திராவிடர் இயக்க நூற்றாண்டு விழா - புத்துலகப் பெண்கள் எழுச்சி மாநில மாநாட்டில் ( வேலூர் : 29 -05 -2012 ) தொடக்கவுரை ஆற்றியபோது
விடுதலை நாளிதழ் ; வியாழன், 31 மே 2012 15:33
லதாராணி - துபாய்
துபாய் - பாவலர் லதாராணி மாநாட்டின் தொடக்க உரையை ஆற்றினார். அவர் தம் உரையில் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது:
தலைவர்களில் பலவகை உண்டு. பெரும்பாலோர் தோற்றமளிக்கும் தலைவர்கள்தான் நம்
நாட்டில் உண்டு. ஆனால் தந்தை பெரியார் அவர்களோ எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு
ஒரு முறை தோன்றும் தலைவர் ஆவார்.
பெண்ணுரிமையில் தந்தை பெரியார்
சிந்தித்த அளவுக்கு யாரும் சிந்தித்தது கிடையாது. நம் பெண்களுக்காக தந்தை
பெரியார் எவ்வளவோ அவமானங்களைச் சந்தித்து இருக்கிறார்.
உண்மையான ஒரு தலைவரின் மரணம் உயிர்ப்புடன் இருக்க வேண்டும். அப்படித்தான் தந்தை பெரியார் நம் சமூகத்தில் உள்ளார்.
தந்தை பெரியார் அவர்களால் நாம் கல்வி உரிமை பெற்றோம்; உத்தியோக
வாய்ப்புகளைப் பெற்றோம். ஆனால் இன்னும் மூடநம்பிக்கைகளிலிருந்து நம்
பெண்கள் விடுதலை பெற்றனரா? இன்னும் நித்தியானந்தாக்கள் தோன்றிக்
கொண்டுள்ளனரே, இன்னும் ஜெயேந்திரர்கள் ஜெகத்குரு என்று
சொல்லப்படுகிறார்களே. நகைக் கடைக்காரன் அட்சய திருதியை என்கிறான் - நம்
பெண்கள் ஏமாறுகிறார்களே! புடவைக் கடைக்காரன் தங்களிடம் தேங்கிக் கிடக்கும்
புடவைகளின் நிறத்திற்கேற்ப சகோதரிக்குப் பச்சை நிறப் புடவை வாங்கிக்
கொடுக்கச் சொல்லுகிறான். அண்ணிக்கு ஆகாது, சிகப்புப் புடவையை வாங்கிக்
கொடுக்கச் சொல்லு கிறானே. இந்த வியாபாரிகள் தங்கள் தொழிலுக்கு பக்தியைத்
தந்திரமாகப் பயன் படுத்திக் கொள்கிறார்களே.
இராணுவ இரகசியத்தை
வெளிநாட்டுக்குக் காட்டிக் கொடுப்பவன் மட்டும் தேசத் துரோகியல்ல - ஒரு
நாட்டின் பெண்களின் முன்னேற்றத்திற்குத் தடை போடுபவனும் தேசத் துரோகியே!
என்று அருமையான கருத்துக்களை எடுத்து வைத்தார் தமிழ் ஆர்வலர் துபாயைச்
சேர்ந்த பாவலர் லதாராணி.
விடுதலை நாளிதழ் ; வியாழன், 31 மே 2012 15:33
தலைவர்களில் பலவகை உண்டு. பெரும்பாலோர் தோற்றமளிக்கும் தலைவர்கள்தான் நம் நாட்டில் உண்டு. ஆனால் தந்தை பெரியார் அவர்களோ எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் தலைவர் ஆவார்.
பெண்ணுரிமையில் தந்தை பெரியார் சிந்தித்த அளவுக்கு யாரும் சிந்தித்தது கிடையாது. நம் பெண்களுக்காக தந்தை பெரியார் எவ்வளவோ அவமானங்களைச் சந்தித்து இருக்கிறார்.
உண்மையான ஒரு தலைவரின் மரணம் உயிர்ப்புடன் இருக்க வேண்டும். அப்படித்தான் தந்தை பெரியார் நம் சமூகத்தில் உள்ளார்.
தந்தை பெரியார் அவர்களால் நாம் கல்வி உரிமை பெற்றோம்; உத்தியோக வாய்ப்புகளைப் பெற்றோம். ஆனால் இன்னும் மூடநம்பிக்கைகளிலிருந்து நம் பெண்கள் விடுதலை பெற்றனரா? இன்னும் நித்தியானந்தாக்கள் தோன்றிக் கொண்டுள்ளனரே, இன்னும் ஜெயேந்திரர்கள் ஜெகத்குரு என்று சொல்லப்படுகிறார்களே. நகைக் கடைக்காரன் அட்சய திருதியை என்கிறான் - நம் பெண்கள் ஏமாறுகிறார்களே! புடவைக் கடைக்காரன் தங்களிடம் தேங்கிக் கிடக்கும் புடவைகளின் நிறத்திற்கேற்ப சகோதரிக்குப் பச்சை நிறப் புடவை வாங்கிக் கொடுக்கச் சொல்லுகிறான். அண்ணிக்கு ஆகாது, சிகப்புப் புடவையை வாங்கிக் கொடுக்கச் சொல்லு கிறானே. இந்த வியாபாரிகள் தங்கள் தொழிலுக்கு பக்தியைத் தந்திரமாகப் பயன் படுத்திக் கொள்கிறார்களே.
இராணுவ இரகசியத்தை வெளிநாட்டுக்குக் காட்டிக் கொடுப்பவன் மட்டும் தேசத் துரோகியல்ல - ஒரு நாட்டின் பெண்களின் முன்னேற்றத்திற்குத் தடை போடுபவனும் தேசத் துரோகியே! என்று அருமையான கருத்துக்களை எடுத்து வைத்தார் தமிழ் ஆர்வலர் துபாயைச் சேர்ந்த பாவலர் லதாராணி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக