வழக்கம் போல அலுவலகத்திலிருந்து ஐந்து மணிக்கு வீட்டிற்கு வந்துவிட்டேன். இப்போது என் குழந்தைகளுக்கு கல்லூரி விடுமுறையாதலால், எனக்காக கணினி முன் காத்திருப்பார்கள் என்பதால்... உடை கூட மாற்றாமல் முதல் வேலையாக மடிக்கணினியை செயற்படுத்திவிட்டு ஓடி உடைமாற்றி தேநீர் தயாரித்துக்கொண்டு வந்து உட்கார்ந்தேன். என் செல்லக்குட்டிகள் ஆஜர்.
முந்தைய நாள் நான் எழுதிய மகாத்மாவைக் கொன்ற பகவத் கீதை யை பூர்விஷ்க்கு நேற்று படித்துக் காண்பித்தபோது அவன் கவனமாக முழுவதையும் கேட்டுவிட்டு "மாம், முதல்ல தலைப்ப மாத்துங்க. "கோட்சே அவன் வாக்கு மூலத்துல என்ன சொன்னான்னா "பகவத் கீதையிலும், கிருஷ்ணாவதாரத்திலும் , ராமாயணத்திலும், இப்படித்தான் நடந்திருக்கு. இந்து தர்மத்திற்கு எதிராக அதர்மம் தலை தூக்கும்போது அதர்மத்தை அழிப்பதுதான் என்வேலைன்னு கண்ணன் சொன்னதுதான் நானும் செஞ்சேன்னு சொல்லி இருக்கான். சோ, அதுபோலத்தான் நான் மகாத்மாவைக் கொன்னதும்னு தான் சொல்லி இருக்கான். ஆனா நீங்க பகவத் கீதையாலதான் கோட்சே காந்திய கொன்னதா எழுதி இருக்கீங்க அது தப்புன்னு வாதம் பண்ணினான்.
அதுக்கு நான் சொன்னேன்... நானும் கீதையின் மறுபக்கம் என்ற புத்தகத்தை ரெபர் பண்ணிட்டுதான் எழுதினேன்னு சொன்னேன்.அதுல மகாத்மா காந்தி கொலை வழக்கை விசாரிச்ச நீதிபதியோட புத்தகத்துல ரெபர் பண்ணி தான் கி. வீரமணி எழுதி இருந்தார் சோ அது சரியான தகவல்தான்னு நான் சொல்லவும்....
ஒரு அழகான எடுத்துக்காட்டு சொன்னான்....
அதுக்கு நான் சொன்னேன்... நானும் கீதையின் மறுபக்கம் என்ற புத்தகத்தை ரெபர் பண்ணிட்டுதான் எழுதினேன்னு சொன்னேன்.அதுல மகாத்மா காந்தி கொலை வழக்கை விசாரிச்ச நீதிபதியோட புத்தகத்துல ரெபர் பண்ணி தான் கி. வீரமணி எழுதி இருந்தார் சோ அது சரியான தகவல்தான்னு நான் சொல்லவும்....
ஒரு அழகான எடுத்துக்காட்டு சொன்னான்....
மாம். உங்களுக்கு மோசஸ் தெரியுமான்னு கேட்டான். தெரியுமேன்னு சொன்னேன். மோசஸ்க்கு என்ன ஸ்பெசாலிட்டின்னு கேட்டான். தெரியலேன்னு சொன்னேன் . மோசேஸ் ன் படம் பார்த்தீங்கன்னா அதுல ரெண்டு horns (கொம்பு) வச்சிருப்பாங்க. அந்த கொம்பு எப்படி வந்ததுன்னா ...
மோசேஸ் தேவனிடத்திலிருந்து இரண்டு நிருபங்களை வாங்கிவந்தார். தேவ னுடன் பேசுகையில் தேவ கிருபையினால் மோசஸ் இன் முகம் மிகப் பிரகாசமாக இருந்தது. என்று irukkum .
ஒரிஜினல் பைபிள் ஹிப்ரு மொழியிலிருந்து Latin க்கு மொழி மாற்றம் செய்யப்படும்போது பிரகாசமாக (Glorified ) என்ற வார்த்தை horn (கொம்பு) என்னும் அர்த்தத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டுவிட்டது. அதிலிருந்து மோசஸுக்கு தலை யில் இரண்டு கொம்பு உள்ளதாக பிற்காலத்தில் வந்தவர்கள் கதை கட்டி விட்டார்கள் என்று சொன்னான். ஆதாரமாக கீழ்கண்ட வாக்கியத்தைக் கொடுத்தான்...
The marble sculpture depicts Moses with horns on his head. This was the normal medieval Western depiction of Moses, based on the description of Moses' face as " cornuta " ("horned") in the Latin Vulgate translation of Exodus. The Douay-Rheims Bible translates the Vulgate as, "And when Moses came down from the mount Sinai, he held the two tables of the testimony, and he knew not that his face was horned from the conversation of the Lord."The Greek in the Septuagint translates as, "Moses knew not that the appearance of the skin of his face was glorified." [ 4 ] The Hebrew Masoretic text also uses words equivalent to "radiant", suggesting an effect like a halo. Horns were symbolic of authority in ancient Near Eastern culture, and the medieval depiction had the advantage of giving Moses a convenient attribute by which he could easily be recognized in crowded pictures.
சரி நல்ல கருத்தைக் கூறினானே என்று சந்தோஷப்படும்போது... சொன்னான்... எப்படி translation செய்தவர்களுக்கு மொழிப்பிரச்சனை இருந்ததோ அதே போல வீரமணிக்கும் அந்த ஆங்கிலப் புத்தகம் translate செய்யும்போது குழம்பி இருக்கிறார் என்று சொன்னான் .....
இப்படியாக பேசி முடித்துவிட்டு ...பிறகு சாப்பிட ஆரம்பித்தோம். மாம் நீங்க என்ன செஞ்சீங்க இன்னைக்குன்னு கேட்டான்.... நான்சொன்னேன் chicken kurumaa with rice ன்னு சொன்னேன். chikken நீங்க சமைச்சிங்களான்னு கேட்டான். ஆமாமென்று சொன்னேன். பாவம் அந்தக் கோழி உயிர் விட்டதுக்கு அர்த்தமே இல்லாமபோச்சு (there is no meaning for the chicken for sacrificing his life for u Mom... தயவு செஞ்சு இனி நீங்க சமைக்காதீங்க ஒழுங்கா நல்ல ஹோட்டல் ல வாங்கி சாப்பிடுங்க எனக்குன்னு அட்வைஸ் பண்ணி அரட்டை அடிசுகிட்டே சாப்பிட்டு முடிச்சோம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக