என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

திங்கள், 10 அக்டோபர், 2016

வறட்டி வாங்குங்க.... அமேசான் ஆன்லைனில் கிடைக்கிறது !!




மாட்டுச் சாணத்தில் செய்த வறட்டி அமேசான் ஆன்லைன் ஷாப்பிங்கில் கிடைக்கிறது. 5 வறட்டியின் விலை வெறும் $ 19.85 டாலர் தான் அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ.1300/-

ஆச்சரியமாக இருக்கிறதா?   எனக்கு அதிர்ச்சியாகவே இருக்கிறது. காரணம் வறட்டியின் விலை அல்ல.  இதை எதற்காகப்  பயன்படுத்துகிறார்கள் என்று விளக்கி விளம்பரப்படுத்தியத்தைப் பார்த்துத்தான் அதிர்ந்தேன்.

இதுதான் அந்த விளக்கம்/ விளம்பரம் 

  • Cow Dung Fully Natural
  • It's a Dried and Semi Hard
  • Eco Friendly
  • Use for natural manure, Environment Cleaning Agent, Item useful for Pooja purpose
 
பூஜை செய்வதற்கு உபயோகப்படும் என்று சொல்லி வரும் விளம்பரத்தை என்ன வென்று சொல்லுவது?

அமெரிக்காவிலிருந்து வரட்டி  விற்பனைக்கு வருகிறது அதுவும் ஒரு பூஜைப் பொருளாக என்றால் நிச்சயமாக இதை வாங்குபவன் இந்தியன் தான். அதுவும் இந்து மதத்தைச் சேர்ந்தவன் தான்.

இந்து மதத்தின் முட்டாள்தனம் உலகெங்கிலும் பரவியுள்ளதென்பதற்கு
இதைவிட வேறென்ன சான்று வேண்டும்?



வெட்கக்கேடு !!


- லதாராணி பூங்காவனம் 

2 கருத்துகள்: