பேறிஞர்
அண்ணா தொடங்கி வைத்த கட்சி ... கலைஞர் தலைமையில் தமிழகத்தை ஐந்து முறை
ஆண்ட கட்சி.... நாடுமுழுவதிலும் உண்மையான தொண்டர்களைத் தன்னகத்தே கொண்ட
பிரம்மாண்டமான கட்சி. எத்தனையோ அடிமட்டத் தொண்டர்களெல்லாம்
சேர்ந்து கட்சியின் வளர்ச்சிக்காகத் தன் குடும்பத்தையெல்லாம்
மறந்தும் ஒதுக்கியும் வைத்துவிட்டு கழகமே தனது மூச்சாக நினைத்து கண்ணெனக் காத்து வளர்த்து சாதனை படைத்து சாதித்த கட்சி... ஆனால் அதன் இன்றைய நிலையோ...
வாரிசுகளுக்குள்
மோதல் இன்று உச்சத்தை எட்டிவிட்டது. மு.க ஸ்டாலின் னும் அழகிரியும்
நேருக்குநேர் இன்னும் மோதிக்கொள்ளவில்லை அவ்வளவுதான் . கடந்த ஐந்து
வருடத்தில் திமுக ஆட்சியில் இருந்தபோது மத்திய இரசாயனத் துறை அமைச்சராக
இருந்த அழகிரி நாடாளுமன்ற அவைப்பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை என்பதை ஒட்டுமொத்த
இந்தியாவே
அறியும். அழகிரி எங்கே அழகிரி எங்கே என்று எல்லோரும் தேடுமளவிற்கு அவர் நடந்து கொண்டது திமுக விற்கே இழுக்கான செயாலக அமைந்துவிட்டது. ஒரு அவையில் நான்கு அமைச்சர்களுக்கு முன்னால் நின்று பேசுவதற்குக் கூட தன்னால் முடியாது... என்று
அழகாக நிரூபித்தவர்தான் அழகிரி... ஆனால் தென்மண்டலம் முழுவதையும் தன் ஒற்றை
விரலசைவில் வைத்துக்கொண்டு ஒரு குட்டி ராஜாங்கத்தையே நடத்திவந்தார்
என்பதும் அனைவரும் அறிந்த உண்மை.
தமிழகத்தின்
முன்னாள் முதல்வரின் மகன் என்ற ஒரு தகுதியைத் தவிர வேறு எந்த ஒரு
அடிப்படைத் தகுதியுமே பெற்றவராக அழகிரி இல்லை என்பதே பெரும்பாலோனோரின்
கூற்று. உண்மையும் இதுதான். இது இப்படி இருக்க... பெண் வாரிசு கனிமொழியும் உள்நுழைந்து
ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கி திமுகவிற்கு
அவப்பெயரையே சம்பாதித்துக் கொடுத்தார். அரசியல் மட்டுமல்லாமல்... சினிமா,
ஊடகத்துறை...என எங்கெங்கும் கொடிகட்டிப்பறந்த குடும்ப ஊடுருவலால்...
தமிழகமே சற்று திகைத்துத்தான் போனது. இந்தக் காரணத்தினால் ஆட்சியை இழந்தது
மட்டுமல்லாமல்.... சுனாமியே வந்து சுருட்டி எடுத்ததுபோல் திமுக என்பதே
காணாமல் போய்விட்டதோ என்னுமளவிற்கு எல்லாத்தொகுதிகளையும் அதிமுகவே
கைப்பற்றி ... எதிர்கட்சியாகக் கூட இல்லாத அளவிற்கு ஒரு மோசமான நிலைக்குத்
திமுகவைத் தள்ளிவிட்டது.
அன்பழகன்
முதல் அடிமட்டத் தொண்டன் வரையிலும் வெறுத்துப் போகும்படியான எத்தனையோ
நிகழ்ச்சிகள் கடந்த ஆட்சியில் இந்த குடும்ப உறுப்பினர்களால்
நடந்திருந்தாலும்... அத்தனையும் பொறுத்துக்கொண்டு "இது நம் கட்சி" என்று
பொறுமையைக் கடைபிடித்த கழகத்தின் ஒவ்வொரு தொண்டனையும் விரக்தியில்
தள்ளிவிட்டு விட்டது அழகிரி - ஸ்டாலின் மோதல்....
கட்சியைக்
காப்பாற்ற வேண்டும். கட்சியின் நலன் தான் முக்கியம். என்ற எண்ணம் ஒவ்வொரு
சொட்டு ரத்தத்திலும் ஊறியிருக்கும் கருணாநிதி அவர்கள் அவசரமாக முடிவெடுக்க
வேண்டிய நேரம் வந்துவிட்டது. கட்சி காப்பாற்றப்பட வேண்டுமென்றால் முதல் வேலையாக உடனடியாக
அழகிரியையும் கனிமொழியையும் கட்சியிலிருந்தே நீக்கிவிட வேண்டும்.
வாரிசுகளின்
படைஎடுப்பினால் கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடத்தில் வெறுப்பைச்
சம்பாதித்துக்கொண்டிருந்த கட்சி... இதிலிருந்து விடுபட வேண்டுமென்ற ஒற்றை
காரணத்தினாலேயே அதிமுக விற்கு
அரியாசனத்தை அளித்தது... ஆனால் எதிர்பார்த்தபடி இல்லாமல் எல்லாமே
எதிர்மறையாய் ஆகிவிட்டதினால்... இன்று மக்கள் மனப்புழுக்கத்தில்
தவித்துக்கொண்டிருக்கிறார்கள். இதிலிருந்து எப்படி மீள்வது என்று
தெரியாமல் முழித்துக்கொண்டிருக்கும் நேரத்தில்... மீண்டும் திமுக தனது தவறை
திருத்திக்கொண்டு கட்சியை பலப்படுத்த வேண்டிய நேரத்தில்... குரங்கு
ஆப்பத்திற்கு சண்டையிடுவதுபோல்... கட்சியை உனக்கில்லை எனக்கு ...
எனக்கில்லை உனக்கென்று பங்குபோட நினைப்பது கட்சியின் எந்த ஒரு தொண்டனாலும்
ஏற்றுக்கொள்ளவே முடியாது. திமுக என்பது கலைஞர் வீட்டு சொத்து அல்ல... அதை
பிள்ளைகள், மகள் பங்குபோட்டுக்கொள்ள...
தமிழகமே வேடிக்கை பார்க்கும் அளவுக்கு மிகவும் கேவலமாக
நடந்துகொண்டிருக்கும் இந்த சகோதர சண்டை... வெகு விரைவில் முடிவுக்கு
வரவேண்டும்.
தற்போது
நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் அதிமுக ஆட்சியில் தமிழக மக்கள் படும் பாடு
சொல்லும் தரம் இல்லாதது .... எதிர்கட்சியோ ... எதற்குமே லாயக்கற்றது...
மற்றுமுள்ள சிறு சிறு கட்சிகளெல்லாம்... கொஞ்சம் காற்று வேகமாக அடித்தாலே
உடைந்து விழும் முருங்கை மரம் போலிருக்கிறது.... தமிழகத்தின் தலையெழுத்து
என்னவென்றே தெரியாமல் மக்கள் திண்டாடிக்கொண்டிருக்கும் இந்த நிலையில்...
கண்முன்னே அழிந்து கொண்டிருக்கும் கழகத்தைத் தமிழக
முன்னாள் முதல்வர் அவர்கள்...புணரமைப்புச் செய்யும் விதமாக
உடனடித் தீர்வாக அனுபவமிக்க உண்மையுள்ள தொண்டரான தனது வாரிசு என்ற நிலையைக் கடந்து... ஒரு உண்மையான திமுக தொண்டரான / உறுப்பினரான ஸ்டாலினை முன்னிறுத்த வேண்டும்.
இது ஒன்றுதான் தீர்வு... அப்போதுதான் கழகம் பிழைக்கும்.
அப்படி அவர் தவறும் பட்சத்தில்.....
திமுகவின்
மேல் மக்கள் வைத்திருந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து
கொண்டிருந்தாலும் தான் ஒரு திறமையான அரசியல் வாதி தான் என்பதை கடந்த
காலங்களில் தன்னுடைய செயல்கள்
மூலமும், தமிழகத்தை நல்ல வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றதின் மூலமும்
மக்கள் மனதில் இடம் பிடித்தவராக மட்டுமின்றி எதிர்கட்சியினர் கூட
பாராட்டும் அளவிற்குத் தனது பெயரை நிலை நாட்டி இருக்கும் ஸ்டாலின்
திமுக வின் நம்பிக்கைதரும் ஒரு சிறு ஒளிக்கீற்றாக இருக்கும் இவர்...
உடனடியாக திமுகவை விட்டே வெளியேறி ஒரு தனிக்கட்சி தொடங்கி தலைமையேற்று
அந்தப் புதுக்கட்சியை நடத்தும் பட்சத்தில்..... திமுகவின் 80 %
தொண்டர்களும் உறுப்பினர்களும் இவருக்குத் துணையாக இவரிடம் வந்து
சேர்வார்கள் என்பது உறுதி. மட்டுமன்றி.. இளைய தலைமுறையினரும் ஸ்டாலினின்
தலைமையை ஏற்று சிறப்பாக செயல்படுவர்.
இப்படி
ஒரு முடிவெடுத்து புதிய பலத்துடன், சிறப்பான ஒரு கட்சியை முன்னடத்திச்
ஸ்டாலின் சென்றால்.... தற்போதைய தமிழகம் விரைவில் ஒரு நல்ல முதலமைச்சரை
பெறும்.
ஸ்டாலின் தயங்காமல் இம்முடிவை வெகு விரைவில் எடுக்க வேண்டும்.
This would be a good idea for Stalin, a better idea for the party and the best idea for udanpirappugal!!!
பதிலளிநீக்கு//உடனடித் தீர்வாக அனுபவமிக்க உண்மையுள்ள தொண்டரான தனது வாரிசு என்ற நிலையைக் கடந்து... ஒரு உண்மையான திமுக தொண்டரான / உறுப்பினரான ஸ்டாலினை முன்னிறுத்த வேண்டும்//
பதிலளிநீக்குஇதை ஒரு தமிழ்மண்ணின் மைந்தனாக பற்றாளனாக, இப்போதைக்கு எதிர்பார்க்கத் தக்க கண்ணுக்குத் தெரிந்தவராய், பல செயல்திறன் மற்றும் குணநலன் அதோடு மிக்க அனுபவமும், எதையும் திறமாக எடுத்துநடத்தும் செல்வாக்கும் மிக்கவராக, உளவியல் ரீதியாக பல காரணங்களை முன்வைத்து நிறைய பேர் ஆதரிக்கத் தக்கவராக ஏற்கத் தக்கவராக இவரே முன் நிற்பதாக எனக்குமிருக்கும் நம்பிக்கையின் வழியே நானுமிதை முழுமனதாக ஏற்கிறேன் தோழி...
வித்யாசாகர்
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வித்யா. என்ன நடக்கிறதென்று பார்ப்போம்...
பதிலளிநீக்கு