என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

வியாழன், 30 ஜூன், 2011

காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள் (தேங்காயும் நாயும்)

தேங்காயும் நாயும்
ஓடு மிருக்குமத னுள்வாய் வெளுத்திருக்கும்
நாடுங் குலைதனக்கு நாணாது - சேடியே
தீங்காய தில்லாத் திருமலைராயன் வரையில்
தேங்காயு நாயுமிணைச்  செப்பு.  
(பிரித்துப் படிக்க :
ஓடும் இருக்கும் அதன் உள்வாய் வெளுத்திருக்கும்
நாடும் குலை தனக்கு நாணாது - செடியே
தீங்கு ஆயது இல்லாத் திருமலைராயன் வரையில்
தேங்காயும் நாயும் இணைச் செப்பு )

விளக்கம்: தோழி! (சேடி- தோழி) , தீமை இல்லாத திருமலைராயன் வாழும் மலைப்பகுதியிலே தேங்காயையும் நாயையும் ஒப்பாகக் கூறு... எப்படியெனில்..
தேங்காயிடம் [color=red]ஓடும்  இருக்கும் [/color].(ஓடு ஒன்றை கொண்டதாய் இருக்கும்) அந்த ஓட்டின் உட்புறம் வெளுத்திருக்கும். வெண்மையான தேங்காய் அதன் உள்ளிருக்கும். அனைவரும் நாடும் (விரும் பும்) தேங்காயானது  குலையாகத் தொங்குவதால் அது வளைவதில்லை(நாணாது). கோணுவதில்லை   . காய்களைத் தாங்க முடியுமா என அஞ்சுவது இல்லை.
அதே போல்...
நாய் ... சில நேரம் ஓடும். சில நேரம் ஒரே   இடத்தில்  நாக்கைத்  தொங்கப்  போட்டுக் கொண்டு  இருக்கும் ([color=red]ஓடும்  இருக்கும்[/color])
அதன் உள்வாய்  வெளுத்து  இருக்கும். எப்போதும்  குறைத்துக்  கொண்டிருப்பதற்கு   வெட்கப்படுவதே இல்லை. புதியவர்கள் யாரும்  வருவதை (நாடும்) உற்றுப்  பார்க்கும் , பிறகு  குலைக்கும் . குலைப்பதர்க்குச்  சிறிதும்  வெட்கப்படாது ...யாரைக் கண்டும் அஞ்சவும் அஞ்சாது.

இப்படி  நாயும் தேங்காயும் ஒன்று  என்று  கவி  காளமேகம்  அழகாக  எடுத்துரைக்கிறார் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக