நாள் : 11-04-2016 ஞாயிறு மாலை 6 மணி
இடம் : மாமண்டூர்
நிகழ்ச்சி: தேதிமுக மநகூ மாநாடு
காட்சி :1 வைகோ பேசினார்
மதுவிலக்கு வேண்டுமென போராடியதால் உடல் நிலை சீரழிந்து தன்னுடைய 99 வயது தாய் இறந்துவிட்டதாக கூறினார். உயிர்த்தியாகம் செய்த தாய்க்கு மகனாகப் பிறந்ததில் பெருமிதம் கொள்வதாகக் கூறினார்...
9:35 மணி வரை திரு. வைகோ அவர்களே பேசினார்.
இதிலிருந்து தேதிமுகமநகூ யின் கொள்கை என்னவென்று தெளிவாகப் புரிந்துவிட்டது . அதாவது விஜய காந்தை அதிகநேரம் பேச விடக்கூடாது என்பதே அது.
காட்சி 2
முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்த் நிற்கிறார்.
இன்று மாமண்டூர் மேடையில் 15 நிமிடம் நின்றார்.
9:35 pm to 9:50 வரை ஏதோ சொல்ல முயற்சி செய்துகொண்டே இருந்தார்.. .
"அதாவது. ..நான் ஏன் சொல்றேன்னா..ஒரு ஒரு வாட்சு ஒரு ஒரு டைம் காட்டும். 10 மணிக்குள்ள பேசிமுடிக்கலன்னா ஜெயலலிதா கேஸ் போட்டுடும் அதனால மக்களே உறுதி உறுதி என்று சொன்னார். .சத்தியமாக எனக்கு இதுமட்டும்தான் புரிந்தது . ..
பேசி முடித்த உடனே விஜயகாந்தை கீழே விழுந்துவிடாமல் இருக்க வைக்கோ அவர்கள் கைத்தாங்கலாக பிடித்துக் கொண்டார். .
அவ்வளவுதான் இன்றைய மேடை நிகழ்ச்சிகள். .தே.திமுக. ம ந கூ முதல் மாநாடு ஒவர்....
மாநாட்டின் பலன் : கூட்டணி தலைவர்கள் அனைவருக்கும் "ஏலக்காய் மாலை" கிடைத்தது.
பிரேமலதா உட்பட கூட்டணி தலைவர்களின் மனநிலை : நல்வேளை மக்களுக்கு எதுவும் புரிஞ்சிருக்காது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக