நேற்றோடு நாள்பதி நான்கும் முடிந்தது
காற்றோடு செய்திகள் காணாமல் போகுது
வேற்று மனிதரை வார்டு தடுக்குது
ஆட்சி அலுவலகாய் அப்பல்லோ ஆனது
மீண்டு வரவேண்டி மண்சோறு தின்னுது
தீண்டி விடும்போது தீக்குளித்துச் சாகுது
வேண்டி விரதமேற்று வீழ்ந்து புரளுது
காட்டு மனிதனாகி காரியங்கள் செய்யுது.
அம்மா நலமே; ஆளுநர் கூறினார்
சும்மா இல்லாது சொன்னார் சிறுத்தையார்
நம்ப முடியாமல் நாடு திகைக்குது
வம்பு எதற்கென்று வாய்பொத்தி நிற்குது
காவிரித் தண்ணீரைக் கன்னடன் மூடினான்
காவலில் இருந்தும் கரண்டினால் சாகிறான்
காவலில் இருந்தும் கரண்டினால் சாகிறான்
ஆவலில் காத்திருந்த அக்டோபர் தேர்தலும்
மாவலி போலவே மண்ணுள்ளே போனது
வழக்குபாயும் என்றுசொல்லி வாயைமூட வைத்தார்
பழக்கமாகிப் போனதிந்த பாழ்பட்ட நாட்டில்
விழுந்தபடி உள்ளானேவீரமெங்கே காணோம்.
ஆவலில் கேட்டால் அறிக்கைதான் கிட்டுது
பாவந்தான் மக்கள் பதட்டத்தோடு உள்ளனர்
நோவினில் உள்ளவரை நேரிலே காட்டாமல்
ஏவலில் செயல்களை யாரது செய்வது?
- லதாராணி பூங்காவனம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக