சூரியன் அஸ்தமித்து
சூன்யமாகிவிட்டதாம்
சிலாகித்து சிந்தையிழக்கின்றனர்
ஆரற்சூரியனைக் கொட்ட ஓர்
ஆரியக் கொளவியால் முடியுமா?
நன்னூல் புனைவிரலை
நானூலால் கட்ட முடியுமா?
நானூலால் கட்ட முடியுமா?
அஸ்தமனமும் ஆகவில்லை
அழிந்துவிடவும் இல்லை
கிரகணம் பிடித்துள்ளது
சிறிது நேரம் மறைந்துதானிருக்கும்
கிரகணம் விலக்க
கோமியம் தெளிப்பவரல்ல கலைஞர்
பெரியார் பாசறை
நெசவு செய்த வைரம் இது
சில்லறை மேகங்கள்
சூழ்ந்தது உண்மைதான்
திரை விலக்கத் தெரியும்
திரள் படை கொள்ளும்
தக்கவற்றைத் தக்க வைத்து
தகாதவற்றைத் தளர்த்திவிட்டு
மீண்டும் முளைக்கும்
கோழியைக் கூவவைப்பவரை
கோட்டானை விழிக்கவைப்பவரை
கொடநாடு குலைத்துவிடமுடியுமா என்ன?
கோட்டானை விழிக்கவைப்பவரை
கொடநாடு குலைத்துவிடமுடியுமா என்ன?
"குலைப்பதால்" கழகத்தைக்
கலைத்து விடமுடியுமா என்ன?
கலைத்து விடமுடியுமா என்ன?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக