சச்சினை ராஜ்ய சபா உறுப்பினராக ஆக்க வேண்டுமென்று காங்கிரஸ் பரிந்துரைப்பதாக வந்திருக்கும் செய்தி பல கோணங்களில் நம்மை யோசிக்க வைக்கிறது...
முதலில்..
அதல பாதாளத்தில் விழுந்துவிட்ட காங்கிரஸ் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள சச்சினுக்கு வீசிய வலை இது.
இந்தியாவில் வயது வித்தியாசமின்றி அனைவராலும் விரும்பப்படும் மிகச்சிறந்த மனிதர் விளையாட்டு வீரர் சச்சினைத் தங்கள் பக்கம் இழுப்பதன் மூலம்... விழுந்த காங்கிரசை மீட்டெடுக்க முடியும் என்பது காங்கிரசின் சூட்சும புத்தி வரைந்த தந்திர கோடு.
சச்சினுக்கு அரசியல் தேவையில்லை என்பதே நமது கருத்து.
எம். பி. பதவி கிடைப்பதால் தான் சச்சினுக்கு புது கவுரவம் வந்துவிடப்போவதில்லை.
உலகமே வியக்கும் / போற்றும் பல சாதனைகளைப் படைத்து உலகப்புகழ் உச்சியில் ஏற்கனவே கால்மேல் கால்போட்டு அமர்ந்திருப்பவர்தான் சச்சின்.
ஆனால் மக்களவையில் அவரைக் கொண்டு நிறுத்தவேண்டும் என்பது தேவையற்றது.
கிரிக்கெட்டில் எண்ணிக்கையில் மிகுதியான சாதனைகள் பல படைத்து இருக்கும் சச்சின் இந்த அரசியல் சாக்கடையில் விழாமல் இருப்பதுதான் இவருக்கு இன்னும் பெருமை.
அந்தக்காலம் போல படிப்பறிவற்ற மக்களை மெஜாரிடியாகக் கொண்டதல்ல நம் நாடு..... படித்து தெளிவாக இருக்கிறார்கள் இன்றைய இளைஞர்கள். விளையாட்டில் எட்டமுடியா சாதனை பெற்று மக்கள் மனதில் பசைபோட்டு ஒட்டியது போல் அமர்ந்திருக்கிறார் என்ற ஒரே காரணத்துக்காக சச்சினை எம்.பி. ஆக்கினால் ரசிகர்கள் அவர்கள் உள்ளத்தில் ஒட்டி வைத்திருக்கும் சச்சினை வேகமாக கிழித்தெறிந்து விடுவார்கள்.
இவரின் சாதனையைப் போற்றி உயர்ந்த விருதுகள் கொடுத்து கவுரவிக்கலாமே தவிர அரசியலில் இவரைக் கொண்டுவரவேண்டும் என்பது விபரீத விளைவுகளை சச்சினுக்கு ஏற்படுத்திவிடும்.
இதுவரை எந்த பிரச்சனைகளையும் சந்திக்காமல் தானுண்டு தன் விளையாட்டுன்னு என்று இருந்தவருக்கு எம். பி. ஆகும் பட்சத்தில் லஞ்சமும் ஊழலும்.. நிறைந்துவிட்ட அரசியல் சுத்தமாக ஒத்து வராது.
சச்சின் இதை நல்லமுறையில் மறுத்துவிட்டு ஒதுங்கி இருப்பதுதான்.... இவருக்கு மேலும் பெருமை சேர்க்கும். மக்கள் இன்னும் உயர்வானவராக இவரை போற்றுவார்கள்.
சச்சின் யோசித்து முடிவெடுக்க வேண்டும்....
அமைதியான சச்சினுக்கு அரசியல் வேண்டாம்...!
இன்னொரு முக்கியமான விஷயம்.... இன்று பார்லிமென்ட் கூட்டம் நடந்ததை எல்லோரும் பார்த்திருப்பீர்கள்....
காட்டுக் கத்தல் கத்திக்கொண்டு... யாரும் யாரையும் பேச விடாமல்... கூச்சலும் கத்தலுமாக .... பத்து நிமிடம் தொடர்ந்து தொலைக்காட்சியில் பார்க்கும்போதே பயித்தியம் பிடித்துவிடும் போலிருக்கிறது அந்த எம். பி. க்களின் பேச்சும் செயல்களும்.அங்கு போய் இவர் அமர்வதா என்பதை நினைத்தால் .... அச்சசோ ... வேண்டாமடா சாமீ..
பணத்திற்கோ புகழுக்கோ எந்த ஒரு குறையுமில்லா சச்சின்... விளையாட்டில் ஒய்வு பெற்றபிறகு நிம்மதியாக வாழவேண்டுமானால்....
வழக்கமாக உதிர்க்கும் அந்தப் புன்னகையோடே சொல்லவேண்டும் சோனியாஜியிடம் .... "No, Thanks"
தாங்கள் சொல்வது சரியே!
பதிலளிநீக்கு