என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

வெள்ளி, 22 ஏப்ரல், 2011

அபயம் கேட்டதை அறிந்தோமா? (ஈழத்துக் கவிதை)

 
அழித்திட முழுதாய் முதற்குடி
      இனமதற் காவன செய்கின்றார்
இழிசெயலி தற்குத்துணை செய்யும்
      ஈனப்பிறவி களிங்கே இருக்கின்றார் 
பழிகொள்ளும் பாவச் செயலினை
      மூச்சாய் கொண்டவக் காடையரைச்
சுழித்திடும் அந்தப் பொன்னாள்
      இங்குச் சடுதியில் வாராதோ?

வெஞ்சினப் படைகொண்டு வேட்டை
      நாயென எதிர்வந்து இழிஞர்களும்
பிஞ்சுக் குழந்தைகள் பலநூறோடு
      பஞ்சுத் தலைகளைச் சாய்த்தனரே
எஞ்சிய ஈழவீரத் தமிழனின்
      கல்லறை தோண்டிக் கொடியோர்கள்
மிஞ்சிய எலும்புத் துண்டுகள்
      தெருவினில் வீசியும் மகிழ்ந்தனரே

கருங்குழல் பெண்கள் தலையினில் 
      இயற்கை மணமுண்டு என்றவனே
கருகிடும் பெண்கள் கூந்தலும்
     பொசுங்கிடும் மணத்தினை ரசித்தாயோ?
சுடுகின்ற கொடுஞ்செயல்புரி கின்றோனை
            எரிதழல் கொண்டே தீய்க்காமல்
சுடுவிழி யொன்று நடுவினில்
      இருப்பதைஈ  சாநீயும் மறந்தாயோ?

காடையர் கொலைவெறி கொண்டே
      தமிழனை உருக்குலைத் தெரிகின்றான்
ஆடைகள் அவிழ்த்துக் கண்களை
      அடைத்துஆ டவர்பலரைச் சுடுகின்;றான்
வாடைதான் பிணத்தின்வழி யெங்கிலுமே
      வதைத்தே உயிரை முடிக்கின்றான்
பீடையர் பிணந்திண்ணிக் கழுகாய்ப்
      புவியனில் பிறந்ததும் இதற்காமோ?

கொத்துக் கொத்தாய்க் குண்டுகள்
      வீசிநம் குலத்தினை அழிக்கின்றான்
கத்திக்க தறிப்பிஞ்சுகள் மடிவதைக்
      கயவர் கண்டு மகிழ்கின்றார்
புத்தன் சிலைக்கு இரத்தம்
      கொண்டுபூ ஜைதினமும் செய்கின்றான்
பித்துப் பிடித்தபேய வன்தன்னின்
      குரல்வளை நாமும் நெறியோமா?
      
மூடிய கண்ணுடன் முகத்தினில்
      முறுவலாய் மரத்தடி அமர்ந்தோனே
ஓடியே கதறித் துடித்திடும்
      உயிர்களைக் காத்திட மறந்தாயோ?
நாடியும் அடங்கிடும் வேளையிலா
      வதுநின்விழி திறப்பாயோ – அன்றி
நீடிய செவிப்பறை சேர்த்தே
      அடைத்துச் செவிடாயி ருப்பாயோ?
      
யாழிசை மீட்டிப் பாடிடும்
      குலத்தினில் ஏந்திழையா ளொருத்தி
ஏழிசை கீதம் பாடிடும்
      குயிலென இசையுடன் இருந்தாளே
சூழவே காடையர் நின்றவள்
      கற்பினைச் சூறையும் ஆடினரே
ஈழமே இஃதென் கொடுமையோ
      என்றெம் நெஞ்சம் பதறியதே.

இம்மகள் சிங்கள வெறியருக்
      கேதும் இடர்தான் செய்தனளோ?
அம்மன மாக்கி மேனியைப்
      பாவிகள் அங்கனம் விட்டனரே
எம்மினக் கொடியின் மானம் காத்திடக்
     கண்ணனும் சேலை தரவில்லையே
தம்மகள் தனையுமிழந் தவப்பேதை
      தமிழளாய்ப் பிறந்ததா குற்றமங்கே?
               
கருவறை சிசுக்கள் உருவம்
      அடையுமுன் மண்மேல் வீசுவதை
பெருவயி ரறுக்க வெளிவந்த
      சிசுவும் உணர்ந்தந்தப் போழ்தினிலே
தருதலைப் படையினர் தமிழினம்
      அழிப்பதைத் தடுத்திடத் திறள்கவென
ஒருகரம் நீட்டி உலகினை
      நோக்கி அபயம் கேட்டதுவோ?

படுகுழி தோண்டிப் பதுங்கிய
      மக்களைப் பாதகன் அழிக்கின்றான்
இடுகாடாக் கிஈழம் முழுதும்
      எம்குலத் தமிழனை எரிக்கின்றான்
தடுத்திட வருவீர்வீ ரத்தமிழரே
     தயங்குதல் இனி வேண்டா
கொடுசெயல் புரியும் கொடும்பா
      விகளின் கொட்டம் ஒடுக்கிடவே!

கொடியவச் சிங்களப் பேயரை
      அடக்கி நம்மினம் காத்திடுவோம்!
நொடிப்பொழு தேனும் தாமதி
      யாதுநா மொன்று சேர்ந்திடுவோம்!
குடியது காத்து குலத்தமிழ்
      வளர்ப்பது குலமக்கள் கடமையன்றோ?
பொடிப்பொடி யாக்கிப் பகைதனைக்
      கொன்று தமிழீழம் வென்றிடுவோம்.

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக