என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

ஞாயிறு, 29 மே, 2011

அறிதலும் புரிதலும்(ரஜினி என்றொரு அபாயம்-விளக்கப்பதிவு)


ரஜினி என்றொரு அபாயம், என்று நான் இட்ட பதிவிற்கு வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி. புரிந்து கொள்ளும் பக்குவமுள்ள அனைவரையும் பாராட்டுகிறேன்.

வசவு சொன்ன அனைவருக்கும் மிக்கநன்றி காரணம்... வசவு செய்தவர்களுக்காக இன்னொரு பதிவிடும் வாய்ப்பு நல்கியதற்கு.

நான் ரஜினி என்ற நடிகனின், மனிதனின்  உடல் நிலை குறித்து தெளிவாகத்தான் கூறியுள்ளேன். அவர் உடல் நிலை சரியாகி நல்லவிதமாக வீடு சென்று சேரட்டும் என்று.  60  வயது கடந்த பின்னும் நடிப்பதில் தவறில்லை. வயதிற்கு ஏற்ற வேடமேற்று நடித்தால் அனைவரும் ரசிப்பார்கள். முதல் மரியாதை சிவாஜியை ரசிக்காதவர்கள் யாரேனும் உண்டா? இந்த சிவாஜி ராவ் 20 வயது பேத்திக்கு சமமான பெண்களை ஜோடியாக்கி  இன்னும் டூயட் பாடிக்கொண்டிருக்கிறாரே சரியா என்றுதான்  கேட்டேன்.  

இவருக்காக கண்மூடிவிட்ட அந்தக்   கண்முடித்தனமான ரசிகனின் குடும்பத்தையோ அந்த உயிரின்  விலையையோ உங்களால் ஏன் உணர்ந்து கொள்ள முடியவில்லை  என்றுதான் கேட்கிறேன்.  இதுதானா ரசிகர்களின் ஆக்கபூர்வமான செயல் என்று கேட்கிறேன்.
அவர் உயிருடன் இருப்பது என்னமோ    எனக்குப் பிடிக்காதது  போலவும்  அதனால்  அவரைப்பற்றி  எழுதி விட்டது போலவும், என்னமோ இந்தப் பதிவிட்டு  இதனால்  பிரபலமடைந்து
 தமிழகத்தின் ஆட்சிப்பீடத்தைப் பிடிக்க வழிதேடுவது போலவும்
அறிவார்ந்த  ரசிகப் பெருமக்கள் வசவு மழை பொழிகிறார்கள்.

உயிர் என்பது நிகர் இல்லாதது . அதன் மகத்துவம்  மிக  நன்றாக
உணர்ந்தவள்தான் நான்.

உயிர் என்பது ஏழை பணக்காரன், நல்லவன் கெட்டவன், அறிவாளி முட்டாள் என்ற அனைவருக்கும் பொதுவானது. போனால்  திரும்ப வராதது.  என்பதை அறிந்த மகாசனங்களே, ரஜினி மருத்துவமனையில் இருக்கிறார் என்று கேள்விப்பட்டவுடன் தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் முட்டாள்களாக ஏன் இருக்கிறீர்கள் என்றுதான் நான் ஆதங்கப் படுகிறேன்.  "உயிர் போவது அபாயமில்லையா? அதைத்தான் குறிப்பிட்டுள்ளேன். இந்த அபாயத்திலிருந்து தமிழக மக்கள் வெளிவறவேண்டுமே என்ற எண்ணம் கொண்டதால்" அப்பதிவு எழுதவேண்டிய அவசியம் வந்தது.

தாய் நாட்டிற்காக உயிர் த்யாகம் செய்தால் வணங்கலாம். அனால் ஒரு  நடிகன் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கிறார்   என்பதைக் கேட்டு ..... உயிர் விடும் அளவிற்கா நம் தமிழகம் அறிவிழந்திருக்கிறது? 

தமிழர்கள் அறிவிற்சிறந்தவர்கள் என்று உலகமே வியந்து கொண்டிருக்கும்
இந்தக் காலத்தில் இப்படிப்பட்ட செயல்கள் இன்னும் நடந்துகொண்டிருப்பது நமக்கு அவமானமில்லையா?

ரஜினியின் உடல் நலன் குறித்துக் கவலைப்பட்ட ரசிகப் பெருமக்களே மனதைத் தொட்டுச் சொல்லுங்கள் அந்த உயிர் விட்ட ரசிகனுக்காக வருத்தப் பட்டவர்கள் உங்களில் எத்தனை  பேர்?

எனக்காக உயிரையும் கொடுக்கும் ரசிகர்கள் உள்ளார்கள் என்று பெருமைப்பவரா உங்கள்  தலைவன்?

எந்த ஒரு  தலைவனும் தன்னைப் பின்பற்றுபவரின் வாழ்க்கையை உயர்த்துபவனாக , அதற்கேற்ற அறிவுரை தருபவனாக, உயிரைக் காப்பவனாக இருக்கவேண்டுமே தவிர, தன்னால் ஒரு குடும்பத் தலைவனை
இழந்து ஒரு குடும்பத்தை அனாதையாக்கிவிட்ட குற்றம் புரிந்ததாக மக்கள் அவரை ஏசும் அளவிற்கா  உங்கள் ஈடுபாடு அவர்மேல் இருக்கவேண்டும்?,

என்னைத் தாக்குவதாகக் கண்மூடித்தனமாக பின்னூட்டம்  இட்டவர்களின் அறிவின் அளவுகோல் உணர்ந்து கொள்ள முடிகிறது என்னால்.

சரியாகப் புரிந்து கொள்ளுங்கள் .... உடல்நிலை  சீர்பெற  வேண்டுமென பிரார்த்தனை செய்யுங்கள் பிராணனை விடாதீர்கள்.

கண்தானம் , ரத்த தானம் உடலுறுப்பு தானமேன்று ரசிகர்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கும் நடிகர்களும் உள்ள தமிழ்நாடுதான். அதே போல்  எல்லை மீறிப் போகும்போது ரசிகர் மன்றங்களே வேண்டாமென்று மொத்தமாக கலைத்துவிட்ட நடிகரும் உள்ள இதே தமிழ் நாடுதான்..
புகழ்ச்சியை விரும்பும் மக்கள் யாராவது  ஒரு  மாற்றுக் கருத்து கூறிவிட்டால் உடனே அதை எதிர்த்து   ஆயிரம் குரல்கள்  கிரீச்சிடுகின்றது  அதிலுள்ள உண்மை என்னவென்று  சிந்திக்கும் ஆற்றலைக்கூட இழந்துவிடுகிரார்களே என்பது எனது தற்போதைய கவலையாயுள்ளது.

எது  எப்படியோ.... உங்கள் ரஜினி...உடல் நலம் பெற்று மீண்டு வந்து .... தான் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கவேண்டுமேன்பதொடு ரசிகர்களுக்குத தக்க அறிவுரையும் வழங்கவேண்டுமென் என்று வாழ்த்துகிறேன். 


குறிப்பு:  ஒரு பின்னூட்டத்தில் ஒரு ரசிகர் குறிப்பிட்டார்... ஓசி ல ப்ளாக் கிடைச்சுட்டா என்னவேனா எழுதிடறதான்னு..
உம்மைப் போல் சில கண்மூடித்தனமான மக்க ளின்  விழிப்புணர்வுக்கு எம்மைப் போல் சிலர் எழுத  வேண்டும் என்பதற்குத்தான்  .... அக்கறையுடன் ப்ரீ ப்ளாக் சர்வீஸ் இருக்கிறது சகோதரா...

அடுத்து: cheap  pupllicity  தேடும் எண்ணமுடையவளாம் நான். அல்ல என்பது எனது பதில்.  அப்படி  நினைத்திருந்தால் கடந்த 15 வருடங்களாக 24  மணிநேரமும் வீட்டில் நெட் சர்வீஸ் உடன் இருக்கும் நான் இந்நேரம் எத்தனையோ cheap  postings  பதிவிட்டிருக்க முடியும்.

நம்முடைய தரம் அடுத்த மாநில நாட்டு மக்களால் சீப் ஆக பேசப்படுவதை தவிர்க்க வேண்டுமென்பதி லும், கண்மூடித் தனங்களை  ஊக்குவிக்கவெண்டாம்  என எடுத்துச் சொல்வதில்  அக்கரையுள்ளவள் .  அதுவன்றி நெட்டில் 24  மணி நேரமும் பதிவிட்டுக் கொண்டும் பினூட்டமிட்டுக்கொண்டும் இருக்கும் அளவிற்கு விருப்பமோ நேரமோ இல்லாதவள் என்பதையும் அனைவரும் அறிக !


indli என்றொரு வலைத்தளத்தை நேற்றைய முன்தினம் எனக்கு அறிமுகப்படுத்தி என்னுடைய அபாயப் பதிவைப் பதியச் சொல்லிய ஒரு சகோதரருக்கு என் நன்றிகள். இத்தளத்தில் இப்படி ஹிட் ராங்கிங் உள்ளது என்பதை இன்றுதான் அறிந்தேன்.

வசவாளிகளுக்கு எனது வாழ்த்துக்கள்!


நன்றி !