உன்னோ டெனைஎன் னவிந்தை செய்திணைத் தனையோ?
என்னை உனதடிமை யாக்கிஏன் தான்மகிழ்ந் தனையோ?
உந்தன் விரல்பி டிக்கவந் தயெனை யேன்வென்றனையோ ?
எந்தன்னு யிராயென்னில் யென்றுவந்து கலந்தனையோ?
சின்னவய திலெந்தன்சிந் தைதன்னில் நுழைந்தாயே
கன்னக்கு ழியைக்கூட கவித்திறத்தால் நிறைத்தாயே
என்னைஅடி மைகொள்ளஎன் னஉனக்கு விருப்பமோ?
என்னைஇனி மேலுமேதும் மாயைவந்து வீழ்த்துமோ?
தன்னில்நி கரில்லாத தனித்ததமிழ் மகள்நீயே
தன்னந்த னியிருக்கத் தலையணையாய் ஆனாயே
திகைத்துந டுங்கும்போது திடமான அணைப்பாலே
நகைத்துந யம்படும்நற் றமிழாலே முகிழ்த்தாயே
பொன்னும்பொ ருளும்என்ற போதைவாழ்க்கை வேண்டிலேன்
உன்னைஉண்டு உண்டுஉவக் கும்வாழ்க்கை போதுமே
என்னாரு யிர்த்தமிழே என்துணையா யுனைப்பெறவே
முன்னேத வம்செய்தேனோ எனையேநான் மறந்தேனே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக