என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

திங்கள், 6 ஜூன், 2011

மர்ம யோகிராம் -(யோகாவின் யூ(யோ)கம்)

காவிகளின் ஆசைகள்
விசித்திரமாகவே இருக்கிறது

மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை 
முப்பெரும் ஆசைகளைக் கொண்டவர்களின்
கவசமோ காவிஉடை?

அன்றைய காவிகள்
காட்டை ஆண்டுகொண்டிருந்தனர் 

இன்றோ -
நாட்டை ஆள ஆவேசப்படுகின்றனர்

யோகக்கலை...
யோகம் கொடுக்குமென்று
யோகி துவங்கினார் கட்சியொன்று

எதிர்பார்த்த நிலையை எட்டவில்லை
யோசித்துப் பார்த்தபோது அசரீரி கூறியது
அன்னா வழியை பின்பற்று என்று

பற்றற்றவர் அல்லவே... பற்றிக் கொண்டார்

ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதமாம் 

லட்சம் ஏக்கரில் பந்தலுடன்
ஆயிரக்கணக்கான கழிப்பறையும்
நூற்றுக்கணக்கான மின்விசிறியாம்

பாதுகாப்புக்கு காவலர்களும்

நாடித்துடிப்பு சீர்படுத்த
நாற்புறமும் மருத்துவர்களும் 

காட்டிய கணக்கு மட்டும்
பதினெட்டு கோடி

காவிகட்டிய யோகி வருகிறார் -
லீலாவிரதம்  ஆரம்பிக்க - எப்படி?

கோட்டீஸ்வரன் அல்லவா?
மண்ணில் பாதம் படலாமா? 
ஒன்றிரண்டு கோடியல்ல
ஆயிரம் கோடிகளுக்கு அதிபதி

தனக்குச் சொந்தமான
ஜெட் விமானத்தில் வருகிறார்

யார் கேட்டார்கள்
யோகா படித்தால்
யோகம் அடிக்குமா என்று?

கோடிகள் சம்பாதிக்க முடிகின்ற 
மிகப்பெரிய யோகசாலையா இதுவென்று 
கேட்டுவிடத்தான் முடியுமா?
     
                                    ***

உழலுக்கு எதிரான போராட்டம் சரிதான் 

அத்தனை கோரிக்கைககளும் அருமை

வெளிநாட்டிலுள்ள  கறுப்புப் பணத்தை முடக்கி
அரசுடமையாக்கவேண்டுமாம்

சாதாரண யோகியாயிருந்தால்  நாமும்
இருக்கை தட்டி வாழ்த்து தெரிவிக்கலாம்
இருக்கை கூப்பி வரவேற்றிருக்கலாம்

ஆனால் -

அரியாசனக் கனவோடு கட்சி
ஆரம்பித்தவரல்லவா
காவிமீது அரசியல் சாயம்
அப்பட்டமாய்த் தெரிகிறதே

இதுவும் அதே மட்டையோ?

அதனால்தான் ஆதரிக்கத் தயங்குகிறேன்

இங்கு  ஒரு சந்தேகம் -

ராம்தேவ் வெளிநாட்டில் கணக்கு துவங்குமளவிற்கு
அவர் வருமானம் போதவில்லையோ?

அதனால் வந்த வெறுப்புதான்
உண்ணாவிரதமாக மாறியதோ?
  
சரி..

ஆரம்பித்துவிட்டார்

எந்தப் போராட்டத்திலும்

கைதுப்படலமொன்று அரங்கேறுமென்று
அறியாதவரா என்ன?

கைதுசெய்யக் காவலாளி வர
மேடையிலிருந்து கீழே குத்தித்து
சூழ்நிலையை சீர்குலைத்தவரை

வலுக்கட்டாயப்படுத்தி
வளைக்கவேண்டிய நிர்பந்தம்

இப்போது குறையோ
அரசாங்கத்தின் மேல்  

கைதுக்குப் பயந்து குதிப்பவர்
போராட்டம் நடத்துமளவுக்கு
தைரியம் கொண்டது எதனால்.....?

குழப்பத்துடன் நான்...

யாருக்காவது தெரியுமா - இந்த
யோகாவின் யூ(யோ)கம்
என்னவென்று?