என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

ஞாயிறு, 19 ஜூன், 2011

தந்தையர்தின வாழ்த்து



ஓங்கிய தனிப்பெருமை கொண்டது நம்நாடு
ஏங்கிடுவர்  அயலோரும்  இதுபோல  வேண்டி
தங்கத்தினும் மேன்மையதாய் தம்குழந்தை தன்னை
பொங்கிடும் நல்லன்புட னேபோற்றி வளர்த்திடுவர்

தந்தை முகம் கண்டவுடன் பச்சிளம் குழந்தை
தன்னிதழைக் கொஞ்சமாகத் தளர்த்திச் சிரிக்கும்
தவழ்ந்து செல்லும்வயது வந்தவுடனே யதுவும்
தாவிச் சென்று தந்தை மார்பில் ஏறிக்கொள்ளும்

கொஞ்சும்மொழி பேசிப்பேசி நடக்கும் வயதில்
பஞ்சுஇதழ் பதித்துதினம் முத்தம் கொடுக்கும்
ஊட்டிவிட தந்தைகையால் உண்ணவும் இசையும்
"கூட்டிச்செல்" கடைத்தெருவுக் கெனகத்தியும் இரையும்

பள்ளிசெல்லும் வயதிலுள்ள குழந்தைகள் யாவும்
கள்ளத்தனம் நிறையதந்தை துணையுடன்  செய்யும்
வெள்ளிக்காசு கொட்டியபோல் சலசல வென்று
துள்ளித்துள்ளி ஓடுவதில் கண்களும் நிறையும்

வாலிபனாய் மாறும்வரை துணையாய் நிற்பார்
வளர்ந்துவிட்ட பின்னாலோ தோழமை காப்பார்
கல்விபயின்று  வேலையிலே அமர்ந்தவுட தனது
கண்மணிக்கு கல்யாணம் செய்தும் வைப்பார்

இல்லறத்தில் இணைந்தவர் கள்இன்னொரு குழந்தை
ஈன்றெடுத்து இவர்கையில் அவற்றைக் கொடுப்பார்
அப்பாவாய் மகனுமவன் மாறிவிட் டாலும்தன(து)
அப்பாவைத்   தப்பாமல் கண்ணெனக் காப்பான் .

தினந்தினமும் தந்தையோடு அன்பைப் பகிர்ந்து
வாழுகின்ற வாழ்க்கைதான் அப்பாவிற் கின்பம்
அப்பாக்கள் தினமென்று தனியாய் எதற்கோ?- இது
ஆங்கிலேயன் கொண்டுவந்த காட்ச்சிக் கிறுக்கோ?

அப்பாவே யாரென்று தெரியா மல்தான்
ஆங்கிலேயர்  பலபேர்கள் பிறக்கின் றார்கள்பின்
அப்பாவின் தினமென்று எதெற்கொரு  நாளோ ...
அப்பப்பா இதுஎந்த விதத்தில் முறையோ?

1 கருத்து:

  1. நல்ல கவிதை .. ஆனால் இந்த வரிகள் பிழையானவை

    //அப்பாவே யாரென்று தெரியாமல்தான்
    ஆங்கிலேயர் பாதிக்குமேல் பிறக்கின் றார்கள்பின்
    அப்பாவின் தினமென்று எதெற்கொரு நாளோ ...
    அப்பப்பா இதுஎந்த விதத்தில் முறையோ?//

    அப்பாவே யார் என தெரியாமல் ஆங்கிலேயேர் பிறப்பதாக நீங்கள் கூறியது வன்மமான ஒன்று, அல்லது சரியான தகவல்கள் தெரியாமல் பேசுகின்றீர்கள்.

    அப்படி எதாவது புள்ளிவிவரம் இருந்தால் சொல்லுங்கள் ... அப்பா பேர் தெரியாமல் பிறக்கும் குழந்தைகள் நம் நாட்டிலும் அதிகமனோர் இருப்பதையும் மறந்துவிடுகின்றீர்கள் போலும்.

    ஆங்கிலேயேர் என எந்த நாட்டை எல்லாம் சேர்த்து சொன்னதில் பிழை இருக்கு. ஆங்கிலேயே என்போர் பிரிட்டன், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியுசிலாந்து, தென்னாப்பிரிக்கா முதல் இந்தியா, சிங்கப்பூரில் கூட் இருக்கின்றார்கள். இவர்களில் பாதிப் பேருக்கு அப்பாப் பேர் தெரியவிலை என சொல்வது எவ்வகை நியாயம்.

    ஏனெனில் நான் கண்டவரை அனேக ஆங்கிலேயேர்கள் குடும்பம் சகிதமாகவே வாழ்கின்றார்கள். சொல்லப் போனால் 75 சதவீதமானோர் குடும்பத்தோடு தான் நம்மைப் போலவே வாழ்கின்றார்கள். மீதி இருப்போரில் பல விவாகரத்து ஆனவர்கள், ஒற்றைப் பெற்றோர், மறுமணம் செய்தோர் - அவர்களின் குழந்தைகள் கூட தமது அப்பா அம்மா யார் என்பதை அறியமல் இல்லை..

    கவிதைகள் எழுதும் போது தரவுகளில் கவனமாக இருக்க வேண்டாமா?

    வெளியில் வந்து உலகை கவனிக்க வேண்டும் சகோதரி...

    மேற்கொண்டு பேசுவோம்.. நன்றிகள் !
    ******************************'

    குற்றம் செய்த பிள்ளைகளை போலிசில் கொடுத்த பெற்றோர்கள்

    பதிலளிநீக்கு