என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

வெள்ளி, 6 மே, 2011

என் "புத்தி"சாலிப் "புத்தி"ரர்கள்


இரண்டு வைரங்களைச் சுமக்கும் பாக்கியம் பெற்றது என்கருப்பை.
 முதல் வைரம் பிரவீண்ராஜ் அடுத்த வைரம் பூர்விஷ்ராஜ்.

அறிவுக் கொழுந்துகள் என்பதை சிறுவயதிலேயே ஒவ்வொரு விஷயத்திலும் நிரூபித்தவர்கள்.

அபுதாபியில் தான் பிறந்து வளர்ந்தவர்கள். பிரவீண்ராஜ் இரண்டு வயதாக இருக்கும்போது ஆங்கிலத்தில்  A, B, C  சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தேன். குழந்தைக்கு ஈசியாக இருக்கவேண்டுமே என்பதற்காக முதலில் "O "  I , C    U  என ஆரம்பித்தேன்.

O வைப் படித்துவிட்ட அவன் அடுத்த ரவுண்ட் வரும்போது  C  சொல்ல,  உடனே கேட்டான்..." O " உடைஞ்சு போச்சா மம்மி? 

சரி LKG க்கு போகிறான்... அவங்க டீச்சர் சொல்லி இருக்காங்க GOD IS EVERY WHERE  ன்னு,  உடனே டீச்சர் கிட்டே சொல்லி இருக்கான் "NO MISS GOD IS IN THE PUJA ROOM ".  அப்புறம் மிஸ் ஏதேதோ விளக்கம் சொல்லியும் திருப்தி படாமல் வீட்டுக்கு வந்தவுடனே மாம், மிஸ் க்கு GOD  எங்க  இருக்கார்ன்னு  கூட  தெரியலே மாம் . ன்னு சொல்றான்.

அவனுக்காகவே... ஹால், கிச்சன்  , பாத்ரூம் ன்னு எல்லா சுவத்துலயும் GOD pictures  ஒட்டி வச்சேன்.

நான் இரண்டாவது வைரத்தைக் கருவில் சுமக்கும்போது, தம்பிப்பாப்பக்கு, தம்பிப் பாப்பாக்குன்னு பாதம் பிஸ்தா எல்லாம் உரிச்சு என்னை சாப்பிடவச்சு என் வயித்துல   இருக்கும்போதே அவன் தம்பி பூர்விஷ்ஐ வளர்த்தவன். தம்பி மேல அவ்வளவு ஆசை. பாசம்.

அடுத்த குழந்தை பிறந்தவுடனே முதல் குழந்தை ஏக்கம் வச்சுடும்னு எல்லாரும் சொல்றதால நான் பிரவீண் முன்னாடி பூர்விஷ்ஐக் கொஞ்ச  மாட்டேன். ஆனா பிரவீண் தம்பிப் பாப்பா தம்பிப் பாப்பான்னு எப்பவும் அவனையே கொஞ்சிகிட்டிருப்பான்.

உண்மைய சொல்லனும்னா  பூர்விஷ்க்கு நான் எதையுமே சொல்லிக்
கொடுத்ததில்ல.  எல்லாமே அவன் அண்ணன் பிரவீண் சொல்லிக் கொடுத்ததுதான்.   அண்ணா சொன்னாதான்  கேப்பான். எதையுமே அண்ணா சொன்னா  தான் நம்புவான்.

உதாரணமா சொல்லனும்னா....

 பூர்விஷ் ஸ்கூல் படிக்கும்போது நான் 2+2 = 4  ன்னு  சொன்னா உடனே
அண்ணாவை  திரும்பி பார்ப்பான். அவன் கண்ணுலயே OK  சிட்டு(செல்ல பெயர் "சிட்டு"  - இதுவும் பிரவீண்  வச்சதுதான் )  ன்னு சொன்னால் அவனுக்கு நம்பிக்கை வந்துடும்

"மம்மி சரியாதான் சொல்றாங்கன்னு."  
அண்ணா சொல்றதுதான் அவனுக்கு வேத வாக்கு.

பூர்விஷ் இருக்கே அது பயங்கர வாலு. துறு துறு தான் எப்பவும். அபுதாபில RUWAIS ஹாஸ்பிடல்லதான் பிறந்தான். பிறந்த அன்னைக்கே ஒரு philipino நர்ஸ் நாப்கின் மாத்தும்போது நேரா அவ முகத்துல ஒண்ணுக்கு அடிச்சி ... "OO ... he  is  a  real  boy " ன்னு அவளை சொல்ல வச்சான்.

அமெரிக்கன் ஸ்கூல் O  லெவல் சிலபஸ் தான் படிச்சான்.  LKG படிக்கும்போது  தினம் ஸ்கூல்க்கு போகும்போது அவன் கிளாஸ் டீச்சர் க்கு ஒரு ரோஜாப்பூ கொடுக்கணும். அவ பிரிட்டிஷ் டீச்சர். குழந்தைங்க கிட்டேருந்து பூ வாங்கிகிட்டு கன்னத்துல முத்தம் கொடுத்து ... குட்மோர்னிங் I  Love  you  ன்னு solli  தான் எல்லா குழந்தைங்களையும் கிளாஸ் க்கு உள்ளே கூட்டிகிட்டு போவா. வீட்டுத் தோட்டத்துல ரோஜாப்பூ செடிகள்  இருந்ததால தப்பிச்சேன். சிலநேரம் நம்ம வீட்டுல பூ இல்லன்னா பக்கத்து வில்லா பாகிஸ்தானி வீட்டு ரோஜாப்பூவையும் கொடுத்தனுப்புவேன்.

படிப்புல  பயங்கர  இன்டெரெஸ்ட். எப்பவும்  புக்கும் கையுமா தான் இருப்பான். ஸ்கூல் க்கு போறதுக்கு முன்னாடிஎல்லா ஸ்டோரி புக்ஸ் உம் நான் படிப்பேன் அவன் புரிஞ்சுக்குவான்.  LKG படிக்கும் போது ஒரு நாள் ரொம்ப உடம்பு முடியாம ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருந்தோம். அப்போ அவனுக்குத் தேவையான புக்ஸ் எல்லாம் எடுத்துகிட்டு போய் இருந்தேன். அவனுக்கு படிக்கத் தேராது
சின்ன வயசுல அவனோட கிளாஸ் மேட் பர்த்டேக்கு   அவங்க வீட்டுக்குப் போனோம்.
அவங்க பார்ட்டி முடிஞ்சவுடனே பசங்களுக்கு return  gift  கொடுக்க எல்லா குழந்தைகளின்
பேரையும் எழுதி வச்சு gifts  எல்லாம் pack  பண்ணி வச்சிருந்தாங்க. இவன்பேர்
கொஞ்சம் வித்யாசமா இருக்கறதால.... Poorvish  னு எழுதரதுக்குப் பதிலா purvish  ன்னு எழுதிட்டாங்க.
அன்னைக்கு அந்த அங்கிள் ஐயும் ஆண்டியையும் நடு ஹால்ல வச்சு கேட்ட கேள்வி...

"எந்த ஸ்கூல் ல அங்கிள் படிச்சீங்க என் பேர் கூட  உங்களுக்கு எழுத தெரியலே?"

இரண்டாவது படிக்கும்போதே இராமாயணம் படிச்சிருக்கான்.எந்த  கடைக்குப் போனாலும் எதாவது ஒரு புக் வாங்காம வரமாட்டான் . படிக்கறதுல அவ்வளவு   இன்டரெஸ்ட். அப்போல்லாம் சோனி TV ல இராமாயணம் போடுவாங்க. இவனுங்க இரண்டுபேருக்கும் ஹிந்தி, உருது, நல்லா  தெரியும். சோ, ஹிந்தில இராமாயண் ரொம்ப விரும்பி பார்பாங்க.

ஒருமுறை லீவுக்கு  இந்தியா போயிருக்கோம். சன் டிவி யோ ஜெயா TV யோ இராமாயன் போய்க்கிட்டிருக்கு. கொஞ்சநேரம் நின்னு பார்த்தான். பார்த்துட்டு அவன் சொன்னது... "ஓ.. இது ராஜகோபாலாச்சாரி எழுதினது base  பண்ணி எடுத்திருக்கு" ன்னு சொல்றான். அப்போ அவனுக்கு வயசு வெறும் 7. ரொம்ப ஆச்சரியப் பட்டேன்   . கதை  படிக்கறது  மட்டுமில்லாம  அதை  யார்
எழுதியிருக்காங்கன்னும் மனசுல நிறுத்தி வசிருக்காநேன்னு ரொம்ப ஆச்சரியப் பட்டாங்க என் தம்பி அக்கால்லாம். 

அப்போதான் ஒரு நாள் ஷாப்பிங் போறோம் நான், பிரவீண், பூர்விஷ் எல்லாம்... அப்படி கடைவீதியில நடந்துகிட்டே போறோம். ஒரு ஆள் காது கேக்காதவர் செவிட்டு மிஷின் காதுல வச்சிக்கிட்டு நடந்து போய்கிட்டிருக்கார். எங்களை   அவர் கடந்து போகவும் அவரை பின்னாடி இருந்து ஒரு ஆள் கூப்பிடவும் சரியா இருந்தது. ஆனா இவருக்கு காது கேக்காததால அவர் பாட்டுக்கு போய்கிட்டிருந்தார்.... உடனே நான் அவர் தோள்ல தட்டி... அங்க உங்களை கஊப்பிடறாங்க பாருங்கன்னு சொன்னேன். எல்லாருமே அப்படிதான் செஞ்சிருப்பாங்க. ஆனா பூர்விஷ் என்ன பண்ணினான்...

"அங்கிள் உங்க ஹியரிங் மசின்  வொர்க் பண்ணல  பாருங்க" ன்னு சொன்னான்

ஆச்சரியமா ஆகிடுச்சி.  பிரச்னையை மேலோட்டமா பார்த்து அவருக்கு உதவி பண்ற என்புத்தியையும் அந்தப் பிரச்சனையின் ஆணிவேரை ஒரே நொடியில கிரகிச்சு அவருக்கு வெளிப்படுத்தின அந்த  நுணுக்கமான அறிவையும் பார்த்து பிரமிச்சுப் போயிட்டேன்.






1 கருத்து:

  1. பிரச்சனையின் ஆணிவேரை ஒரே நொடியில கிரகிச்சு அவருக்கு வெளிப்படுத்தின அந்த நுணுக்கமான அறிவையும் பார்த்து பிரமிச்சுப் போயிட்டேன்.//
    கதை படிக்கறது மட்டுமில்லாம அதை யார்
    எழுதியிருக்காங்கன்னும் மனசுல நிறுத்தி வச்சிருக்கான்// :-))

    பதிலளிநீக்கு