"தந்தை பெரியார்".. .பெயர் சொல்லும்போதே மனதுக்குள் கர்வமும் கம்பீரமும் சேர்ந்தே துளிர்க்கிறது. பெரியார் திடலுக்கு எத்தனையோ முறை சென்றிருக்கிறோம். எண்ணற்ற புகைப்படங்கள் எடுத்து அவற்றை நண்பர்களுக்குக் காட்டி பெருமை பட்டிருக்கிறோம்.
நேற்று திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் செயற்குழு கூட்டம் நடந்து முடிந்த பின் மத்திய உணவிற்குப் பின் தந்தை பெரியார் திடலுக்கு உமாபதி.சிங்கராயர், சிற்பி, கருணாநிதி மற்றும் நண்பர்களுடன் சென்றிருந்தேன்.
ஒவ்வொரு முறை ஒவ்வொரு நண்பர்களோடு அல்லது உறவினர்களோடு சென்று புகைப்படம் எடுக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியை விட நேற்று திராவிடர் இயக்கத் தமிழர் பேரவைத் தோழர்களோடு சென்று தந்தை பெரியார் சிலையருகிலும், அவர் ஓய்வெடுத்த மெத்தை (BED ) சற்கர நாற்காலி, மற்றும் பெரியார் அவர்கள் உபயோகித்த பொருட்களின் அருகில் நின்று ஒவ்வொரு பொருளாகப் பார்த்து அதற்கான நியாபகங்களைப் பற்றி நாங்கள் ஒருவரோடு ஒருவர் கருத்துக்கள் பறிமாறிக்கொண்டும் தந்தை பெரியாரின் மேன்மைகளைப் பற்றி பேசிக்கொண்டும் இருந்த அந்த நேரம் உண்மையில் வார்த்தைகளால் வடிக்க முடியாத உணர்வுகள் சிலிர்த்த கவிதைகளாகவே எங்கள் உள்ளத்தில் எழுந்ததை நாங்களே அறிவோம்.
அய்யா அவர்கள் உபயோகித்த கைத்தடி, மூக்குக்கண்ணாடி, பூதக்கண்ணாடி( Magnifier) இவைகளைப் பார்க்கும்போது முதிர்வயது பெரியார் நம் கண்முன் அங்கே நின்றுகொண்டிருப்பதாய்த் தான் தெரிகிறது.
அடுத்து ... அடடா 4 விதமான பூதக்கண்ணாடிகள்.. பார்வை குறைய குறைய அதற்கேற்றாற்போல் எழுத்துக்களைப் பெரிதாக்கும்படியான கருவிகளை வாங்கி அவர் படித்திருப்பதைப் பார்க்கும்போது... நிற்பதற்குத் துணையாக ஊன்று கோல் வேண்டும், உட்கார்வதற்கு துணையாய் சர்க்கரை நாற்காலி வேண்டும் படிப்பதற்குத் துணையாக பூதக்கண்ணாடி வேண்டும்.... இப்படி, தன் உடலுறுப்புக்கள் வேலைசெய்வதற்கே மற்ற பொருட்களின் துணையும் மற்றவர்களின் துணையும் தேவைப்பட்டபோதும் படிப்பதை ஒருநாளும் அந்தப் பெரியவர் நிறுத்தாமல் கடைசி நேரம் வரை மக்களுக்கு நல்ல கருத்துக்களைக் கூறவேண்டுமென்பதற்காகவே படித்துக்கொண்டு இந்தச் சமுதாயத்தை முன்னேற்றி விடமாட்டோமா என்று ஏங்கியது இன்னும் அந்த பூதக்கண்ணாடியில் தெரிந்து கொண்டே இருப்பதான உணர்வு வருவதைத் தடுக்க முடியவில்லையே..
அதுமட்டுமா?
-லதாராணி பூங்காவனம்

அவர" உபயோகித்த தட்டு, தம்ளர், மூக்குக் கண்ணாடி முதல்பெட்பான்(BEDPAN) வரை அப்படியே அவர் வாழ்ந்த அந்த அறையிலேயே பார்க்கும்போது ...எல்லோரிடமும் சொல்லத்தோன்றுகிறது.... அட....யார் சொன்னது பெரியார் மறைந்துவிட்டார் என? போய்ப்பாருங்கள்... பெரியார் திடலுக்குள் போய்ப்பாருங்கள் .. உயிரோடு நம் தந்தை பெரியார் அங்கே உட்கார்ந்து கொண்டிருப்பது போன்ற உணர்வை பெறுவீர்களென்று!
-லதாராணி பூங்காவனம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக