என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

திங்கள், 30 ஏப்ரல், 2012

ஆன்மீகக் கோளாறா அல்லது ஆட்சிக் கோளாறா?


" நானும் நித்யாவும் அப்பா மகன் போல இருந்து மதுரை மீனாட்சியை மீட்கப் போறோம்"  - ஆதி ஈனம் - உங்க சன் செஞ்ச லீலைகளை சன் டிவி தான் உலகறிய வச்சுடுத்தே ... அதிலிருந்து ரஞ்சிதாவை மீட்கவே பெரும்பாடு பட்டார்.. மீனாட்சியை மீட்கப் போறோம் நு சொல்றீரே...அய்யயோ வெட்கக்கேடு. ... ரஞ்சிதா நடிகையப்பா...  மீனாட்சி தெய்வாமாக லட்சக்கணக்கான மக்களால் வணங்கப்படுபவள். இந்த இரண்டுக்கும் வித்யாசம் தெரியாமலா பக்தர்களும் தமிழக மக்களும் இருப்பார்கள்?

தமிழ் நாட்டில என்ன நடக்குதுன்னே புரியலே கொஞ்ச காலமா.  அரசியலும் ஆன்மீகமும்  போட்டி போட்டுக்கொண்டு மக்களை டென்ஷன் படுத்தி... எல்லோருக்கும் பிபி ஏத்திகிட்டிருக்காங்க. 

திடீர் திடீரென்று எதாவது செய்தி வந்து நம் கோபத்தைக் கொப்பளிக்கச் செய்கிறது. அப்படித்தான் நேற்று நித்யா தலையில் ஏறிய திடீர்க் கிரீடமும். தமிழகத்தின் மிகப் பெரிய ஆதீனமான மதுரை ஆதீனத்தின் 293வது ஆதீனமாக நித்தியானந்தா முடிசூட்டப்பட்டுள்ள செய்தி. 2500  ஆண்டு பழமை வாய்ந்த ஆதீனத்தின் வாரிசாக பிரம்மச்சாரி நானென்று சொல்லி நடிகையுடன் காமக்களியாட்டம் நடத்திய அயோக்கிய சந்நியாசி ... வீடியோ வெளிவந்து மானம் போனபோது... நான் ஒரு ஆண் மகனே அல்ல என்று கூறிய ஒரு  பேடி... 
இவன்தான் அடுத்த ஆதீனமாகப் பொறுப்பேற்கத் தகுதியானவன்  என்று கூறி இவன் தலையில் அவன் தங்கக் கிரீடம் வைத்ததும்.. அவன் காலுக்கு இவன் ஒரு கோடி ரூபாயில் காலணி அணிவிப்பதும்... அவர் ஆலமரம் நான் காளான் என்று ... நான் அப்பன்.. இவன் என் மகன் என்று மாறி மாறி இருவரும் டயலாக்.. அடிப்பதும், இது எந்த நாடகத்துக்கு ஒத்திகையோ என்று எண்ணத் தோன்றுகிறது .

 இதோ அப்படித்தான் இப்போதும்... மதுரை ஆதீனம்.. திடீரென்று ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ச நித்தியானந்த ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியா ஸ்வாமிகள் என்று நித்யானந்தாவிற்குப் புதிய பெயர் சூட்டி,  தங்கக் கிரீடத்தைத்  தலையில் சூட்டியதொடல்லாமல்...." இவர் எழுச்சிமிக்கவர், ஆற்றல் மிக்கவர். நானும் அவரும் இணைந்து நிர்வாகத்தை நடத்துவோம். " இப்படி ஆதீனம் கூறியதை கேட்கும்போது கேவலமாக உள்ளது.

பக்தி என்ற பேரில் சொத்து சேர்க்கறதும், பக்தைகளோட சல்லாபிக்கறதும்தான் ஆன்மீகம்னா....இந்தக் காவிகளோட யோக்யதையைத் தெரிந்து கொண்டே தான் இவர்களின் பக்தர்கள் இவர்களை வளர்க்கிறார்களா? தமிழ் நாட்டில் மட்டும் தனக்கு 800  தியான மையம் உள்ளதாகவும்... 40  நாடுகளில் ஆசிரமங்கள் உள்ளதாகவும்... கோடிக்கணக்கில் சொத்துக்கள் உள்ளதாகவும்... எப்படி முடிகிறது இவையெல்லாம்? அரசியல் பலமின்றி இவர்களால் வளர்ந்துவிட முடியுமா என்ற கேள்வி மக்கள் மனதில்  எழாமல் இருக்க முடியாது.

தந்தை பெரியார் அன்றே சொன்னார்...கோவில்களையெல்லாம் அரசுடமையாக்கணும். கோவில் பூசாரிகளுக்கும் ஊழியர்களுக்கும்  அரசாங்கம் சம்பளம் கொடுக்க வேண்டும் என்று. அதை அரசாங்கம் உடனடியாக நடைமுறைப் படுத்த வேண்டும். அர்ச்சகர்களுக்குப்  பூஜைதட்டில் காசு கூட போடக்கூடாது என்ற சட்டம் அமல் படுத்தனும். லஞ்சம் வாங்கினால் எப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கறாங்களோ அதே போல கோவிலில் காசு வங்கி பூஜை நடத்துவது என்பதெல்லாம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மீறுபவர்களுக்குக் கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். அப்போதுதான் நாடு உருப்படும்.

கல்லூரிகளையும் மருத்துவமனைகளையும் அரசுடமையாக்கும் அரசாங்கம் இந்த மடங்களை ஏன் விட்டு வைக்கிறது?  ஆதீனத்தையும் மடங்களையும் அரசுடமையாக்காமல் கண்மூடிக்கொண்டே இதுபோன்ற வக்கிறங்கள் அரங்கேறிக்கொண்டிருப்பதை அரசாங்கம் அனுமதித்துக்கொண்டிருக்கிறதா? கொலை கொள்ளை, கற்பழிப்பு, காமலீலைகள் அத்தனையும் நடக்கும் இடமாக மடங்கள் இருப்பதை அடிக்கடி வெளிச்சத்துக்கு கொண்டு வந்துகொண்டே இருந்தாலும் மடங்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்துகொண்டுதனே இருக்கிறது? என்னதான் முகத்திரையைக் கிழித்தாலும் சிரித்துக்கொண்டே இன்னும் வளர்கிறார்களே தவிர  அவர்களின் பலம் குறைந்த பாடில்லையே!

 
இந்தப் பீடையாதிபதிகளெல்லாம் நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒரு சாபக் கேடுதான்.   
சந்நியாசிகளுக்கு நாட்டில் என்ன வேலை?  முற்றும் துறந்தவன் காட்டிலோ மலையிலோ அல்லவா இருக்க வேண்டும்?  இந்தக் காவிகள் செய்யும் அட்டகாசங்களையும் அவலங்களையும் அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு அடக்க வேண்டும். இல்லையென்றால் மக்கள் ஒன்று சேர்ந்து சந்நியாசிகளைஎல்லாம்... இமயமலைக்கு அடித்துத் துரத்திவிட வேண்டும்....  

வேறு வழியில்லை!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக