இமயமலையின் தென்பகுதியிலுள்ள கங்கோத்ரி என்ற பனிப்பாறை (Glacier) உருகி உற்பத்தியாவதுதான் கங்கை நதி. மிகவும் தூய்மையான நீராகத்தான் ஓடிவருகிறது.
அந்தத்தூய்மையான கங்கை நீர் இந்தியாவிற்குள் பாய்ந்தவுடன் அசுத்தமாக மாறுவதற்கு முழுக்காரணமும் கைபர் போலன் கணவாய் வழியாக வந்த ஆரியப் பார்ப்பனர்கள்தான்.
ஆங்காங்கே நீர்நிலைகள் இருந்த இடங்களிலெல்லாம் கூட்டம் கூட்டமாக வந்து குடில்கள் அமைத்துத் தங்கிய இந்த நாடோடிக் கூட்டத்தினர் "பிஷாம் தேஹி " என்று தெருத்தெருவாக பிச்சை எடுத்துப் பிழைப்பு நடத்தினர். ஒரு காலகட்டத்தில் ஒரே இடத்தில் உட்கார்ந்து பிச்சை கேட்க கையாண்ட சூட்சும உத்திகள் தான் பூஜைகள் புனஸ்காரங்கள் என்ற அர்த்தமற்ற சடங்குகள்.
அதற்கென்று உருவாக்கிய கதைகள்தான் மோட்சம், தோஷம், பாவம், புண்ணியம், ஆத்மா, சொர்க்கம், நரகம் என்ற அத்தனையும்.
எல்லா நதிகளில் ஓடும் நீரும் தூய்மையானவைதான். கங்கைக்கென்று எந்த ஒரு கூடுதல் (Extra ) புனிதமும் இல்லை. ஆனால் இந்த கங்கை நீர் புனிதமானதென்றும் இந்துவாகப் பிறந்தவன் கங்கையில் ஒருமுறையேனும் முங்கி எழ வேண்டும் என்றும் வாழ்நாளில் ஒரு துளி கங்கை நீராவது பருக வேண்டுமென்றும் சொன்னதோடு மட்டுமல்லாமல்,
செத்த பிணத்தைக்கூட விடாமல் இறந்தவன் ஆத்மா சாந்தியடைய பிணத்தை அலங்கரித்து சடங்குகள் செய்து புனித கங்கையில் விடவேண்டும் என்பதும், எரித்துவிடும் பழக்கம் உள்ளவர்களிடம் சாம்பலை (அஸ்தியை) கங்கையில் கரைத்தால் போதுமென்றும் அவன் ஆத்மா சாந்தியடைந்துவிடும் என்றும் சொல்லி கங்கை நதிக்கு பெண் உருவம் கொடுத்தும், அவள் யார், எப்படிப் பிறந்தாள் என்ன செய்வாள் என விதவிதமாக அவர்கள் அவிழ்த்துவிட்டு கதைகள் ஏராளமாக உண்டு.
அவற்றில் சில...(மிகச் சுருக்கமாக)
கதை 1
" மகா விஷ்ணு "வாமன (குள்ள பிராமணன்) அவதாரம் எடுத்தபோது பிரம்மா அவருடைய காலைக் கழுவி அந்த நீரை கமண்டலத்தில் பிடித்துவைத்துக்கொண்டாராம். அந்த புண்ணிய தீர்த்தமே கங்கை நதி என்ற ஒரு புரட்டுக் கதையும்
கதை 2:
பகீரதன் என்னும் மன்னன் தன் முன்னோர்கள் முக்தியடைவதற்காக வானுலகிலிருந்த கங்கையை பூமிக்குக் கொண்டுவர கடுமையான தவம் மேற்கொள்ள கங்கை பூமியில் பாய்ந்தாளாம். அவள் வேகம் பூவுலகை அழித்துவிடும் என்பதால் சிவபெருமான் தன் ஜடாமுடியில் தாங்கினாராம். இதைக் கண்ட பகீரதன் சிவபெருமானை வேண்டிக் கொண்டதால், ஏழு துளிகளை மட்டும் பூமியில் விழச் செய்தாராம். அதில் ஏழாவது துளி மட்டும் பகீரதனைத் தொடர்ந்து நதியாக ஓடிவந்தபோது ஜன்னு என்னும் முனிவரின் ஆசிரமத்தை மூழ்கடித்ததாம்.அதனால் கோபம் கொண்ட முனிவர் அந்த நதியை விழுங்கிவிட்டாராம்.
உடனே பகீரதன் முனிவரிடம் தன் முன்னோர்கள் சாபநிவர்த்தியடைய அருள்புரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டானாம் . மனமிரங்கிய முனிவர், தான் விழுங்கிய கங்கை நதியை "காது வழியாக" விடுவித்தாராம். பின்னர் அந்த கங்கை நீரில் பகீரதன் தன் முன்னோர்களின் அஸ்தியைக் கரைத்து அவர்களை மோட்சம் பெறச் செய்தானாம்.
கதை 3:
சாகர் என்கிற அரசர் “தனக்கு மிகுந்த சக்தி வேண்டும்” என்பதற்காக அஸ்வமேத யாகம் செய்ய, இந்திரன் “தனது சொர்க்க பதவியை இழந்து விடுவோமோ" என்று நடுநடுங்கிப் போனானாம். அதனால் அஸ்வமேத குதிரையைத் திருடி அதை முனிவர் கபிலர் வாழ்ந்த ஆசிரமத்திலிருந்த மரம் ஒன்றில் கட்டி வைத்தானாம்.
குதிரையைக் காணாததால், அரசனின் 60,000 புதல்வர்கள் அதைத் தேடிச் சென்றார்களாம் . குதிரை முனிவரின் ஆசிரமத்தில் இருப்பதைக் கண்டு அதை விடுவிக்க முயற்சி செய்தனராம். அப்போது ஏற்பட்ட சத்தம் தியானத்திலிருந்த முனிவருக்கு இடைஞ்சலாக இருந்ததாம். தான் குதிரையைத் திருடிவிட்டதாக அவர்கள் நினைக்கிறார்கள் என்பதை அறிந்த முனிவர் மிகவும் கோபங்கொண்டாராம். கோபத்துடன் அவர் பார்த்த பார்வையிலேயே சாகரின் புதல்வர்கள் 60,000 பேரும் எரிந்து சாம்பாலாகிவிட்டனராம்.
இறந்தவுடன் செய்யவேண்டிய ஈமச் சடங்குகள் முடிவதற்கு முன்பே அவர்கள் எல்லோரும் எரிந்து சாம்பலாகி விட்டதனால் அவர்கள் பேய்களாக அலைந்தார்களாம் . அவர்களில் தப்பிப்பிழைத்த ஒரு சகோதரன், அன்சுமன் என்பவன், “ என்ன சடங்கு செய்தால் இந்த பேய்களான எனது சகோதரர்கள் எல்லோரும் சொர்க்கத்திற்கு செல்ல முடியும் முனிவரிடம் கேட்டானாம். அதற்கு முனிவர், “ புனிதமான கங்கையில் அவர்கள் சாம்பலைக் கரைத்தால் சடங்குகள் முடிவடையும் “ எனக் கூறினாராம்.
பிறகு பிரம்மாவின் ஆசியால் கங்கை பூமிக்கு வந்தாளாம். அதில் 59999 சகோதரர்களின் அஸ்தியைக் கரைத்து அவர்களுக்கு சொர்கத்திற்கு அனுப்பினானாம் என்று அறிவுக்கு சற்றும் ஒவ்வாத பலப்பல கதைகள் கங்கா நதியைப் பற்றி சொல்லிச் சொல்லி மக்களை ஏமாற்றி வந்திருக்கின்றனர் ஆரிய பிராமண பார்ப்பனர்கள் .
இப்படி மக்களை ஏமாற்றி பார்ப்பனன் பிழைக்க வழி செய்த தந்திரங்களும் அவற்றையெல்லாம் நம்பி மோசம் போன நம் புத்திகெட்ட மக்களும் தான் கங்கையாற்றின் இன்றைய இந்த நிலைக்குக் காரணம்.
பிணத்தைக் கட்டி கங்கையில் விட்டால் அது அடித்துக்கொண்டு போய் கடலில் கலந்தால் கடல் வாழ் உயிரினங்களுக்கு உணவாக மாறிவிடும். பிணத்தோடு எறியும் பூமாலைகள் கூட சிறிது நாட்களிலே அழுகி மக்கிவிடும். இதுவும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்திவிடாது.
ஆனால் நிலைமை என்னவென்றால் பிணங்களோ பூக்களோ அடித்துச்செல்லப்பட்டு கடலில் கலப்பதில்லை. சரியாக எரிக்காத பிணங்களும் சட்டி பானைகள் என மற்ற பொருட்களும் கங்கையின் ஓரத்திலேயே தேங்கி விடுகிறது.
இதுமட்டுமன்றி லட்சக்கணக்கில் செல்லும் மக்கள் இந்த சடங்கு செய்யும் போது கூடவே வீசியெறியும் பிளாஸ்டிக் போன்ற மக்கதை குப்பைகளும் கழிவுகளும் ஓடும் நீரில் அடித்துச் செல்லப்படாமல் ஓரங்களில் தங்கி நதியை அசுத்தமாகி நீரையும் நச்சுத்த தன்மை நிறைந்ததாக மாற்றிவிடுகிறது.
அரசாங்கமும் தூய்மைப் படுத்தும் எண்ணமே இல்லாமல் இத்தனை காலமும் இருந்துவிட்டது.
அதனால் தான் இன்று அழுகிய சடலங்களும் மற்ற கழிவுகளும் சேர்ந்து நச்சுத்தண்மையான நீராக மாறி அதைக் குடித்தாலோ அல்லது அதில் குளித்தாலோ புற்றுநோய் வரும் அபாயம் இருப்பதாக அறிவித்துள்ளனர்.
ஆனால் விந்தையாக, பிணங்கள் ஊறிய கங்கை நீர் புனித நீராக பாட்டில்களில் அடைக்கப்பட்டு தென் இந்தியாவில் தபால் நிலையங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
முன்பெல்லாம் இறக்கும்போது கங்கை நீர் பருகினால் அவர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்று முட்டாள் தனமான நம்பிக்கையைக் கொண்டிருந்தார்கள். அதனால்தான் வயதானவர்கள் இறக்கும் தருவாயில் அவர்களுக்கு கடைசியாக கங்கை நீரை வாயில் ஊற்றுவார்கள். (கவனிக்க: கங்கை நீர் வாயில் ஊற்றியவுடன் இறந்திருக்கிறார்கள். போகாத உயிர் கூட உடனே போயிருக்கிறது )
அதற்கென்றே முட்டாள்கள் வீட்டுப் பூஜையறையில் கங்கைநீர் உள்ள ஒரு வெண்கலக் குவளையை மஞ்சள் துணியில் கட்டி வைத்திருப்பார்கள்.
இப்போது மரணப் படுக்கையில் இருப்பவர்களுக்கு என்றில்லாமல் எல்லோரும் குடித்துவிட்டு செத்துவிடுங்கள் என்று தென்னிந்தியாவில் மத்திய அரசே தபால் நிலையங்களில் விற்பனை செய்கிறார்கள் போலும்.
"கங்கை ஜலத்தில் துளியை உட்கொண்டால் யமன் விவாதிக்கவே மாட்டான்” என்று ஆணித்தரமாக ஆதி சங்கரர் பஜகோவிந்தத்தில் சொல்லியுள்ளாராம்.
இதை நம்பி கங்கை நீரைப் பருகிட வேண்டாம். பருகினால் மரணம் நிச்சயம்.
விழிப்புடன் இருங்கள். நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டுமென்றால் பார்ப்பனன் சொல்லும் ஒரே ஒரு சொல்லைக்கூட நம்பாதீர்கள்.
எழுத்து :- லதாராணி பூங்காவனம்
......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக