எனக்குள் ஒரு ஆழமான காதல்
உன்னதமனானது உயர்வானது ...
நம்பமுடியாதது ஏன் - யாராலும்
கற்பனையே செய்ய முடியாதது
எதையும் எதிர்பார்க்காததல்ல
நிறைய எதிர்பார்ப்புகள் கொண்டது
அருகருகா அமர்ந்திருக்கத் தேவையில்லை
ஆறுதலாகப் பேசஒரு தொலைபேசி அழைப்பு
ஒன்றாயமர்ந்து உணவருந்தத் தேவையில்லை
சாப்பிட்டாயா என்ற அக்கறையான ஒரு விசாரிப்பு
பணமோ பொருளோ தேவையில்லை
பத்திரமாக இருக்கிறாயா என்ற பரிதவிப்பு...
உடல் ஸ்பரிசம் தேவையில்லை
பாசமுடன் எப்போதாவது... ஏதாவது ஒரு வார்த்தை
கடவுள் இல்லைஎன்று
இப்போதுதான் சொல்கிறேன்
கடவுளைத் தவிர வேறு
எதுவுமே இல்லையென்று
கற்சிலைகள் முன் நின்று
அழுத காலங்கள் நிறைய -
மீண்டும் அழவேண்டும்
உள்ளங்கை இறுகப் பற்றிக் கொண்டு...
கடற்கரைக் காற்று
இப்போதுதான் ஒத்துக்கொள்வதில்லை
மணற்பரப்பில் பாதங்கள் அழுந்த
ஓடிய நாட்கள் அதிகம் உண்டு
மீண்டும் சுவாசிக்ச்க வேண்டும்
கைகோர்த்து நடந்துகொண்டே..
கிடைக்குமா....
அக்கறையான விசாரிப்பு
எனக்கான பரிதவிப்பு...