என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

வியாழன், 17 செப்டம்பர், 2015

அதிசயப் பெரியார்




தந்தை பெரியார்  பற்றி  எவ்வளவு நாள் பேசுவது எத்தனைதான் பேசுவது. பேசித் தீருமா அவரின் பெருஞ்செயல்கள்?

1930 ஆம் வருடம் தந்தை பெரியார் அவர்களுக்கு ஒரு நண்பர் ஒரு புத்தகத்தைக் கொடுக்கிறார். அந்தப் புத்தகம் அவருக்குக் கிடைத்தபோதே சுமார்  40, 50 வருடத்திற்கு முன்பு வெளியிடப்பட்ட புத்தகம் போல் தோன்றுகிறது.  மிக மிகப் பழையதாகவும் பக்கங்கள் கிழிந்து சரியாகத் தெரியாமலும் புத்தகத்தின் முதல் சில பக்கங்கள் இல்லாமலும் இருந்தது. அப் புத்தகத்தை எழுதியவர் யாரென்பதும் வேறெந்த குறிப்பும் அறியப்படாமல் இருந்தது. புத்தகத்தின் பெயர் "இந்துமத ஆசார ஆபாச தரிசினி" .

புத்தகத்தைப் படித்த பெரியாருக்கு ஆச்சரியமும் ஆனந்தமும் மேலோங்கியது. காரணம் அப்புத்தகத்தின் பெரும்பாலான செய்யுட்களும் சுயமரியாதை இயக்கச் சிந்தனைகளையே கொண்டுள்ளது. ஆச்சரியப் படுகிறார் பெரியார் உடனே அந்தப் புத்தகம் முழுவதுமாகக் கிடைக்கவேண்டும் என்ற ஆவலும்  இப்புத்தகத்தைத் தமிழர்களிடம்  சேர்க்கவேண்டியது தன்னுடைய கடமை என்ற எண்ணமும் மேலிட 16-02-1930 மற்றும்
23-02-1930 "குடியரசு " இதழ்களில் வேண்டுகோளாக வெளியிட்டார் .  என்னவெனில் ..


                                 ஓர்  வேண்டுகோள் 
                                  50 வருடத்துக்கு முன் சுயமரியாதை இயக்கம்.  


"சுமார் 40, 50 வருடத்திற்கு முன் பதிப்பித்ததும் "இந்துமத ஆசார ஆபாச தரிசனி" என்ற பெயர் கொண்டதும் 762 பாடல்களை உடையதும், கிரௌன் ஒண்ணுக்கு எட்டு சைசில் 120 பக்கங்களை உடையதுமான ஒரு தமிழ்ப் புத்தகம் எங்கேயாவதும் யாரிடத்திலாவதும் கிடைக்குமானால் தயவுசெய்து வாங்கி உடனே நமக்கு அனுப்பிக் கொடுக்கும்படி வேண்டிக் கொள்ளுகின்றோம்.

ஏனெனில் அப்புத்தகம் ஒன்று நமக்கு ஒரு மாதத்திற்கு முன் ஒரு நண்பரால் அனுப்பப்பட்டிருக்கின்றது. ஆனால் அது மிக்க  பழையதாகவும் முதலிலேயே சில பக்கங்கள் இல்லாமலும்,  சில பக்கங்கள் கிழிந்து  சரிவரத் தெரியாமலும்   இருப்பதால், கிழியாத புத்தகம் ஒன்று வேண்டியிருக்கிறது.  அப்புத்தகம்  நமது இயக்கக் கொள்கைகளையே முக்கியமாய் வைத்துப் பாடின பாட்டுக்கள் அநேகம் அதில் இருக்கின்றன.

                                                                                                                                    ஈ வெ. ரா.

                                                                             ( 'குடியரசு' , 16-2.1930. பக்கம் 4;  23.32.1930 பக்கம் 4)


இந்த அறிவிப்பிற்குப் பிறகு 1946 ஆம் ஆண்டில் அறிஞர் எஸ்.டி சற்குணம் அவர்களிடமிருந்து  முழுமையான நூல் கிடைக்கப் பெற்றது. (இந்நூல் ஆசிரியர் அத்திப்பாக்கம். அ. வேங்கடாசல   நாயகர் . வெளியிட்ட ஆண்டு : 1883. )  உடனடியாக திருப்பூர் இராமலிங்கம் அவர்களால் அதே ஆண்டு புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.


இப்போதுதான் பெரியாரைப் பார்த்து வியக்கத் தோன்றுகிறது. அதாவது இப்புத்தகத்தின் மதிப்புரையில் இப்படி எழுதுகிறார் ...


......"நான் பெரிதும் தொண்டாற்றி வரும் பகுத்தறிவை ஆதாரமாகக் கொண்ட சுயமரியாதை இயக்கத்தின் கருத்துக்கள் இன்றைக்கு 60,70 ஆண்டுகளுக்கு முன்பாகவே மிகத் துணிவோடு தெளிவாக செய்யுள் உருவாயப் பாடப்பட்டிருப்பது கூர்ந்து நோக்கினால், சுயமரியாதை  கருத்துக்கள்  புதியனவல்ல என்பதோடு வெகுகாலத்திற்கு முன்பதாகவே, அதாவது நான் பிறப்பதற்கு முன்னதாகவே பல அறிஞர்களால்  வெளியிடப்பட்ட   பழங் கருத்துக்கள் என்பதற்கு தக்க சான்றாகும்.".... 

யோசித்துப் பாருங்கள், மற்றவர்கள் கருத்துக்களைத் தன் கருத்துக்கள் என்றும் அடுத்தவர் எழுதிய புத்தகத்தைத் தன்னுடைய பெயரில் வெளியிட்டு பேர் வாங்கும் அயோக்கிய கவிஞர்களும் தலைவர்களுக்கும் மத்தியில் தன்னுடைய கொள்கையைக் காப்பாற்ற கண்ணியமாக செயல்பட்டு வாழ்ந்த பெரியார் ... உண்மையிலேயே அதிசயப் பெரியார் தான்.

 2015 ல் தந்தை பெரியாரின் பிறந்த நாளில் அவர்  குறித்து அறியவேண்டிய அரிய செய்திகளை  பகிர்வோம் .




இந்து மத ஆசார ஆபாச தரிசினி யில் இருந்து சில செய்யுட்கள்

அரசர் ஏமாந்து ஈந்த   அரும்புவிப் பொருள்களாலும்
சரச பத்தியினால் ஈந்த தனமுளார் ஈவினாலும்
வரம் தரும் என்று அர்ச்சிக்க வழங்கிய பணத்தினாலும்
சிரமயிர் வாங்க ஈந்த செம்பு நாணயத்தினாலும்


அப்படியாகக் கோயில் அடுத்து அடுத்திடவே கட்டி
செப்பினில் சிலைகள் வார்த்துச் சேர்ந்திட மூர்த்தி கத்திற்
கொப்பிட மந்திரத்தால் கும்பாபி ஷேகம் செய்து
கம்பும் பீதம்பரங்கள் கனகரத் தினத்தாள் பூணாம்


மூடர்கள்  ஆனதாலே முழுதுமே பார்ப்பார்க்கு ஈந்து
வாடியே மனமும்ம் நொந்து வாழ்க்கையை இழந்தே அந்தோ
கூடிய பெண்டு பிள்ளை குலாவிய சுற்றம் நீங்கி
நீடிய காட்டுக்கு ஏகி நிலை இலாது அலைந்து சாவர்

..... இப்படி நிறைய செய்யுள் .....






                                   .....................


1 கருத்து: