என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

வெள்ளி, 20 மே, 2011

கனிமொழியின் கவலை

கடைசியில் நடந்தே விட்டது
கனிமொழியின் சிறையடைப்பு சம்பவம்.

எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள்

கருணாநிதியின் மகளுக்கு 
களி உருண்டை

சிறையறையில் கொசு கடிக்கிறதாம்
பாவம் கொசு...

தீர்க்க தரிசியாம் தந்தை
திஹார்வாசம் எதிர்பார்த்ததால்தான்
இந்தி பயிற்று வித்தாராம் மகளுக்கு

இருபது சதவீதம்
இரும்புக் கம்பிகளுக்குப் பின்
அறுபது சதவீதம்
அப்பழுக்கற்றதா? ..ராசாத்தியின் கேள்வி

கனிமொழி தூய்மையானவர்
எந்த குற்றமும் செய்யாதவர் -
ராம் ஜெத்மலானியைத் தவிர
 யாரும் கூறவில்லையாம்

ராசா கைதானபோது துடிக்காதவர்
கனி கைதானபோது கலங்குகிறார்
உடன்பிறப்புக்களை வென்ற இரத்த பாசமாம்

கோடிகளில் ஊழல் செய்தவர்
 150 அடிகளில் முடக்கம்

தென்னிந்திய உணவு சலுகை உண்டாம்

எல்லோரும் பேசிக்கொள்வது சரி
கனியின் கவலையை யாராவது உணர்ந்தார்களா?
இரண்டு வாரத்தில்
தலை வெளுத்துவிடுமே - டை வேண்டும்

சாயம் வெளுத்துவிடுமே
இதுதான் கனியின்  கவலை


ஜெத்மலானிக்கு  நியாபகப்படுத்தவேண்டும்
டை சப்ளை செய்ய அனுமதி வாங்கச்சொல்லி...