சூப்பர் சிங்கர் ஜுனியர் -3 மூலமாக தமிழகத்தை ஒரு குரல்.... தமிழகத்தை மட்டுமல்ல உலகத் தமிழர்களை ஒட்டுமொத்தமாக வசீகரித்துக் கொண்டிருக்கிறது என்றால் அது குட்டி அஜீத் தின் குரல்தான். அவன் பாடும் விதமும் அவனுடைய அழகிய ஸ்டைல், அந்த குழந்தைத்தனம் அத்தனையும் இவன் நம்ம வீட்டு செல்லக்குழந்தை என்று எல்லோரையும் நினைக்க வைத்துவிடுகிற து. உண்மையிலேயே "Wild Card Round " க்குப் பின் தினமும் அவனுடைய குரலைக் கேட்காமல் நான் இருப்பதில்லை.
ஹப்பா .... என்ன ஒரு Talent? நமக்குள் போட்டி நடந்துகொண்டிருக்கிறது என்று சக போட்டியாளர்களை மறக்க வைத்து மற்ற குழந்தைப் போட்டியாளர்கள் எல்லோரும் ஓடிவந்து கட்டிப்பிடித்து மகிழ வைத்த "ஆரோமலே" உ ஷா உதுப் அவர்களின் கண்களில் ஆனந்தக்கண்ணீரை வரவழைத்த அந்தத் தருணம்... அவன் பாடும்போது Judges அனைவரும் எழுந்து நின்று பாராட்டிவிட்டு உட்கார மறந்து பாடல் முடியும் வரை ரசித்தது...இப்படி ஒவ்வொரு சங்கீத வித்வான்களின் ஆசியையும் பாராட்டையும் அன்பையும் ஒட்டுமொத்தமாகப் பெற்றுக் குவித்துக்கொண்டிருக்கும் ஆஜீதின் ஒவ்வொரு பாடல்களையும் ரசிக்காதவர்களே இருக்க முடியாது. (விஜய் டிவி யின் TRP Rating ஐ எக்கச்சக்கமாக உயர்த்திவிட்டான்)
நேற்று நடந்த நிகழ்ச்சியில் இறுதிப் போட்டியில் பாடிக்கொண்டிருக்கும் அனைத்து செல்லக் குரல்களுடனும் அவர்களை ஊக்குவிக்க அவர்களுடன் சேர்ந்து பாட வந்திருந்த "பத்மஸ்ரீ" ஹரிஹரனை "அன்பே அன்பே கொல்லாதே" பாடலைப் பாடிய குட்டி ஆஜித் கொன்றே விட்டான். மேடையில் எல்லோரும் ரசித்தது ஆஜித்தைத்தான். ஹரிஹரனை அங்கு காணவில்லை. காணவே இல்லை. அவரே தன்னை மறந்து .. அந்த செல்லக்குரலை ரசித்துக்கொண்டே தான் அடுத்து பாடுவதை மறந்துவிட்டாரே.
போ நீ போ, என்ன சொல்லப் போகிறாய்... சித்ராவுடன் பாடிய உயிரே உயிரே... போன்ற புதுப்பாடல்கள் மட்டுமில்லை.. அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்... போன்ற பழைய பாடல்களையெல்லாம் ரொம்ப அனாவசியமாகப் பாடிவிடுகிறான்.. நாளை நேரு அரங்கில் நடைபெறும் அந்த பிரம்மாண்டமான நிகழ்விற்கு அரங்கம் நிறையப்போவது ஆஜீத் ஒருவனுக்காக மட்டுமே இருக்கும். அந்த செல்லக் குழந்தைக்கு... இந்த செல்லக் குரலுக்கு ... நாளைய போட்டியில் வெற்றி உறுதிசெய்யப்பட்ட ஒன்று என்றாலும் அவன் அந்த மேடையில் "Best Performance "கொடுக்க வேண்டும் என்று எனது அளவிற்கதிகமான அன்பான வாழ்த்துக்களை வழங்குகிறேன்.
"சூப்பர் டா ஆஜீத் செல்லம்" வாழ்த்துக்கள் !
நீ தான் தமிழகத்தின் செல்ல செல்ல செல்லக் குரல்....!
(இன்னுமொன்றை நான் சொல்ல வேண்டும்.... பிரகதி... மிக மிக அருமையாகப்பாடும் இன்னொரு செல்லக்குரல் தான்....பிரமாதமாகப் பாடுகிறாய்.. நிறைய ரசிக்கிறோம் ஆனாலும் sorry டா பிரகதி... ஆஜித்தை மீறி உனக்கு ஒட்டு போட மனது வரவில்லை.... )
super karuthukkal and unmaiyana karuthukal, super singeril only 3 tamilan thaan irukiran, matra irandum onnu kerala , innonu karnataka base singapore born usa citizen..
பதிலளிநீக்குungaladaya katurai romba arumai nanabiye...
பதிலளிநீக்கு