என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

திங்கள், 20 ஜூன், 2011

ஊர்க்குருவி!

மாற்று(க்) கருத்து
உயரே பறந்தாலும்
ஊர்க்குருவி பருந்தாகுமா? - என்று
உரக்கப் பேசும் கவிஞர்களே...
ஊர்க்குருவி  ஏன் பருந்தாக வேண்டும்?

நற்பழங்கள் தானியங்கள்
நன்னீரருந்தும் - இக்குருவி
அழுகிய பழங்களொடு பிணங்களையும்
எச்சில் சளியென்று இன்னபிற திண்ணும்
பருந்தோடு ஒப்புமோ?

கவிதைக்கு வேண்டும் கற்பனை - ஆனாலும்
காக்கவும் வேண்டும் அதன் கற்பினை
உயரே பறந்ததனால் கர்வம் கொண்டதாய்த்
தவறாய் கற்பிதம் கொண்டோரே...

உயர்ந்தது ஊர்க்குருவிதான்
உயரப் பறந்தாலும்
உயர்வில்லாதது பருந்து.
மாற்றுங்கள் பழமொழியை

" உயர உயரப் பறந்தாலும்
ஊர்க்குருவியாகுமா பருந்து என்று.

1 கருத்து:

  1. அன்பின் லதாராணி அவர்களுக்கு,

    இந்தப் பதிவு சொல்லும் கருத்து என்ன? வெறும் 20th என்று மட்டுமே பதிவிருக்கின்றதே!

    தங்களின் யாதுமானவள்@ஜிமெயிலுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருக்கின்றேன். கிடைத்ததா

    பதிலளிநீக்கு