அன்பே சிவம்!
சிவமென்றால் அன்பு
அற்புதமான சொற்பொழிவு
ஒரு மணிநேரம் தொடர்ந்தது
சொற்பொழிவின் முடிவில்
நான் கேட்டேன்..
அன்பே சிவனென்றால்
அவன் கையில் எதற்கு சூலம்?
கையில் எதற்கு மழு?
கழுத்தில் எதற்கு விஷப்பாம்பு?
முகத்தில் அன்பெங்கே தெரிகிறது
ஆயுதமேந்தி அகோரமாகத்தானே இருக்கிறான்
கொலைவெறிதானே கண்களில் தெரிகிறது
அன்பானவனிடத்தில் ஆயுதம் எதற்கென்று
கேட்ட என்னை...
கண்டிக்கிறார்கள்...
நான்
வன்முறையைத் தூண்டுகின்றேனம்!
.
அப்படியெல்லாம் பேசாதீங்க சாமி கண்ணை குத்திடும்.. அதுக்குத்தான் அந்த சூலம்..
பதிலளிநீக்குஆமாங்க சாமி கண்ண குத்திடும் அந்த ஆயுதங்கள் எல்லாம் யாரு அன்பா நடக்கலையோ அவங்களை குத்துறதுக்குனு சொன்னா கூட அதிலும் வன்முறை இருக்கு,சாமியை காப்பாத்த முடியலேயே
பதிலளிநீக்கு"கேக்கறவன் கேனயாயிருந்தால் எருமை மாடும் ஏரொப்பிளேன் ஓட்டுமாம்" என்று பெரியார்தாசன் அடிக்கடி கூறுவார். அதன் பொருளை இன்றுதான் புரிந்துக் கொண்டேன்.
பதிலளிநீக்குhttp://arull.wordpress.com/2007/10/07/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/
சைவம், வைணவம் என்றால் என்ன? என்பதற்கு நம்மில் பெரும்பாலோர் அளிக்கும் விளக்கம் விபூதி பட்டை போட்டு சிவனை வணங்கினால் சைவம். நாமம் போட்டு விஷ்ணுவை வணங்கினால் வைணவம். .
வைணவம்: திருமால் மண்ணில் மானிட அவதாரமாக பல முறை பிறந்ததுண்டு. திருமாலின் பத்து (அல்லது அதற்கு மேற்பட்ட) அவதாரங்களைச் சொல்லலாம்.
சைவம்: சிவன் மண்ணில் மானிட அவதாரமாக பிறந்ததில்லை.
ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லாற் காயிரந்
திருநாமம் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ. - திருவாசகம்
கன்னபுரம் மாலே கடவுளிலும் நீ அதிகம்
உன்னிலும் யான் அதிகம்; ஒன்றுகேள்-முன்னமே
உன் பிறப்பு பத்தாம் ***"உயர் சிவனுக்கு ஒன்றுமில்லை"***.
என் பிறப்பு எண்ணத் தொலையாதே !
"சோதியனே துன்இருளே ***தோன்றப் பெருமையனே***" - திருவாசகம்
உலகில் ஒரு பெண்ணின் வயிற்றில் பிறவாத, ஒரு பிறவியும் இல்லாத, உருவம் இல்லாத சிவனுக்கு எப்படி மான், சூலம், மழுவெல்லாம்?
இப்பொழுது படியுங்கள் முதல் வரியை!
முடிந்தால் http://groups.google.com/group/theyva-thamizh வாருங்கள். விவாதிப்போம் மேலும்!