என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

புதன், 30 ஜனவரி, 2013

வேறு இடத்திற்குக் குடியேறுவேன்: கமலஹாசன் ..

 ஒரு கலைஞனின் வாயிலிருந்து இந்த வார்த்தையை வரவழைக்கும் அளவிற்கு நம் மாநிலத்தின் நிலைமை இன்று உள்ளதை நினைத்து நாம் வெட்கமும் வேதனையும் அடையவேண்டும். சோதனைகளைக் கடந்து விடலாம் ஆனால் சூழ்ச்சிகளை வெல்வது கொஞ்சம் கடினம்தான். நல்ல ஒரு சிந்தனையாளன், பகுத்தறிவாளான் உலகம் போற்றும் இந்த திறமையான கலைஞன் "இந்தியாவின் அடையாளம்".  இந்த அடையாளத்தை பாதுகாப்பது தமிழர்களின் கடமை, தமிழக அரசின் கடமை.

இஸ்லாமியர்களுக்கு எதிரான படம் என்று சில அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள்தான் கூறுகிறார்களே தவிர பிற மாநிலங்களில் படத்தை முழுமையாகப் பார்த்த சில இஸ்லாமியர்கள் உட்பட எவரும் கூறவில்லை. சில அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் கூறுவதை மட்டும் எடுத்துக்கொண்டு இந்த அளவிற்கு  இவரை வேதைனைப் படுத்துவது  ஒரு தவறான போக்கிற்கே வழிவகுக்கும்.

சட்ட ஒழுங்கு பிரச்சனை வந்துவிடும் என்றும் ஏற்கனவே "Innocence of  Muslims" என்ற படத்திற்கு எதிராக அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டம் நடத்தியதை ஒரு உதாரணமாகக் காட்டி தமிழக அரசு மீண்டும் விஸ்வரூபம் படத்திற்கு தடை விதித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ரசிகர்கள் தனக்கு கட் அவுட் வைப்பதையும் பாலாபிஷேகம் செய்வதையும் பெருமையாகக் கருதும் நடிகர்களிலிருந்து வேறுபட்டு தன ரசிகர்களுக்கு  கண்தானம் செய்வதையும் ரத்த தானம் செய்வதையும் உடல் தானம் செய்வதையும் கற்றுக்கொடுத்து அவர்களுக்கு முன் உதாரனமாகத் திகழ்ந்து சமூக நலனில் அக்கறையுள்ள மிகச் சிறந்த மனிதன் . இப்படி சமூக அக்கறையுள்ள இவர் சமூகத்தைப் பிளக்க ஒருபோதும் நினைக்க மாட்டார் மாறாக நல்ல சிந்தனையையே கொடுத்திருப்பார் என்பதே எனது எண்ணமுமாக உள்ளது.

தணிக்கைக்குழுவினர் சான்றளிப்புக்குப் பின்பும்  நீதிபதி திரைப்படத்தைப் பார்த்து சர்ச்சைக்குரிய காட்சிகள் ஏதுமில்லை என்பதை உறுதி செய்தபின்பு கொடுத்த தீர்ப்புக்குப் பின்பும் மீண்டும் மீண்டும் தடைவிதித்து  தமிழக அரசு இப்படி அலைகழித்துக் கொண்டிருப்பது வேதனையாகவே உள்ளது. இந்தத் தடையுத்தரவை எதிர்த்து கமல் உச்சநீதி மன்றத்திற்குச் செல்லப்போவதாகக் முடிவெடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.


இன்னும் 100 வருஷங்கள் ஆனாலும் இப்படி ஒரு கலைஞன் இந்தியாவிற்குக் கிடைக்க மாட்டான். வேறு மாநிலம் அல்லது வேறு நாடு செல்லும் அளவிற்கு நிலைமை ஆகிவிட்டால் தமிழகத்திற்கு இதைவிட அவமானம் வேறில்லை.

நிறைய விஷயங்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்த கமலஹாசனின் விஸ்வரூபம் படப்பிரச்சனையும் இன்னும் சில விடயங்களுக்கு முன்னுதாரணமே.

நல்ல தீர்ப்பு கிடைக்க வேண்டும்.   கிடைக்கும்.  I SUPPORT KAMALAHASAN.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக