என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

வெள்ளி, 25 ஜனவரி, 2013

விஸ்வரூபம்... பொருத்தமான தலைப்புதான் !




விஸ்வரூபம் என்ற   தலைப்பை கமல்  வைத்தாலும் வைத்தார் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அந்தப்படத்திற்கு பிரச்சனைகள் வளர்ந்து  விஸ்வரூபம் எடுத்துக்கொண்டிருக்கிறது. டி டி எச்  பிரச்சினையைத் தாண்டி, சாய் மீரா பிரச்சனையைத் தாண்டி இப்போது இஸ்லாமிய அமைப்புகளின் எதிர்ப்பிற்கு ஆளாகி படத்தின் வெளியீடு தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.


ஒரு மதத்தை இழிவு படுத்திப் படமாக்கும் அளவிற்கு கமலஹாசன் அனுபவமற்றவர் இல்லை என்ற ஒரு எண்ணம் நமக்கு உண்டு.

அதேபோல எதற்கெடுத்தாலும் போராட்டம் செய்யும் மனோபாவம் மக்களிடையே சமீப காலமாக வளர்ந்துவிட்டது என்பதும் உண்மை.  

படம் பார்க்காமலே  அதைப்பற்றி நமது கருத்தைச் சொல்ல முடியாது என்ற ஒரு காரணம் இருந்தாலும், சினிமாவை சினிமாவாக மட்டும் பார்த்துவிட்டு போகும் மனோபாவத்தை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டுமே தவிர ஒரு சினிமா நம்மை பாதிக்கும் அளவிற்கு அந்தக் கதையோடோ கருத்தோடோ நாம் ஒன்றிவிடக்கூடது என்ற கவலை அதிகமாக உள்ளது.

சினிமா தமிழகத்தில் ஒரு பெரிய மாறுதலை ஏற்படுத்திவிடும் என்றும், ஏற்படுத்தியுள்ளது என்றும், உதாரணமாக மூன்று முதலமைச்சர்களை சினிமா மூலமாகவே தமிழகம் பெற்றிருக்கிறது என்பதும் உண்மையான கருத்தாக இருப்பது நம் மக்களின் மனவளர்ச்சியின் பிழையைத்தான் நமக்குக் காட்டுகிறது.  ஆனால் இன்றைய காலகட்டத்தில் முன்பு போல் இல்லை மக்கள். படிப்பிலும் நாகரீக வளர்ச்சியிலும் சுயமாக சிந்தித்து முடிவெடுப்பதிலும் முன்பெப்போதும் விட இந்த கணினி காலத்தில் மிக்க தெளிவைப் பெற்று உள்ளனர் என்பதில்  ஐயமில்லை.

அதனால் சினிமா என்பது பாடம் அல்ல அதைப் படித்துவிட்டு  Follow செய்ய , இது வெறும் படம் 3 மணிநேரம் mind relax  செய்துவிட்டு சென்றுவிட வேண்டுமென்ற அளவிற்குத் தெளிவான மனதுடனே இருக்கிறார்கள்.

என்னமோ இப்போதெல்லாம் Genius personalities களுக்கு மனவுளைச்சல் கொடுப்பதென்பது மிகவும் சாதாரணமாகிவிட்டது.

மன்மோகன் சிங்கிலிருந்து சச்சின் டெண்டுல்கரிலிருந்து கமலஹாசன் வரை  இந்த அவதிக்குள் சிக்கியுள்ளனர் என்பது வருந்தக்கூடிய விஷயமாக உள்ளது.

மன்மோகன் சிங்க் இல்லையென்றால் மிகப்பெரிய எகானமி பிரச்சினையிலிருந்து இந்தியாவை மீளவைத்திருக்க யாருக்கேனும் முடிந்திருக்குமா அல்லது உலகமே இந்தியாவை ஆச்சரியத்தோடு  திரும்பிப் பார்க்க வைத்திருக்க முடியுமா?

சச்சின் டெண்டுல்கர் இல்லையென்றால் உலக அளவில் கிரிக்கெட்டில் இந்த அளவிற்கு முறியடிக்க முடியாத சாதனைகளை  ஒரு இந்தியனால்  படைத்திருக்க முடிந்திருக்குமா அல்லது  கிரிக்கெட் வீரர்கள்தான் இந்த அளவிற்கு  commercial அந்தஸ்தைக் கண்டிருக்க முடிந்திருக்குமா?

அதேபோலத்தான் கமலஹாசன் இல்லையென்றால் திரைப்படங்களில் புதுமையையும் புரட்சியையும் இவ்வளவு சீக்கிரத்தில் யாராலும் புகுத்தி இருக்க முடியுமா அல்லது  உலகத்தரம் வாய்ந்த படங்களை இயக்கும் ஹாலிவுட்டிலிருந்து ஆங்கிலப்படத்தை இயக்குவதற்கு ஒரு தமிழனுக்கு அழைப்பும் வந்திருக்குமா?


இப்போது விஸ்வரூபம் படத்தில் தவறா? தணிக்கைக் குழுவின் பரிசீலனையில் தவறா என்று பார்ப்பதற்கு முன்,

படத்தைப் பரிசீலனை செய்து தணிக்கைக் குழு வெளியிட அனுமதி அளித்த பின் சமூகப் பிரச்சனை காரணமாக  அளிக்கப்பட தடையுத்தரவை கேட்ட பிறகு  "Religion Disconnects people" என்று எங்கேயோ எப்போதோ படித்த இந்த வாக்கு ஏனோ நியாபகம் வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக