இந்து சரித்திரத்தில் நுழைந்த இன்னுமொரு தரித்திரத்தின் பெயர்தான் நித்யானந்தன். தன் ஆசிரமத்தில் சீடர்களுக்கு பிரம்மச்சரிய விரதம் மேற்கொள்ளுவது எப்படி என்று கற்பித்துக் கொண்டு அந்தப்புரத்தில் பஞ்சு மெத்தையில் நடிகைகளுடன் சல்லாபித்துக் கொண்டிருக்கிறான். அட வெட்கக்கேடே இவன் பெயரா சந்யாசி? தனிமனித ஒழுக்கம் கடைபிடிக்க முடியாத இவனுக்கு ஊருக்கு உபதேசம் செய்ய என்ன யோக்கியதை இருக்கிறது?
இச்செயல் இவனை நம்பியிருந்த மக்களுக்கு இவன் செய்த துரோகமல்லவா?
32 வயதிற்குள் கோடிகளுக்கு அதிபதி. உலகம் முழுவதும் ஆசிரமங்கள்(அசிங்கங்கள்) மடங்கள். பக்தர்கள் கூடவே சல்லாபிக்க நங்கைகள். இத்தனையும் எப்படி முடிந்தது இவனால்? உழைக்க மனமில்லாத சோம்பேறிகள்தான் காவி உடுத்தி போலி சாமியார் வேடம் போட்டு ஈனப் பிறப்பு நடத்துவார்கள்.
ஆட்டுக்குட்டிக்குத் தாடிவளர்த்தால் கூட சாமி என்று கும்பிடுபோடும் முட்டாள் மக்களை இந்தப் போலி சந்நியாசி கொஞ்சம் அறிவாளியாக இருந்துவிட்டதால் காவிஉடை, ருத்ராட்ச மாலையால் தன்னை அலங்கரித்துக்கொண்டு தன் பேச்சால் கவர்ந்திழுத்து மக்களை ஆட்டுமந்தைகள்போல் தன் பக்கம் திரண்டுவர வைத்துவிட்டான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக