என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

வியாழன், 12 ஏப்ரல், 2012

ஏடுகள் இயம்பிய தைத்திரு நாள்!

புத்தாண்டு எப்போது என்பதுவே  புதிராகிப்
         போனதுநம்  பைந்தமிழ் நாட்டிலே
பத்தாண்டுநூ றாண்டுபதினா யிரமாண்டாய்த்
         தைத்திங்கள் தான்தமிழர் புத்தாண்டென்று
அத்தனைத் தெளிவாக அறிவுமுதிர்ப்
         பாவேந்தன் அறிவித்துப் போயிருந்தும்
சித்திரையில் வேண்டுமென்று சிறுமதியர்
         ஏனிந்தக் கூப்பாடு போடுகின்றார்?

மறைமலை அடிகளோடு மாபெரும் புலவோர்கள்
         மறுவாய்வு செய்து சொன்னார்
திருவள்ளுவர் ஆண்டுமுதல்  தனியாகத் தமிழர்களின்
         ஆண்டொன்று வேண்டு மென்றார் 
அருந்தமிழர் அதையேற்றுத் தைத்திங்கள் முதல்நாளே
         புத்தாண்டாய் ஏற்றுக் கொள்ள
அறிவற்றோர் மீண்டுமந்தப் பொருந்தாத சித்திரைதான்
         பின்பற்ற சொல்லு கின்றார் !

நாவேறிச் சுவைபகிரும் நல்லதமிழ் இலக்கியங்கள்
         நவின்ற நற்செய்தி யைத்தான் 
பாவேந்தர் சொன்னாரே பாருமையா எனக்கேட்கும்
         பார்போற்றும் தமிழாய்ந்த புலவோர்களே!
பாவேந்தன் பெயரினிலே பயன்பாட்டில் இருந்துவந்த
         பழம்பெரும் நூலகத்தைப்; போற்றாமல்
அவன்பிறந்த மாதத்திலே அழித்தவரா இதையெல்லாம்
        ஆராய்ந்து பார்க்கப் போறார்?

 ஒப்பில்லாத தமிழகத்தின் உயிர்நாடி துடிப்பதை
         ஒருபொருட் டாய்மதித் திடாமல்
 தப்பான முடிவுகளைத் தயங்காமல் எடுப்பவரைத்          
         தடுத்திடும் துணிவென்ப தில்லாமலே 
எப்படியோ எங்களுக்கு விடுமுறை கிடைக்கிறதே
         எனச்சொல்லி சிரித்து நிற்கும் 
துப்பில்லாத எதிர்க்கட்சி  உள்ளதால்தான்   துணிகின்றார்
         இதுபோன்ற செயல்  செய்யவே !
             
ஆரியப் பண்டிகை தீபவளி தன்னைத்
         தமிழ்க்கு லத்தில்திணித் ததுபோல்
ஆரியர் ஆளுகின்ற தமிழகத்தில் இதுபோன்று 
         யிரம் நடக்கு மைய்யா
மூடர்கள் சொல்வதை காதினில் போடாமல்
         முற்றுமாய் விலக்கி விட்டுநம்
ஏடுகள்  இயம்பிய  தைத்திரு நாளினில்
         புத்தாண்டினைக்  கொண்டா டுவோம்!

2 கருத்துகள்:

  1. எப்படியோ எங்களுக்கு விடுமுறை கிடைக்கிறதே
    எனச்சொல்லி சிரித்து நிற்கும்
    துப்பில்லாத எதிர்க்கட்சி உள்ளதால்தான் துணிகின்றார்
    இதுபோன்ற செயல் செய்யவே !

    முதல்ல உங்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அடுத்து எடுத்து காட்டும் சிறப்புக்கவி அடுத்து அடுத்து சிறப்பு வரிகள் வாழ்த்துக்கள் தோழி வாழ்த்துக்கள் நல்ல சிறப்பான கவிதை..

    பதிலளிநீக்கு
  2. //tamizhai kaappatha yaarume illaama poidumo nu theriyuthu// அன்புத் தோழி லதாராணி பூங்காவனம் போல் நிறையப் பேர் இருப்பதாகவும் எனக்கொரு நம்பிக்கை இருக்கு தோழர்..

    நன்மையின்பக்கம் எல்லாம் மாறியேத் தீரும் என்பது விதி. நன்மைக்கான கோட்பாடு மாறுகையில் நீதியும் மாறுகிறது...

    கோட்பாடு சரியாகும்; தமிழ் காலத்திற்கும் நிலைக்கும்!

    வித்யாசாகர்

    பதிலளிநீக்கு