விடுதலை நாளேட்டில் வந்த செய்தி ................
குவைத்தில் தலைவருக்கும் சீடருக்கும் விழா
குவைத், அக். 7- குவலயம் போற்றும் பெரியார், அண்ணா குவைத்தில் தலைவருக்கும் சீடருக்கும் விழா. குவைத்தில் தந்தை பெரியார் அவர்களின் 133 ஆவது பிறந்த நாள் விழாவும், பேரறிஞர் அண்ணா அவர்களின் 103ஆவது பிறந்த நாள் விழாவும் 02.10.2011 அன்று மாலை 7.00 மணிக்கு, மன் ஓ சால்வா உணவகத்தில் ஆசிரியர் பூங்காவனம் நினைவரங்கத்தில் கோலாகலமாக நடந்தேறியது. தந்தை பெரியார் நூலகமும் தாய்மண்கலை இலக் கியப் பேரவையும் சேர்ந்து நடத்திய இவ்விழாவிற்கு அனைத்து குவைத் தமிழ் அமைப்புகளும் வந்து சிறப்பித்தனர்.
விழாவின் தொடக்கமாக, தந்தை பெரியார் பன்னாட்டு மய்யத்தின் குவைத் கிளைச் செயலாலர் திருமதி.லதாராணி அவர்களின் தகப்பனார், ஆசிரியர் பூங்காவனம் (ஆற்காடு) அவர்களின் படத் தினைத் திறந்து வைத்து நூலகக் காப்பாளர் செல்லப்பெருமாள் அவர்கள் உரையாற்றினார்கள். தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த ஆசிரியர் பூங்கா வனம் தி.மு.கழகத்தின் தீவிர தொண்டர். ஆற்காடு தி.மு.க வட்ட ப் பிரதிநிதியாக இருந்தவர்..கடந்த ஜூலைமாதம் 25 ஆம் தேதி மறைந்த அன்னாருக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலியோடு விழா தொடங் கியது. அதைத்தொடர்ந்து, நெ.சு. சுந்தரவடிவேலு நூற்றாண்டை முன்னிட்டு தந்தை பெரியார் நூலகத்தின் தொடர் சொற்பொழிவாக நீரியல் நிபுணர், ஆராய்ச்சியாளர் முனைவர் திரு. குமார் அவர்கள் சேது சமுத்திரத் திட்டத்தின் முதற்கட்ட சொற்பொழிவாற்றினார். மிகச் சிறப்பாக அமைந்த இச்சொற்பொழிவில் சேது சமுத்திரத் திட்டத்தின் நன்மை தீமைகளையும் சேது சமுத்திரத் திட்டத்தின் அவசியத்தையும் புள்ளிவிவரங்களுடன் விளக் கினார்.
இராவணகாவிய சொற்பொழிவாளர் திருமதி. லதாராணி அவர்கள் பேசுகையில், எத்தனையோ மேடையில் பேசியிருந்தாலும் தன் வாழ்க்கை யிலேயே மிகச்சிறப்பானதொரு மேடையாக இதுவே இருக்குமெனத் தெரிவித்தார். தந்தை பெரி யாரையும் பேரறிஞர் அண்ணாவையும் தனது இரு கண்களாகவே போற்றி வாழ்ந்த தனது தந்தையாரின் நினைவரங்கத்தில் அவ்விரு மாமேதைகளின் பிறந்த நாள் விழாவினைக் கொண்டாட அதில் பங்கு கொண்டு பேசும் பேறு தனக்குக் கிடைத்ததென்று மிகவும் நெகிழ்ச்சியோடு பேசினார். அரசியல் மேடைகளில் தன் தந்தை ஆற்றிய உரைகளையும், அவரின் டைரியிலிருந்து எடுத்த குறிப்புகளிலிருந்து தந்தை பெரியார் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களைப்பற்றிய சுவை யான நிகழ்ச்சிகளைக் கூறி இவ்விழாவினை மேலும் சிறப்பித்தார்.
குவைத் செல்லபெருமாள்
தொடர்ந்து,குவைத் தந்தை பெரியார் நூலகக் காப்பாளர் மானமிகு. செல்லபெருமாள் அவர்கள் "மூவர் விடுதலைக் கோரிக்கையை நிலைப்படுத்தி , அம்மூவருக்கும் விடுதலை கொடுத்தே தீரவேண்டு மென்று அழுத்தமாகப் பேசியும், இந்தியாவில் மரணதண்டனை ஒழித்துவிடக்கூடாது என்று கூறியதோடல்லாமல், இராஜீவ் காந்தி கொலை வழக்கை மறுவிசாரணைக்குட்படுத்தி உண்மையான குற்றவாளிகளை தூக்கிலிடவேண்டுமென்றும், அதே போல தருமபுரி பஸ் எரிப்புச் சம்பவத்தில் மூன்று மாணவிகள் கருகிய வழக்கில் உள்ள கொலையாளிகளையும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக தூக்கிலிடவேண்டுமென்றும் பேசினார். தமிழக சட்டமன்றத்தில், அமைச்சர்கள் சினிமா பாடல்கள் பாடுவதையும், முதலமைச்சரை "தங்கத் தாரகை" என்று குறிப்பிட்டுப் பேசுவதையும் வன்மையாகக் கண்டித்துப் பேசினார்.
தாய்மண் கலை இலக்கியப் பேரவை செயலாளர் அன்பரசன் பரமக் குடி நிகழ்ச்சி பற்றி பேசினார். தொடர்ந்து அறிவழகன் சிற்றுரை ஆற்றினார். காயிதே மில்லத் பேரவைத் தலைவர் அன்வர் பாஷா அவர்கள் உரை துவக்கத்தில், திருமதி. லதாராணி அவர்களின் தந்தை மறைவிற்கு இரங்கல் தெரிவித்து "தொண்டர் நினைவரங்கத்தில் தலைவர்களின் பிறந்தநாள் விழா" எனக் கூறினார். தொடர்ந்து தந்தை பெரியார் அவர்களின் சீரிய கொள்கை களைப் பற்றி சிறப்பாகப் பேசினார்.
அதைத் தொடர்ந்து முத்தமிழ் அறிஞர் மன்றச் செயலாளர் மதிவாணன், செல்வம் ஆகியோரும், குவைத் மறுமலர்ச்சிப் பேரவை மணிகண்டன், கவிஞர் சத்யா வளநாடன் மற்றும் பலர் சிறப்புரை யாற்றினர்.பெரியாரின் சீரிய தொண்டர் இரகமத் துல்லா நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்க திருச்சி அமானுல்லா நன்றி கூறினார். தந்தை பெரியார் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு விழாவினை முன்னிட்டு ஏற்பாடு செய் திருந்த சிறப்பு விருந்துடன் இரவு 10:30 மணியளவில் விழா இனிதே நிறைவுபெற்றது..
செய்தி: லதாராணி, குவைத்
செய்தி: லதாராணி, குவைத்