நீயா நானா - பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாக சென்னை மக்களிடையே தமிழர் கலாச்சாரம் எந்த நிலையில் உள்ளது என்பது பற்றிய விவாதம் பார்க்கச்சொல்லி சகோதரர் கூறியதால் பார்த்தேன்....
பெரும்பாலான நீயா நானா சுவாரசியமில்லாமல் இருப்பதைப் போலவேதான் இந்த நிகழ்ச்சியும் இருந்தது. கலாச்சாரம் என்பது என்ன என்பதில் எல்லோரும் எப்போதும் குழப்பத்தில் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள் என்பது இந்நிகழ்ச்சியைப் பார்க்கும்போது இன்னும் தெளிவாகப் புரிந்தது. இதில் விருந்தினர்களுக்குள் சண்டை வேறு. தமிழ் கலாச்சாரம் பற்றி பேசவந்தவர்கள் இவர்கள்.
ஒரு சமூகத்தின் வாழ்க்கை முறை தான் அச்சமூகத்தின் காலச்சாரம் என்பது.
தங்கள் வாழ்வின் அனுபவங்களிலிருந்து நல்லவை தீயவைகளைப் பகுத்து அடுத்த தலைமுறைக்கு அறிவித்துவிட்டுச் செல்வது. அவர்கள் பேசிய மொழி, கலைகள்,நம்பிக்கைகள், வழிபாடுகள், உணவு, உடை இவையனைத்தும் முந்தையோர் பிந்தையோருக்கு விட்டுச் செல்வது. (Transmitting the Life Style... which includes language, art, behaviour patterns, beliefs etc...) இந்த கலாச்சாரம் காலப்போக்கில் அறிவின் வளர்ச்சி/ அறிவியல் வளர்ச்சியால் மாற்றம் அடைந்து கொண்டேதான் இருக்கும்.
முதலில் தமிழ் கலாச்சாரம் பற்றிப் பேசுவதற்கு சாருநிவேதிதா எதற்கு? தமிழ் கலாச்சாரத்தைப் பற்றிப் பேசுவதற்கு இவருக்கு என்ன தகுதி இருக்கிறது? தாய்லாந்து பெண்கள் பிலிப்பைன் பெண்கள் இன்னும் பல நாட்டுப் பெண்களோடு உல்லசமாக இருந்ததையும் அவர்களின் அங்கங்களை வர்ணித்து புத்தகமாகவே எழுதி விற்பனை செய்து பிழைப்பு நடத்தும் இவர் எப்படி இலக்கியவாதியானார்? இவருடைய எழுத்துக்கள் எப்படி தமிழ் இலக்கிய சேவை செய்கிறது என்பது தெரியவில்லை. இதில் மக்கள் புத்தகம் படிப்பதில்லை என்ற ஆதங்கத்தை வேறு வைக்கிறார். தமிழ் மொழி அழிந்துவிடும் என்றும் அங்கு புலம்புகிறார். இலக்கியவாதி என்னும் போர்வையில் தமிழ் மொழியை... கற்பழித்துக் கொண்டிருக்கும் இவர் தமிழ் கலாச்சாரத்தைக் காப்பற்ற தான் வந்ததாக சொல்லிக்கொள்கிறார். தைமிழன் கலாச்சாரம் பற்றி பேச ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு பாண்ட் சட்டையுடன் வந்தது சங்க இலக்கியத்தை வகுத்த தமிழனின் அடையாள உடையா அல்லது அவன் காலத்தில் வாழ்ந்த தமிழனின் உடையா?
இலக்கியம் படிக்கலைன்னா என்ன? "என்று சன்ஷைன்" கேட்டதில் தவறேதும் இல்லை. மொழி என்ற ஒன்றை வைத்துக்கொண்டு இலக்கியவாதிகள் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லும்போது எல்லோருக்கும் கோபம் வந்ததே.... படிக்காதவன் மாட்டிற்கு சமம் என்று சொல்லும்போது மோகன் மட்டுமே எதிரிப்பு தெரிவிக்க மற்றபடி அதை மழுப்பி விட்டு சென்று விட்டார் கோபிநாத். காரணம் ஒரு Activist சரியாகவே சொன்னாலும் அவர் கருத்திற்கு எல்லோருமே எதிராகவும் மிகவும் கீழ்த்தரமாக மக்களை விலங்குக்கு ஒப்பாக பேசியவர் இலக்கியவாதி(???) என்று அமைதியாகவும் இருப்பதே மக்களின் மனநிலையில் இன்னும் மாற்றம் வரவில்லை என்பதையே தெரியப்படுத்துகிறது.
உண்மையிலேயே சொல்லவேண்டுமென்றால்....மூதாதையர்கள் அந்தந்தக் காலத்தில் அவரவர்களுக்கு இயன்றபடி அவர்கள் வாழ்ந்த காலங்களில் இருந்த வழக்குச் சொற்களால் எழுதிவைக்கப்பட்ட வாழ்க்கை முறைகளுக்கும் நிகழ்வுகளுக்குமே இலக்கியங்கள் என்று பிற்காலத்தில்பெயர் வைத்து நாம் போற்றிக்கொண்டிருக்கிறோம் .
சேர சோழ பாண்டிய மன்னர்களெல்லாம் யானைப்படை குதிரைப் படை காலாட்படை என்று முப்படைகளை வைத்திருந்துதான் போர் தொடுத்தார்கள். அதுதான் நம்முடைய கலாச்சாரம் என்று சொல்லிக் கொண்டு இப்போது போர் ஏற்பட்டால் நான் குதிரை மேல போய்தான் போர் செய்வேன் இதுதான் என்னுடைய கலாச்சாரம்னு சொல்லுவோமானால் எதிரில் வந்தால் ஏகே 47, தூரத்தில் இருந்தால் மிசைல்னு அடிச்சு ஒரே இரவில் நம்மை அடையாளம் இல்லாமல்செய்துவிடுவான் நம் எதிரி.
ஆதி தமிழன் வெறும் கிழங்குகளையும் பழங்களையுமே உண்டான் .... பிற்காலத்தில் தான் கிழங்குகளைச் சுட்டுச் சாப்பிடும் வழக்கமும் அதற்கும் பிறகுதான் நீர்ச்சமையல் என்ற ஒன்றே ஆரம்பித்தது. அதாவது கிழங்குகளை நீரில் இட்டு வேகவைத்து சாப்பிடும் பழக்கம். அப்படித்தான் உடையும்...கோமணத்திலிருந்து இடுப்புத் துண்டு... இடுப்புத்துண்டிலிருந்து வேட்டி.. பிறகு வேட்டி சட்டை.. பிறகு மேல்துண்டு என்று ஆண்களின் உடைகளும், மேல் சட்டைகூட போடாமல் வெறும் இடுப்புத்துண்டு பின் .. இரவிக்கை இல்லாமல் சேலையும் பிறகு இரவிக்கையோடு சேலையும் என பெண்களின் உடை மாற்றமும் நிகழ்ந்துதான் சங்ககாலத்துத் தமிழர்களும் அவர்களுக்கு முந்தைய தமிழ் கலாசாரம் உணவுப் பழக்க வழக்கம் , உடைப் பழக்கம் என்ற எல்லாவற்றிலும் ஆதித்தமிழனின் அடையாளத்தை காலப்போக்கில் உடைத்து உடைத்துத்தான் சங்கத் தமிழனாக உருமாறி இருக்கிறான், அதே போலத்தான் சங்கத் தமிழர்களின் உணவு உடை பழக்க வழக்கங்களிலிருந்து இன்றைய தமிழனும் மெல்ல மாறிக் கொண்டிருக்கிறான். இதில் தவறேதும் இல்லை. இந்த மாற்றத்தைத்தான் "நாகரீகம்" என்று சொல்வது. இது மாறிக்கொண்டேதான் இருக்கும். அப்படி மாற்றம் நடந்தால் தான் நாம் மனிதர்கள் என்பது உறுதிப்படும்.
தொல்காப்பியத்தையும், சிலப்பதிகாரத்தையும்... சித்தர் பாடல்களையும் படிக்கவில்லை என்று இன்றைய இளம் தலைமுறையினரை குற்றம் சுமத்துகிறார்கள். இன்றைய எம் ஏ தமிழ் முதுகலைப் பட்டதாரிகூட தொல்காப்பியத்திற்கும் சிலப்பதிகாரத்திற்கும் ஏன் திருக்குறளுக்கு கூட "உரை"நடை நூல் வைத்துக்கொண்டுதான் படித்துக்கொண்டிருக்கிறான். Information Technology படிப்பவன் எதற்கு இலக்கியம் படிக்கணும்? இவனுடைய வாழ்க்கையை வாழ்வதற்கு இவனுக்கு என்ன தேவையோ அதில் தேர்ந்தவனாக இருந்தால் போதும். இதுதான் இன்றைய தமிழனின் வாழ்க்கை முறை. இந்த வாழ்க்கை முறையும் இருபதாம் நூற்றாண்டில் தமிழனின் வாழ்க்கை முறையாக பிற்கால இலக்கியத்தில் இருக்கும்.
நம்முடைய காலத்தில் அறிவியலின் அபரிமிதமான வளர்ச்சியில் ஏராளமான விஷயங்கள் உள்ளது... யாருக்கு எது விருப்பமோ அதை படிக்கட்டும். "இதை ஏன் நீ படிக்கலை?" என்று கேட்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. விருப்பம் இருப்பவர்கள் படிக்கலாம். எல்லோருமே படித்திருக்க வேண்டும் என்று சொல்வது முட்டாள் தனம். மூதாதையர் வாழ்க்கை முறைகளை தெரிந்து வைத்திருப்பது நல்லதுதான், ஆனால் கட்டாயமில்லை.
இன்றைய இளைய தலைமுறைக்கு சமூக அக்கறை இல்லைன்னு புலம்புவது கூட பாஷன் ஆகி விட்டது. மனிதனாகப் பிறந்துவிட்டால் வாழணும் வாழ பணம் சம்பாதிக்கணும், பணம் சம்பாதிக்க வேலை செய்யணும் அதற்கு படிக்கணும். பிடித்த வேலை செய்யவேண்டுமென்றால் பிடித்த படிப்பைத்தான் படிக்கணும். அந்தக் காலத்திலும் அதைத்தான் செய்தார்கள் பிடித்த தொழிலோ தெரிந்த தொழிலோ செய்தது வாழ்க்கையை ஓட்டத்தான். அவர்களின் அந்த வாழ்க்கைதான் இன்று நாம் படித்துக்கொண்டிருக்கும் தமிழர் வாழ்வியல் இலக்கியங்கள் .
அன்றைக்கு அந்த வாழ்க்கை முறையை அக்காலத்து வழக்குத் தமிழில் எழுதி வைத்துவிட்டுப் போனதுபோல் இன்றைய வாழ்க்கை முறையையும் இன்றைய தமிழர்களும் தங்கள் வழக்குத் தமிழில் எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள்... இன்னும் நூறு இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகு இன்றைய தமிழனின் வாழ்வியலையும் இன்றைய தமிழையும் இலக்கியமாக படித்துக்கொண்டுதான் இருப்பார்கள்.
தொல்காப்பியம், சிலப்பதிகாரம் தமிழுக்கும்; திருக்குறளிருந்து பாரதி, பாரதி தாசன் தமிழுக்கும் அதற்குப் பின் கண்ணதாசன் வைரமுத்து தமிழுக்கும் தற்கால புதுக்கவிதைத் தமிழுக்கும் எவ்வளவு வேறுபாடு உள்ளது ... தொல்காப்பியத் தமிழிலிருந்து இளகி இளகி வந்த திருக்குறள்... இன்னும் எளிமையாக பாரதி, பாரதி தாசன் கவிதைகள்... அதைவிட இலகுவாக கண்ணதாசன் வைரமுத்து படைப்புகள் .. என மொழி தன் கடினத்தை மெல்ல மெல்ல இலகுவாக்கி இயங்கிக்கொண்டிருப்பதை ஏற்றுக்கொள்ளும் இலக்கியவாதிகள் ...செம்பு பாத்திரங்களோ பித்தளைப் பாத்திரங்களோ கேஸ் அடுப்போ இல்லாத காலத்தில் மண்பானைகளில் விறகு அடுப்பில் சமைத்தை பண்பாடு என்று சொல்லிக்கொண்டு இன்றும் மண் பாத்திரத்தில் வெளியில் விறகடுப்பில் பொங்குவதுதான் பொங்கல் என்று சொல்வதும் வேடிக்கைதான். எழுத்தில் கடினம் மாற்றி எளிமையை ஏற்றுக்கொண்டவர்கள் வாழ்க்கையில் எளிமையை ஏற்றுக்கொள்ள ஏன் தயங்குகிறார்கள்?
பண்டிகைகள் என்பது வருடத்திற்கு ஒருமுறையோ ஆறு மாதத்திற்கு ஒருமுறையோ உறவினர்கள் ஒன்றுகூடி உண்டு மகிழ மகிழ்ச்சியாக ஆடிப்பாடி இருப்பதற்காகத்தான். கும்மியோ பாரத நாட்டியமோ டிஸ்கோவோ விருப்பப் பட்டதை ஆடட்டும்... கபடி ஆடுகின்றானோ மொட்டை மாடியில் சீட்டுக்கட்டு ஆடுகின்றானோ,கூழ் குடிக்கின்றானோ KFC சாபிடுகின்றானோ உறவினர்களோடு ஒன்றுகூடி மகிழ்ச்சியாக இருக்கிறான் அவ்வளவே. "தை" முதல் நாளை உறவினர்கள் ஒன்றுகூடும் நாளாக இன்றுவரை நாம் கடைபிடிப்பது சில நுற்றாண்டு களுக்குப் பிறகு மாறவும் கூடும். பழக்க வழக்கங்களின் மாற்றம் தான் கலாச்சாரம்: கலாச்சார மாற்றம் தான் நாகரீகம்.
மொழி ஒரு சமூகத்தின் அடையாளம் அது சிதையும் சீர்கெடும் ஆனால் புது வடிவு பெறும். அவ்வளவு எளிதில் அழியாது.
தற்போது பண்டிகைகளுக்கு அப்பால் நாம் யோசிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளது.
"பிள்ளையை கிள்ளிவிட்டுட்டு தொட்டிலை ஆட்டுவது" போலத்தான்... இயற்கையை ஒருபுறம் நாசமாக்கிக் கொண்டே .இயற்கைக்கு நன்றிசொல்கிறோமென்று பொங்கல் வைத்துக் கொண்டாடுவதும்.
பொங்கல் கொண்டாட்டத்தோடு "இயற்கை ஒருபுறம் பொங்கிக்கொண்டிருப்பதையும் உணருங்கள்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக