என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

வெள்ளி, 15 ஜூலை, 2011

கடவுளும் முதிர் கன்னிகளும் !

தாலிவாங்கப் பணமில்லாமல்
முதிர் கன்னிகள் 
காலங்காலமாய்
முடங்கிக் கொண்டிருக்கிறார்கள்
தங்கள் வீட்டிற்குள்

தகத்திலே செய்த கடவுள்களும்
அவர்களை அலங்கரிக்க 
ஆபரணங்களும்
காலங்காலமாய் அடைபட்டிருக்கிறது
பாதாள அறைகளுக்குள்

கன்னிகளைக் கரைசேர்க்கத் 
தங்கம் வேண்டும்
கடவுளுக்கு எதற்கு?

தங்கத்தில் தாலி வேண்டுமென
மாப்பிள்ளை அடம்பிடிக்கிறான்...சரி 

தங்கத்தால் தன்னை 
அலங்கரிக்க வேண்டுமென்று
கடவுள் அடம்பிடிக்கிறானா என்ன? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக