என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

வியாழன், 22 டிசம்பர், 2011

மீண்டும் துளிர்த்தது...!

அண்ணா நூலகமென்ன.... கவிதை என் வலைத்தளத்தில் பதித்தவுடன்.... சில விஷமிகள் செய்த கீழ்த்தரமான சூழ்ச்சியால் என்னுடைய வலைத்தளத்தை கூகிள் நீக்கியிருந்தது.  சில தெளிவுகளுக்குப் பின் வலைத்தளம் மீண்டும் திரும்பப் பெற்றேன். அந்த கோபத்தில்....அக்கீழ்த்தரமக்களின் செயலுக்கு பதிலாக எழுதிய கவிதையிது.

மீண்டும் துளிர்த்தது...!

சிலந்திகள்  பின்னிய சதிவலையில்....
சிங்கம் சிக்கிவிடுமா என்ன?

ஆட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும்
அலைகடலை மிரட்டிவிடுமா என்ன?

எழுதுகோலை முடக்கிவிட
எத்தர்களுக்கு ஆகிவிடுமா என்ன?

ஆகாயம் ஆர்ப்பரிக்காது....
ஆதவனின் வெப்பமும் தாங்கும்
மேகங்களின் குளுமையையும் தாங்கும்.

உள்ளங்கையில்
வெள்ளை முட்டையை வைத்துக்கொண்டு
உலகப் பந்தையே கைக்குள் அடக்கிவிட்டதாய்
கொக்கரிக்கும் எத்தர்களே...

இலையுதிர் காலத்திற்குப் பின்
தளிர் விடத்துவங்கிவிட்டது


இனி - இங்கு

நறுமணம் கமழும் பூக்கள் பூக்கும்
சுவை மிகு கனிகள் பழுக்கும்

நுனி முதல் அடி வரை மற்றவர்களுக்குப்
பயன்தரும் பனை போல் சிறக்கும் ...

சில நேரம் சில்லென்ற தென்றலாய்த் தவழும்
சில நேரம் பாம்பாய் சீறும்..

சில வலிக்கும்...சில பலிக்கும்
சில உரைக்கும் சில எதிர்க்கும்
சில சிரிக்கும் சில சிலிர்க்கும்
சில மயங்கும் சில முழங்கும்

துளிர்க்கத் துளிர்க்க -

தலையாட்டிக்கொண்டே இளைப்பாற
இங்குசில இளங்குயில்கள் ..
தமிழ்க்குயில்கள் -

வாடகை கட்டாமலே வந்துவிட்டுப் போகும்...

அனைவரையும் என் தளிர்க்கரங்களால் வரவேற்றுக் கொண்டே...

வேருக்கு நீர்விட ஆயத்தமாகிவிட்டேன்....!


அன்புடன்,,
லதாராணி பூங்காவனம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக