என்ற வரி நியாபகம் வந்தது.( அப்பா கோடிட்டு வைத்த வரி) உடனே எழுதிவிட்டேன்...
சோம்பலை முறித்துத் தன் சிறகை
சோதித்துக் கொள்ளும்
பறவைகளைப் போலிருந்த மக்களிடம்
இந்தியாவின் கஜானாவை
ஒப்படைத்து விட்டுச் சென்றாய்...
நீ ஒப்படைத்த கஜானா
இன்னும் காலியாகவே இருக்கிறது...
உன் புகைப்படத்தில் மட்டும்
புழுதி சேர்ந்துகொண்டே இருக்கிறது "
முதல் பரிசு எனக்கு... சந்தோஷம் தாங்க முடியவில்லை - அப்பாவிற்கு.
விளையாட்டுக்களில் 3 மாதத்திற்கொருமுறை ஏதாவது ஒரு மீட் க்கு போ கலந்து கொள்ளும் அத்தனை EVENT களிலும் பரிசினை வாங்கிக்கொண்டு வந்துவிடுவேன். இப்போது இலக்கியத்திலும் வாங்க ஆரம்பித்துவிட்டதால் ஏகப்பட்ட குஷி... எல்லோருக்கும். கவிதைப் போட்டி கட்டுரைப் போட்டி பேச்சுப் போட்டி இதிலும் நானே முதல்...இப்படித்தான் எழுத ஆரம்பித்தேன்.
வைரமுத்துவின் புத்தகங்கள் எல்லாம் கவிதைகள். அதேநேரம் அம்மாவும் அப்பாவும் ஆச்சரியப்பட்டு பேசிக்கொண்டிருக்கும் இன்னொரு கவிஞன் கண்ணதாசன். அர்த்தமுள்ள இந்து மதம் புத்தகம் எடுத்துப் பார்த்தேன். என்னதான் உள்ளது என.. உரைநடையில் இருந்ததால் படிப்பதில் சிறு கடினமும் இல்லை. வெகு எளிதாகவும் சுவாரசியமாகவும் இருந்தது. பத்து பாகங்களும் படித்து விட்டேன். வழக்கம் போல் கோடிட்ட வார்த்தைகளைப் படித்து விட்டுத்தான் பிறகு முதலிலிருந்து படிப்பேன். இதற்குப் பின் வாலி, பின் பாரதி, பாரதி தாசன்.... என்று படிப்படியாக என் ஆர்வம் ஈடுபாடாக மாறியது... இன்று அவ்வை, காளமேகம்,பத்துப் பாட்டு எட்டுத்தொகை என்று சங்க இலக்கியங்கள் வரை அவை தொடர்கிறது.
இப்படி பள்ளி இறுதியிலும் கல்லூரியிலும் கவிதைகள் எழுதி பரிசுகள் வாங்கியிருந்தாலும் அவ்வப்போது சிறு சிறு கவிதைகள் ஏதாவது எழுதுவேன். ஆனால் திருமணத்தின் பின் என் கவிதைகளை ரசிக்கவோ அல்லது ஊக்குவிக்கவோ யாருமில்லாமல் முடங்கித்தான் போனது.
வாழ்க்கை என்ன நிலையானதா? சுழன்று கொண்டே அல்லவா இருக்கிறது? அப்படிப்பட்ட ஒரு கால கட்டத்தில்தான் மறுபடி எழுத ஆரம்பித்தேன். நான் குவைத்திற்கு வந்தேன். குவைத்தில் பாலைக் குயில்கள் கவிஞர்கள் சங்கத்தில் இணைந்தபின் என் கவிதைகளுக்கு நல்ல அங்கீகாரம். எல்லோரும் பாராட்ட ஆரம்பிக்க நிறைய எழுதினேன். நான் எழுதுவதை நண்பர்களுக்கு ஈ-மெயிலில் அனுப்புவேன். நன்றாக உள்ளது எனப் பாராட்டுவார்கள். அப்படி இருக்கும்போதுதான் சண்முகம் என்ற நண்பர் என் கவிதைகளை மு. மேத்தா, தென்கச்சி சுவாமிநாதன் மணவை முஸ்தபா, கவிஞர் ஜெயபாஸ்கரன் இப்படி ஒரு அருமையான இலக்கிய வட்டத்திற்கு என்னை அறிமுகப் படுத்தினார்.. கவிதைத் தொகுப்பும் வெளியிட்டேன். லதாராணி சொப்னபாரதி யாக மாறியது இப்படித்தான்.
அதேபோல் சிறுவயதில் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் சமயம் ஒரு ஏழாவது எட்டாவது போலிருக்கும் அப்போது எங்கள் தெருவில் இருந்த நூலகம் மாலை 4 மணியிலிருந்து ஏழுமணி வரைதான் திறப்பார்கள். அந்த நூலகத்திற்கு எங்கள் தெருவிலுள்ள ஒரு முதியவர் (தாத்தா என்று கூப்பிடுவேன்) தினமும் செய்தித்தாள் படிக்க வேண்டும். ஆனால் அவருக்குக் கண்சரியாகத் தெரியாது. அதனால் என்னைப் படிக்கச் சொல்வார். நானும் வேகமாக ஓடிச் சென்று அய்யோ தாத்தா காத்துகிட்டிருப்பாரே என்று ஓடி பேப்பர் எடுத்து அத்தனை தலைப்புச் செய்திகளையும் வேகமாக வாசிப்பேன். அதிலிருந்து முக்கியமானவற்றை மட்டு,ம் படிக்கச் சொல்வார் தாத்தா.. அவர் கேட்பதை வேகவேகமாகப் படித்துவிட்டு(... அதற்குள் என் நண்பர்களெல்லாம் வெளியே எனக்காக காத்துக்கொண்டிருப்பார்கள்) விளையாட ஓடிவிடுவேன். இப்படி அந்தத் தாத்தா என்னை படிக்கச் சொல்லி படிக்கச் சொல்லி என் வாசிப்புத் திறமையை வளர்த்து விட்டாரோ என்று இன்றும் நினைப்பேன்.
குவைத்தில் நிறைய மேடைகள்.... என் கவிதைகள் கேட்க ஆர்வமாக இருப்பார்கள். குவைத்தில் பெரியார் நூலகப் பெரியவர் திரு. செல்லப் பெருமாள் அவர்களிடம் புத்தகங்கள் வாங்கிப் படிப்பேன். என் தமிழ் ஆர்வம் கண்டு அவர் என்னை இராவண காவியம் சொற்பொழிவு செய்ய கேட்டுக்கொண்டதின் பேரில் அப்பொறுப்பை ஏற்று செய்து கொண்டிருக்கிறேன். பெரியார் பன்னாட்டு மையத்தின் குவைத் கிளை செயலாளராகவும் “குவைத் தமிழ்” என்ற மாத இதழில் ஆசிரியராகவும் உள்ளேன்.
இப்போது இருக்கும் யாதுமானவள் தமிழிலக்கணம் பயில வேண்டுமென வற்புறுத்தியது புலவர். திரு. சூசை மைக்கேல். என்னுடைய மானசீக குரு. என்னுடைய தமிழ் ஆர்வம் கண்டு, (ஏறக்குறைய நானொரு தமிழ்ப்பித்து) இத்தனை ஆர்வமுள்ள ஒரு தமிழ்ப்பெண்ணை நான் கண்டதே இல்லை இதற்குமுன் என்று கூறுவார். கீற்று மூலம் தான் நாங்கள் அறிமுகம். இராவண காவியத்திலும் ஏதாவது சந்தேகம் இருந்தால் ஈ-மெயில் மூலம் தெரிவிப்பேன்.அழகான விளக்கங்களுடன் அதற்கு பதில் அனுப்புவார். அவரின் வழிகாட்டுதல்களையும் அறிவுரைகளையும் ஏற்றுதான் என் எழுத்துப்பயணம் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது - என் தந்தையின் ஆசியுடன்.
அன்புடன்,
யாதுமானவள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக