என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

ரஜினிகாந்தின் இலக்கிய ஆர்வம்.. ????


நான் ஒரு புத்தகப் புழு என்பது எல்லோருக்கும் தெரியும். சங்க இலக்கியங்களிலிருந்து சமகால ஆக்கங்கள் வரை படிப்பதில் ஆர்வம் உடையவள். புத்தகம் படிக்காமல் நானிருந்த நாட்கள் விரல் விட்டு எண்ணக்கூடியவையே. அந்த அளவிற்கு நான் படிப்பதில் வெறித்தனமான ஈடுபாடு கொண்டவள். எந்தப் புத்தகம் கிடைத்தாலும் படிக்கும் நான் வெறுத்து ஒதுக்கிய எழுத்துக்கள்  "சாரு நிவேதிதா" வின் எழுத்துக்கள்தாம்.  

"ச்சீ...த்தூ.... இவனெல்லாம் ஒரு மனுஷனா?" என நினைக்கும அளவிற்கு அத்தனை கேவலமான எண்ணங்களைஎல்லாம்   எழுத்துக்களில் வடித்திருக்கும் ஒரு அற்ப மனிதனாகத்தான் நான் எண்ணுவதுண்டு. 

சர்ச்சை செய்து சர்ச்சை செய்தே சமுதாயத்தில் இடம்பிடித்துவிட்ட ஒரு அயோக்கியன்தான் இந்த மனிதன். நவீனத்துவ எழுத்தாளராக போற்றப்படுபவர்  என்றாலும் என்னால் இவரையும் ஜெயமோகனையும் ஒரு தரமான எழுத்தாளராக ஏற்றுக்கொள்ளவே முடியாமக்கள் மத்தியில் பிரபலமாகவேண்டும் என்பதற்காகவே கீழ்த்தரமான சண்டைகளில் இடுபட்டு எழுத்தை ஜெயித்துவிட்டோம் என நினைக்கும் தோற்றுப் போன மனிதர்கள் .

சென்றவாரம் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கனடா நாட்டின் "இயல்" விருது பெற்றிருக்கிறார். இதற்கான பாராட்டு விழா சென்னையில் நடந்தது. "இந்த பாராட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றியுள்ளார். அப்போது மக்கள் தமிழ் இலக்கியங்கள் நிறைய படிக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.. -

இந்த வாக்கியத்தை எல்லா சந்தர்ப்பவாதிகளும் ஆஹா  ஓஹோ என்று பாராட்ட... சாரு நிவேதிதா மட்டும் ரஜினிகாந்தின் உள்நோக்கத்தைப் தெளிவாகப்  புரிந்துகொண்டு..
"தமிழ் இலக்கியங்களைப் படியுங்கள் என, சினிமா நடிகர் சொல்லும் அளவுக்கு, நிலைமையை மோசமாக்கி வருகின்றனர். இது ஆரோக்கியமான போக்கை, தமிழ் இலக்கியத்தில் ஏற்படுத்தவில்லை." என்று கூறியுள்ளார். 


ரஜினிகாந்த் இலக்கியக் கூட்டத்தில் பங்குகொண்டு ஒரு எழுத்தாளரை வாழ்த்தியதில் சந்தோஷம்தான்.  அவருக்கு இலக்கிய ஆர்வம் இருப்பதும் பாராட்டக்கூடிய விஷயம்தான். 

எத்தனையோ நடிகர்கள் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டிருந்ததை நாம் காலகாலமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்தான்.  தமிழனல்லாத ஒருவருக்கு இந்தக் காலத்தில் தமிழின் மேல் பற்று வருகிறதென்றால் ஏதோ ஒரு பெரிய திட்டம் வகுத்துக்கொண்டு இருப்பதாகத்தான் அர்த்தம். சமீபத்தில் நடிகை குஷ்பூ "தமிழ் நாட்டில் இப்போதுள்ள குழந்தைகளுக்கு தமிழ் படிக்கத் தெரியாதது மிகுந்த கவலையாக இருக்கிறதென்று" சொன்னது போல. 

ரஜினி ஒன்றும் வீரமா முனிவரோ அல்லது ஜி. யூ. போப்போ  அல்ல.... ஒரு நடிகர். அவ்வளவே.  நடிகராக தமிழக மக்களுக்கு ஏதாவது நல்லது செய்கிறாரென்றால் சந்தோஷம். ஆனால் தமிழகத்தை தன்னுடைய கைக்குள் அடைத்துக்கொள்ள வேண்டுமென நினைக்கின்றாரோ என்பது அடிக்கடி தோன்றுகிறது. 

தமிழகத்தின் இன்றைய சூழலில் ... திமுகவை மக்கள் வெறுத்து விட்டார்கள். அதிமுகாவிடம் மக்கள் பட்டு விட்டார்கள். தேதிமுகவிடம் மக்கள் நெருங்கவே மாட்டார்கள். மதிமுக மறைந்து நின்று வேடிக்கை காட்டிக்கொண்டிருக்கிறது அல்லது பார்த்துக்கொண்டிருக்கிறது.  இப்படி எந்த கட்சியுமே ஒரு நல்ல அபிப்பிராயத்தை மக்களிடம் கொண்டிருக்கவில்லை. ஒரு மாற்றுக் ஆட்சி தமிழகத்திற்கு கிடைக்காதா என மக்கள் ஏங்கிக்கொண்டிருக்கும் இந்த நேரம்தான் சரியான நேரம் தமிழகத்தில் தான் கால்பதிக்க என எண்ணுகிறாரோ என நினைக்கத் தோன்றுகிறது. 

வயதாகிவிட்டது. இன்னும் ஒன்றோ இரண்டோ படம் நடித்துவிட்டு பிறகு அரசியலில் ஈடுபடலாமென்று நினைத்திருக்கிறார்  என்பது தெளிவாகவே தெரிகிறது.  அரசியலில் ஆசையில்லைஎன்றால் "நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா?"  என்று கேட்டால் பளிச்சென்று சொல்ல வேண்டும். இல்லை எனக்கு விருப்பமில்லை நான் அரசியலுக்கு வரமாட்டேன் என்று. ஆனால் எப்போதும் வழவழ குழகுழா தான். " எல்லாம் அந்த ஆண்டவன் கையில் இருக்கு"  என்று சொல்வார்.  இதிலிருந்தே தெரிகிறது... தமிழகத்தை ஆட்டிப்படைக்க தமிழனல்லாத இன்னொரு நடிகர் நாற்காலிக்கு ஆசைப்பட்டு நேரத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கிராரென்று  ...  "தமிழிலக்கியத்திற்கு மட்டுமல்ல... தமிழகத்திற்கே நல்லததல்ல என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. 

எழுத்தாளர்கள் கூட்டம் கூட்டி தான் பிரபலமடைய நடிகர்களைக் கூப்பிடுகிறார்கள். ஆனால் நடிகர்கள் தன்பின்னால் ஒரு கூட்டத்தை அமைத்துக்கொள்ள இதுபோன்ற சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

சாரு நிவேதிதா ஒரு கீழ்த்தரமான ஆளென்றாலும் இவர் சொன்ன இந்தக் கருத்தில் உண்மை இருக்கிறது. 

தமிழ்நாடு தமிழர் கையில் இருக்கட்டும். மீண்டும் தாரை வார்த்து விடவேண்டாம். அப்புறம் தமிழ் நாட்டை அந்த ஆண்டவனாலேயும் காப்பாத்த முடியாது.











மீண்டும்  இது  வேண்டாம் ...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக