என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

சுதந்திரதின வாழ்த்துக்கள்...


 

சுதந்திரமாய்க் கொடியேற்றும்
நிலை கூட இழந்து -
நான்கடுக்குப் பாதுகாப்போடு
நாடுமுழுவதும் கொடியேற்றி மகிழும்
இந்திய மக்களனைவருக்கும்
சுதந்திரதின வாழ்த்துக்கள்...

நம்நாட்டுப் பணத்தையெல்லாம்
வெளிநாட்டில் பதுக்கிவைத்துவிட்டு
வெள்ளையனை வெளியேற்றி விட்டதாய்க்
கொண்டாடும் அனைவருக்கும்
சுதந்திரதின வாழ்த்துக்கள்...

வெள்ளையனை விரட்டிவிட்டு
அவன் மொழியை அடைகாக்கும்
மானமுள்ள இந்தியர்கள் அனைவருக்கும்
சுதந்திரதின வாழ்த்துக்கள்...

அரசாங்கம் ஆங்காங்கு ஏற்றுகின்ற கொடியை
அண்ணாந்து பார்க்கக் கூட தெம்பின்றி வாழுகின்ற
ஏழை இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும்
சுதந்திரதின வாழ்த்துக்கள்...

மதவெறியும் ஜாதிவெறியும் தலைவிரித்து ஆட
மதபோதகர் கணக்கிலெல்லாம் கோடிகோடி சேர
விளையாட்டு வீரன் கூட ஏலத்திலே போக
இருமாந்து ஜெய்ஹிந் சொல்கின்ற எல்லோர்க்கும்
சுதந்திரதின வாழ்த்துக்கள்...

மாகோயா பூஉண்ணும் பட்டினிக் கொடுமை
கோடிகளில் ஊழல் செய்யும் அரசியலார் அராஜகம்
அத்தனையும் பார்த்துக் கொண்டே
அமைதியாய் நகர்கின்ற
அஹிம்சாவாதிகள் அனைவருக்கும்
சுதந்திரதின வாழ்த்துக்கள்...

ஒருநாள் விடுமுறை வெட்டிச் செலவு எட்டுகோடி
இதைத் தவிர சுதந்திரநாள் வேறு என்ன கண்டது?
என்னமோ போங்கள் நானும் சொல்கிறேன்
எல்லோருக்கும் சுதந்திரதின நல்வாழ்த்து!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக