என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

அந்த குருகுலம்....


 
மரத்தடி நிழலில் மாணவர் அமர்த்தி

விஞ்ஞா னத்தை வளர்த்திட வில்லை
மரத்திட்ட மனிதம் உயிர்த்திட நமக்கு
அஞ்ஞா னத்தை அகற்றிட முனைந்தார்
உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்னும்பேதம்
ஊரை விட்டு ஒழிப்போம் என்றார்
செயலதுசெய் திடகுலத் தொழில் ஒழித்து
கல்வியை அனைவரும் கற்போ மென்றார்

மென்றே ஆரியர் நம்குலத் தோரை
மெல்லவே அடிமை யாக்கிட்டார்
கொன்றே அவரின் சூழ்ச்சிக ளெல்லாம்
குடிகள் நம்மைக் காத்திட்டார்
அன்றே ஆரியர் இவர்பெயர் சொன்னால்
அங்கம் எல்லாம் வேர்த்திட்டார்
மன்றந் தன்னில் இவர்குரல் கேட்டால்
மயங்கி அவரும் விழுந்திட்டார்

கடவுளும் மதமும் மனிதன் தன்னைமுட்
 டாளாக்கும் முறைக ளென்றார்
கடவுள் என்னும் கற்சிலை யெல்லாம்
காலில்போட் டுமிதிப்போ மென்றார்
கடவுள் கதையைத் தாங்கி நிற்கும்
காவியமெல் லாமெரிப்போ மென்றார்
கடவுள் ஒழிப்பும் மதங்கள் ஒழிப்பும்
கறையைத் துவட்டும் ஆயுதமென்றார்

கருத்துக்கள் பரப்பி கயமைத் தனத்தினை
காவு வாங்கிட முனைந்திட்டார்
தெருத்தெருவா கத்தோழர் களுடனே
தொடர்சொற் பொழிவுகள் ஆற்றிட்டார்
நெருப்பென கக்கிய வார்தையினாலே
நையப் புடைத்தே விரட்டிட்டார்
செருப்புகள் மாலையாய்த் தந்தார்
கயவர் சிரித்தே அதனை ஏற்றிட்டார்

பெண்கள் அடிமையாய் இருப்பதைக் கண்டு
கொதித்தே அவரும் எழுந்திட்டார்
பெண்ணும் ஆணுக் கிணைதா னென்றே
ஓங்கிக் குரலும்  எழுப்பிட்டார்
வள்ளுவன் பெண்ணை ஆணின் அடிமை
யென்றே குறளில்  சொல்லுவதை
எள்ளள வேனும் பயமின்றி துணிவுடன்
எல்லோர் முன்பும் மொழிந்திட்டார்

அடிமைத் தனத்தினை சம்மட்டி கொண்டு
ஓங்கி  அடித்து ஒழித்திட்டார்
செதுக்கிச் செதுக்கிச் மனிதனை மனிதனாய்
மாற்றிடும் உளியாய் மாறிட்டார்
விருப்புடன் யாரும் அவர்பின் னாலே
ஓடியே சென்று சேர்ந்திட்டார்
கருப்புச் சட்டையே அடையா ளமாகக்
காலம் முழுதும்  அணிந்திட்டார்

ஒவ்வொரு தமிழனும் வாழ்க்கையைப் படித்திட்ட
பெரியார் என்னும் குருகுலமே
எவ்விதப் பயனும் தனக்கென் றென்னா
தகைசால் மானப் பெட்டகமே
ஒவ்வொரு தமிழனின் குருதிக்குள்ளும்
நெருப்பாய் நீயே இருக்கின்றாய்
எவரினும் உயர்வாய் நீயேஉல கில்என்றும்
இதுபோல் நிலைத்தி டுவாய்!

                 **********************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக