"ஆண்மைக்கு அழகு அடக்கியாளுதல்"
எப்போதும் போலவே ஆண்கள் -
பெண்களை அடக்கவேண்டுமென்பதாய்
தவறாகவே புரிந்து கொள்கின்றனர்
பெண்ணைக் கண்டதும்
மயங்கி சுயமிழந்து -
உன் -
"ஆண்மையை இழந்துவிடாதே
ஆண்மையை அடக்கு"
என்பதுதான் அர்த்தமென்று
எப்போதுதான் உணர்வீர்களோ
வக்கிர எண்ணம் கொண்ட
உக்கிர ஆண் வர்க்கமே !
கருத்துகள் இல்லை:
புதிய கருத்துகள் அனுமதிக்கப்படுவதில்லை.