தலைப்பே கோபம் வரவழைப்பதாக உள்ளதென்று உண்மையான தமிழர்களுக்கு கோபம் கொந்தளிக்கும் என்பது தெரிந்தேதான் இத்தலைப்பை வைத்தேன்.
சமீபத்தில் ஸ்டார்விஜய் தொலைகாட்சியில் சூர்யா நடத்தும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சி பார்த்தேன். நம்ம ஊர் (வேலூர்) ஆள் விளையாடி இருக்கிறார் என்று கேள்விப்பட்டு கொஞ்சம் அதிக ஆர்வத்துடனே YOU TUBE இல் தேடி கண்டுபிடித்துப் பார்த்தேன். பிரபு என்ற இளைஞர் IAS தேர்வெழுதிவிட்டு ரிசல்ட் க்காகக் காத்திருக்கிறார். கவிதை எழுதுகிறார். BE. படித்திருக்கிறார். அப்பா தூய தமிழில் பேசுகிறார்... அம்மா தலைமை ஆசிரியர்.... தம்பி இன்ஜினியரிங் படித்துள்ளான் ...கதை எழுதுவான்... ரஜினி படத்தின் டயலாக் எல்லாம் அப்படியே சொல்வான்..என எல்லோர் புகழும் அங்கே பேசப்பட்டது...
நன்றாக படித்த குடும்பத்தில் இருந்து வந்தவர்...வஞ்சிக்கோட்டை வாலிபனில் சபாஷ் சரியான போட்டி என்ற வசனம் வருவதாக மிகச் சரியாகச் சொன்னதை குறை கூறவில்லை நாம்....கவிதை எழுதும் கவிஞர் என்று சொல்லிக்கொண்டிருக்கும் இவருக்கு தமிழ் எழுத்து "ஐ" குறிலா நெடிலா என்பதில் குழப்பத்தோடு பதிலளித்து சரியான விடையாக அமைந்து விட்டதைப்பற்றியும் கவலையில்லை நமக்கு. .. ஆனால்.... காமராஜர் பிறந்த ஊர் எது என்ற கேள்விக்கு 4 சாய்ஸ் இருந்தும் விடை தெரியவே இல்லையென்று பார்வையாளர்களைக் கேட்டாரே... அது தான் ... நமக்கு வேதனையாக உள்ளது.
அந்த காமராஜர் இல்லையென்றால் தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி ஏது? நாட்டு முன்னேற்றத்திற்கு ஒவ்வொருவரும் கல்வி கற்றிருக்க வேண்டியது அவசியம் என்றுணர்ந்து தமிழகத்தில் கட்டாயக் கல்வியை அறிமுகப்படுத்தி இன்று நாமெல்லோரும் கல்வி கற்று சிறந்த நிலையடைந்திருக்கக் காரமாணவரைப் பற்றி அறியாதிருப்பது நாம் கல்விக்குச் செய்யும் துரோகமல்லவா?
IAS ஆகி மக்களுக்குச் சேவை செய்யவேண்டும் என்ற கனவில் இருக்கும் பிரபுவுக்குக் காமராஜர் பற்றித் தெரியவில்லைஎன்றால் ... அவர் IAS ஆகி நாட்டுக்குச் செய்யப்போகும் நன்மைதான் என்னவாக இருக்கும்? IAS தேர்வேழுதியிருக்கும் பிரபுவுக்குத் தெரியவில்லை என்றால் ஒரு பாமரனுக்கு எப்படித் தெரியும்? தன்னலமற்ற தலைவர் காமராஜரைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் இருப்பது இக்கால மாணவர்களின் குற்றமா .... அல்லது நமது கல்வி முறையிலேயே குற்றமா? சினிமா அரசியல் ஆக்கிரமிப்பில் ... மாணவர்களுக்கு கீழ்த்தரமான சிந்தனைகள் தான் வளர்ந்துகொண்டிருக்கிறது இன்றைய கால கட்டங்களில்....
காமராஜரை இந்தத் தலைமுறையே மறந்துவிட்டது அல்லது அறிந்து கொள்ளாமலேயே உள்ளது என்னும் வேதனை ஒருபுறம் இருக்க... காமராஜர் காலத்தில் வாழ்ந்த சமகால தியாகிகளும், அறிஞர்களும் சமூக ஆர்வலர்களும் கூட எனக்கென்ன என்று இருந்துவிட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.... சமீபத்தில் CNN IBM நடத்திய "The greatest Indian after Mahatma " என்ற கணக்கெடுப்பில் .... நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், கிஷோரே குமார், லதாமங்கேஷ்கர் .... என நாட்டு முன்னேற்றத்திற்குப் பாடுபட்ட(????) இவர்கள் பெயர்களெல்லாம் பட்டியலில் இருக்க.....
காமராஜர் எங்கே, பெரியார் எங்கே என்று கேட்க யாருமே இல்லாமல் போனதுதான் விந்தையாகவே இருக்கிறது இன்னும்.
எது எப்படியோ இந்தமாதம் ஜூலை 15 ஆம் தேதி விருதுநகர் காமராஜரின் பிறந்த நாள்.... இந்தநாளிலாவது தன்னிகரற்ற ஒரு தமிழனை நாம் நினைவில் கொள்வோம்.!
Nice...i m mad about karmaveerar kamaraj!
பதிலளிநீக்கு