என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

புதன், 6 ஜூலை, 2011

காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்

அற்புதமான இன்னொரு சிலேடைப் பாடல்:

இது முப்பொருள் உள்ளடக்கிய சிலேடைப் பாடல்...

என்ன வியப்பாக உள்ளதா?... படித்துப் பாருங்களேன்...

கீழ்வரும் பாடலில் விநாயகரும் முருகனும் சிவபெருமானும் ஒன்றெனக் கூறுகிறார் கவி..

சென்னிமுக மாறுளதால் சேர்கரமுன் னாலுகையால்
இன்னிலத்தில் கோடொன் றிருக்கையால் - மன்னுகுளக்
கண்ணுறுத லானுங் கணபதியும் செவ்வேளும் 
எண்ணரனு நேரா வரே .

பிரித்துப் படிக்க: 

சென்னி முகம் ஆறு உளதால் சேர் கரம் முன் நாலு கையால் 
இந்நிலத்தில் கோடு ஒன்று இருக்கையால் - மன்னு குளக் 
கண் உறுதலானும் கணபதியும் செவ்வேளும் 
எண் அரனும் நேர் ஆவரே ! 

(சென்னி - தலை , கோடு - கொம்பு,மலை; மன்னு - நிலை பெற்ற , குளம் - நெற்றி , உறுதல் - இருத்தல், பொருந்துதல், அரன்- சிவன் )

எப்படி இவர்கள் மூவரும் ஒன்றாவார்கள் என்றால்...

விநாயகரின் தலையும் முகமும் வழக்கத்திலிருந்து மாறுபட்டடவை. உடல் அமைப்பிற்கு முரணாக அமைந்தவை. (யானைத் தலை, மனித உடல்) முகத்தில் அமைந்த துதிக்கையானது முன்புறம் தொங்குகிறது. இந்த உலகத்தில் ஒற்றைக் கொம்புடையவராக உள்ளார். மண்ணெடுத்து அதில் பிள்ளையாரைப் பிடித்து வைத்தாலும் அதிலும் பிள்ளையாரின் பிரசன்னம் இருக்கும் என்கிறார்.

சரி, அடுத்து முருகன் எப்படி இருப்பாரென்று கூறுகிறார் என்றால் ....

இவர் தலையும் முகமும் ஆறு(6 ) உடையவர் . இவர் உடலில் 12 கைகள் சேர்ந்திருக்கிறது (சேர்கரம் முன் நாலு 3x4 =12) மலையில் வசிப்பவர்(திருச்செங்கோட்டில் வசிப்பவர்). சரவணப் பொய்கையில் அவதரித்தவர் (மன்னுகுளம்)

அடுத்து பரமசிவனையும் இவர்களோடு ஒப்பிடுகி
றா::

சிவனின் தலையில் கங்கை ஆறு உள்ளது , முன்புறம் நான்கு கைகளை உடையவர்(உடலுடன் சேர்ந்து நான்கு கைகள் முன்னால் உள்ளது) , இப்புவியின் சிறந்த கைலாச மலையில் வீற்றிருப்பவர் , நெற்றிக்கண் அமையப் பெற்றவர். 

இப்படி ஒரே பாடலில் மூன்று கடவுளர்களையும் அற்புதமாக ஒப்பிடுகிறார்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக