என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

சனி, 27 அக்டோபர், 2012

ஆஜீத் - "The Born Super Star"


ஆஹா....  என்ன ஒரு அருமையான நாள்.  சூப்பர் சிங்கர் ஜூனியர் -3 ன் இறுதி மேடை. அந்த Title  க்காக ஐவரும்   பாடப்போகும் கடைசி மேடை.   ஐந்து Finalists இன்  முதல் சுற்று .....முதலில் பாடிய கெளதம் அவனைத் தொடர்ந்து யாழினி... அதற்கும் பின் பிரகதியின் பிரமிக்க வைத்த பாடல் என முதல் மூவரும் செமி கிளாசிகல் பாடல்களைப் பாடி எல்லோரையும் மிரள வைத்துக் கொண்டிருக்க.....

கர்நாடக சங்கீதம் பயின்ற  இன்னொரு அருமையான பாடகி சுகன்யாவும் இருக்கிறாரே பாடுவதற்கு... இப்படி எல்லோரும் சுருதி ஜதி என்று ஏதோதோ பாடி சங்கீத ஜாம்பவான்களை எல்லாம் தாளம் போட்டு கைதட்டி ரசிக்க வைத்துக்கொண்டிருக்கிரார்களே... நம்ம ஆஜீத் செல்ல குட்டி முறையான சங்கீதம் தெரியதவனாசே என்ன செய்யப் போகிறானோ என்று  மனதிற்குள் ஒரு டென்ஷன் சத்தியமாக இருந்து கொண்டே இருந்தது...  அவன் மீது 100% நம்பிக்கை இருந்தாலும் உள்ளுக்குள் ஒரு பதட்டத்தோடு காத்திருந்தேன்...

அந்த சின்ன சூப்பர் ஸ்டார்... மேடையில் வந்து நின்ற பின்னும் பதட்டம்  இன்னும் கூடிக்கொண்டே இருக்க.....  A.R. ரஹ்மான் ஐத் தவிர யார் பாடினாலும் எற்றுக்  கொள்ள முடியாத "வந்தே மாதரம்" பாடலைப் பாட ஆரம்பித்து ....   அரங்கம் அதிர அதிர அவ்வளவு அருமையாகப் பாடி....  நீங்க எல்லாம் தொடை தட்டி ரசிச்சா எனக்கென்ன, கைதட்டி ரசிச்சா  எனக்கென்ன.... என்று சொல்லாமல் சொல்லி .... "தாய் மண்ணே வணக்கம்" னு  பாடி எல்லாரையும் எழுந்து நின்னு சல்யூட்  அடிக்க வச்சான் பாருங்க.....

டேய் செல்லம்.... நீ பார்ன் சூப்பர் ஸ்டார் டா (Born Super  Star)  ...என்று இரு ஆஸ்கார் விருது பெற்ற  ரஹ்மான் அவர்களைச் சொல்ல வைத்தானே ....அது ... அது தான்...." பிறவிக் கலைஞனை எந்த ஒரு உருவாக்கப்பட்ட கலைஞனாலும்  வெல்ல முடியாது" என்பதை இன்னொரு முறை நிரூபித்த வரலாற்று நிமிடம்.

மனப்பூர்வமான வாழ்த்துக்கள் டா " சின்ன செல்ல சூப்பர்  ஸ்டார் ஆஜீத்".

"A  Born  Legend  is identified" ... உலகச் சாதனையாளர்கள் பட்டியலில் சேர இன்னொரு தமிழன் அடியெடுத்து வைத்து விட்டான்.  இன்று ஆரம்பித்த இந்தப் பயணம்.... உலகின் மிகச்சிறந்த அவார்டுகளைஎல்லாம் தன்வசப்படுத்தும் வரை தொடர்ந்துகொண்டே இருக்கவேண்டுமென்று வாழ்த்துகிறேன்...

பெருமை மிகு  வாழ்த்துக்கள்.!!1





  

5 கருத்துகள்: