என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

ஞாயிறு, 16 அக்டோபர், 2011

பொற்குழலிக்குப் பிறந்த நாள் வாழ்த்து


 சகோதரர் வித்யாசாகர் அவர்களின் புதல்வி பொற்குழலியின் முதல் பிறந்த நாளுக்கு நானனுப்பிய வாழ்த்து!



பொற்குழலிக்குப் பிறந்த நாள் வாழ்த்து

அமிழ்தினை  விஞ்சிய சுவைதனைக் கொண்ட 
தமிழ்மகள் பெற்ற அருந்தமிழ்க் கவியின்
அருமை மகளென அவனியி லுதித்த
சிறுபொற் குழலிக் கென்றன் வாழ்த்து!

முத்தே மணியே முத்தமிழ் வரவே
தத்தித் தவழும் தமிழ்ப் பூங்கொத்தே
இத்தரை மீதினில் இனிதாய் வாழ
முத்திரை யாக வாழ்த்தினேன் இன்று!

மூத்தோர் ஆசிகள் முறையோ டடைந்து
பூத்த முல்லைப் பூவிவள் தானும்
ஏத்திடும் எல்லா வளம்பெற் றுலகில்
பாத்திர மாக வாழ்த்தினேன் இன்று!

கல்வியில் கலையினில் அன்பினில் பண்பினில்
சொல்லிடு மாறு சிறப்புடன் வாழ்ந்திட
உள்ளவ ரெல்லாம் வாழ்த்திடு மாறே
உள்ளமு வந்து வாழ்த்தினேன் இன்று!

நீண்ட ஆயுளும் நிறைவான செல்வமும்
ஓங்கிய புகழும் உயர்வான வாழ்வும்
தாங்கிய வாறு தகவுடன் வாழ்ந்திட
தேன்தமி ழாலே வாழ்த்தினேன் இன்று!

வாழிய வாழிய பல்லாண் டென்றும்
வாழிய நலமுடன் வாழ்கவே யென்றும்
ஏழிசை முழங்க எழுதமி ழோடு
வாழ்த்தி வாழ்த்தி மகிழ்ந்தேன் இன்று!

- அன்புடன் லதாராணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக