என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

துறைவன் விமர்சனமும் - விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள இயலாத ஆசிரியரின் தரமற்ற எதிர்வினையும்


சமீபத்தில் என்மதிப்பிற்குரிய நல்லாசான் புலவர் திரு. சூசை மிக்கேல் அவர்கள் "துறைவன்" என்ற நாவலுக்கு எழுதிய நேர்மையான விமர்சனம் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 

தமிழாய்ந்த அறிஞர்கள் போற்றிப் பெருமிதம் கொள்ளும் எழுத்தாளுமை கொண்ட அரிய புலவர் அய்யா சூசை மிக்கேல் என்பதை நற்றமிழைக்  கற்றறிந்தோர் நயந்து சொல்வர். 

திரு. சூசை மிக்கேல் அவர்கள் எழுதிய "வள்ளுவன் நெய்தல் நிலத்தவரே என்ற " ஆராய்ச்சி நூல் நெய்தல் நில மக்களின் வழக்குச் சொல்லையும் வாழ்க்கை முறையையும் அணு அணுவாய்ப் பிளந்து விவரித்துச் சொல்லி இருக்கிறது. அப்புத்தகம் "நெய்தல் நில மக்களின் வட்டாரச் சொற்களின் நிகண்டு" என்றே கூறுமளவிற்கு மிகச் சிறப்பானது. அந்த உயர்வான நூலினை "அழித்து அழித்துப்"  படித்து வியந்தவர்களில் நானும் ஒருத்தி.  (அப்புத்தகத்திற்கு அடியேனின் சிறு கருத்துரையும் நல்கியுள்ளேன் என்பது நான் பெற்ற பெரும் பேறு). 

நிற்க,  
"துறைவன்" என்ற நூலிற்கு திரு. மிக்கேல் அய்யா அவர்கள் விமர்சனம் எழுதி உள்ளார் என்பதே அப்புத்தகத்திற்குக் கிடைத்த பெரும் பேறு.  

அவ்விமர்சனத்தை அய்யா அவர்கள் திரு. கிரிஸ்டோபர்  அவர்களுக்கு அனுப்பிய போதே எனக்கும் மின்னஞ்சல் CCல் சேர்த்து அனுப்பி இருந்தார். 

அவ்விமர்சனத்தில் அய்யா அவர்கள், அப்புத்தகத்தை எழுதிய திரு கிரிஸ்டோபர்  அவர்களின் தோள்தட்டி வாழ்த்தியதும் பிழைகள் சுட்டி வருந்தியதும் கண்ட போது கி.ஆ.பெ. விசுவநாதன் அவர்களின் அன்புமிக்க மாணவரான அய்யா அவர்கள் நெய்தல் நிலத்தின் மீது கொண்ட உண்மையான நேசமும் சில தவறுகள் நேர்ந்துவிடாமல் தடுத்திருக்கலாமே என்கிற ஆதங்கமும் மட்டுமே காண முடிந்தது .

அதுமட்டுமன்றிதுறைவனுக்கு அணிந்துரையை எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் எழுதியிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது அய்யா அவர்களின் "நேர்மை" யைப் பறைசாற்றுகிறது.  காரணம் வெறும் கற்பனைக் கதைகள் காதல் கதைகள் என்று எழுதியிருந்தால் ஜெயமோகனின் அணிந்துரை பற்றி கவலை ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால் இது வரலாற்று புதினமான காரணத்தினால் "அறிந்தோர் மட்டுமே அளக்க முடியும்" என்று அய்யா அவர்கள் கூறியது உண்மையே.

இங்கு நான் மற்றொன்றும் கூற கடமைப் பட்டிருக்கிறேன். தமிழ் இலக்கியங்களையும் வரலாற்று புதினங்களையும் தேடித் தேடித் படிக்கும் நான் இணையதளத்தில் குழாயடிச் சண்டையிட்டே பிரபலமான ஜெயமோகன் மற்றும் சாருநிவேதிதா இருவரையும் எழுத்தாளர்களாக ஏற்றுக்கொண்டதே இல்லை.  நல்ல தமிழை இரவு பகல் கண்விழித்துப் படிக்கும் நான் இவர்கள் எழுத்துக்களை இரண்டு பக்கங்கள் கூட படிக்க விரும்பியதேயில்லை.  இதை நான் இன்று கூறவில்லை 2012ஆம் ஆண்டே கூறியுள்ளேன் (பார்க்க:  http://latharaniyinsorchithirangal.blogspot.in/2012/02/blog-post_03.html )

இப்படியிருக்க.... அய்யா அவர்களின் ஆதங்கம் நூறு சதவீதம் உண்மையாக இருக்கும் என்பதை நான் "துறைவனைப் படிக்காமலேயே - ஜெயமோகனின் அணிந்துரையைப் படிக்காமலேயே கூறிவிடுவேன்" .

சரி அடுத்ததாக, அய்யா அவர்களின் விமர்சனத்திற்கு பதில் எழுதிய கிறிஸ்டோபர்

 2-4-2016 அன்றைய மின்னஞ்சலில் இப்படி எழுதி முடிகிறார்..


"மதிப்பிற்குரிய ஐயா சூசைமிக்கேல் அவர்களுக்கு,

துறைவனை மிக ஆழமாக அலசி ஆய்ந்தமைக்காக என்னுடைய முதற்கண் வணக்கம்!

பொதுவாகவே ஜாதி என்று வரும்போது சிறு துரும்பிற்கும்  உணர்ச்சிவசப்படும் இந்த காலகட்டத்தில் மிகவும் நிதானமாக எதிர்வினையாற்றியமைக்கு ஒரு சக நெய்தல் படைப்பாளியாகவும் ஒரு மீனவனாகவும் பெருமைப்படுகின்றேன். 

துறைவன் நாவலை 2014 மே மாதத்தில் எழுதி முடித்தேன். துறைவனை வெளியிடுவதற்காக பலரை தொடர்புகொண்டும் முடியாமல் போனது. 2015 ஆகஸ்டு மாதம் குறும்பனை பெர்லினின் தொடர்பு கிடைத்தபிறகு துறைவன் விரைவில் வெளிவருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். 2015 நவம்பர் மாதம் முக்கடல் பதிப்பகம் துறைவனை வெளியிட்டது.  நெய்தல் படைப்பாளிகளின்மீதும் நெய்தல் இலக்கியத்தின் மீதும் அக்கறை கொண்ட உங்களைப்போன்றவர்களின் தொடர்பு இதற்கு முன்பு கிடைக்காததற்காக வருந்துகின்றேன்....
........
....................................
......நான் எப்போதும் என்னுடைய தவறுகளை சரிசெய்ய திறந்த மனதுடன் இருக்கின்றேன். உங்களைப்போன்ற மிகையுணர்ச்சியில்லாத ஆக்கபூர்வமான அறிவார்ந்த விவாதத்திற்கு எப்போதும் தயாராகவே இருக்கின்றேன்.

மீண்டும் விவாதிப்போம்.

அன்புடன் 

கிறிஸ் "

இந்த மின்னஞ்சல்கள் எனக்கும் cc செய்யப்பட்டு வந்தவை என்பதினால் கூறுகிறேன். 


இப்படி கூறியவர் மிண்டும் 2 நாட்கள் கழித்து அதாவது 4-4-2016 அன்றைய மின்னஞ்சலில் 

"நீங்கள் ஜெயமோகன் மீதுவைக்கும் குற்றச்சாட்டை அவருக்கு தனிப்பட்ட முறையில் அனுப்பிவையுங்கள். அவர் உங்களுக்கு பதிலளிப்பார் என்று நம்புகின்றேன்.

உங்களின் விலைமதிப்பற்ற நேரத்திற்கு நன்றி." - 

இப்படி எழுதியுள்ளார்.... இடையில் ஏற்பட்ட தடங்கல் தான் என்னவென்று யோசிக்கின்றேன்.


அதோடு நின்றுவிடவில்லையே மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியதைப் போலல்லவா இருந்தது  8-4-2016 அன்றைய முகநூல்  பதிவு...

எழுதியிருக்கிறார் பாருங்கள்..

.........
"ஐயா பெரியவரே, உங்களுக்கு நான்தான் கிடைத்தேனா? தயவுசெய்து கனவிலிருந்து விழித்தெழுங்கள்.
15. இறுதியாக:
மொத்தத்தில் துவார்தே பர்போசாவால் என்மனம் புண்பட்டதால்தான் நான் துறைவனை எழுதினேன். துறைவன் தொ. சூசைமிக்கேலை புண்படுத்திவிட்டதாக உளறுகின்றார். உண்மையான மீனவர்கள் துறைவனை கொண்டாடுகின்றார்கள். துறைவனை விற்பனை செய்து காசுபார்க்கும் நிலையில் நானில்லை. பத்து லட்சம் செலவுசெய்து துறைவன் வெளியீட்டிற்கு குடும்பத்துடன் வந்திருந்தேன்.....

.....உயிரைக்கொடுத்து உண்மையான நெய்தல் இலக்கியம் படைப்பவனை  பிரதியெடுப்பு  முதல்நிலை நெய்தல் படைப்பாளிகள் விரட்டியடிக்க நினைப்பதில் வியப்பொன்றுமில்லை.
துறைவனில் “சுங்கான்” என்னும் சொற்பதத்தை உபயோகித்திருப்பேன். சுங்கான் ஒரு சிறியமீன். ஆனால் அதன் முள் மிகவும் விஷமானது. சில நேரம் நல்லமீன்களின் கூட்டத்தின் இடையிடையே சுங்கானும் கிடக்கும். நாம் கரைமடியில் கிடக்கும் நெத்திலி போன்ற சிறிய மீன்களை கையினால் வாரியெடுக்கும்போது சுங்கானின் முள் எதிர்பாராவிதமாக நம் கையில் குத்திவிடும். அப்புறம் ஓவென்ற அலறல்தான். இந்த விமர்சனமும் அதைத்தான் காட்டுகின்றது.
என்னை சீண்டிவிட்டதோடன்றி எனக்கு மன உளைச்சலையும் உண்டாக்கிவிட்டு நல்ல பிள்ளைபோல் நான் இன்னும் பல நெய்தல் படைப்புகள் படைக்கவேண்டுமாம். மிகப்பெரிய இலக்கிய கர்த்தாவான அவரே அவரின் எதிர்பார்க்கும் ரசனைக்கும் ஏற்ப செவ்வியல் நெய்தல் காப்பியங்கள் புனையலாமே......
என்றும் ..
.... திரு. தொ. சூசைமிக்கேல் அவர்கள் என்மீதிருக்கும் உரிமையில் எழுதியதாகச்சொல்லிக்கொண்டு விமர்சனம் என்னும் பெயரில் கூர்கத்தியை என் பள்ளையில் குத்திச்சொருகி என்னை கீழே தள்ள முயன்றிருக்கின்றார். விமர்சனம் எழுதலாம், ஆனால் எழுத்தாளனின் கு.....

சீசீ... நா கூசும் வார்த்தைகளைக் கொட்டியுள்ளார்.  

இப்படியான வார்த்தைகளிலிருந்தே தெரிந்து விடுகிறது கிறிஸ்டோபரின் எழுத்தின் வளர்ச்சியும் எண்ணங்களின் முதிர்ச்சியும்  மற்றும் அவரைச் சுற்றியுள்ள ஆட்களின் தரமும். 

வேறென்ன சொல்வது?  பாவம் கிறிஸ்டோபர் தவறுகளைத் திருத்திக்கொள்ளும் பக்குவம் உள்ளவனே படைப்பாளி என்கிற சாதாரண விஷயத்தையே இன்னும் படிக்கவில்லையே என்ற பரிதாபமும் ஏற்படுகிறது எனக்கு. 

"மிகப்பெரிய இலக்கிய கர்த்தாவான அவரே அவரின் எதிர்பார்க்கும் ரசனைக்கும் ஏற்ப செவ்வியல் நெய்தல் காப்பியங்கள் புனையலாமே...... " என்று கூறும் அய்யா கிரிஸ்டோபர் அவர்களே .....

ஜெயமோகனையும் சாருநிவேதிதாவையும் படிக்கும்  எவருக்குமே என்ன தரம் இருக்கும் என்பதை உங்களின் இந்த பதிவு மெய்ப்பித்துவிட்டது. அதனால் தான் தமிழையும் தான் பிறந்த நெய்தல்நில மண்ணின் ஒவ்வொரு துளியையும் தன் உயிராகவே கருதும் எங்கள்  ஆசான் அய்யா திருமிகு. சூசை. மிக்கேல் அவர்கள் போன்றோரின் தரம் உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லாமலே போய்விட்டது. இனியாவது நல்ல இலக்கியங்களைத் தேடித் தேடிப்  படியுங்கள். நல்லவர்களோடு பழகுங்கள். உயர்வானவர்களை தான்தோன்றிகள் பேசுவது போல் பேசிவிடாதீர்.  

அவ்வை அன்றே சொல்லி இருக்கிறாள்.... 

   நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
   நல்லார்சொற் கேட்பதுவும் நன்றேஎ-நல்லார்
   குணங்க ளுரைப்பதுவும் நன்றே அவரோ
   டிணங்கி யிருப்பதுவும் நன்று.
என்றும் ....
 தீயாரைக் காண்பதுவுந் தீதே திருவற்ற
   தீயார்சொற் கேட்பதுவுந் தீதேஎ-தீயார்
   குணங்க ளுரைப்பதுவுந் தீதே அவரோ
   டிணங்கி யிருப்பதுவுந் தீது.

இதற்குமேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை  நன்றி. ... கிரிஸ்டோபர் - உங்களை எங்களுக்கு அடையாளப்  படுத்தியதற்கு !!


இணைப்புகள் 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக