கடந்த சனிக்கிழமை 5-11-2016 அன்று வேலூர் நகர அரங்கில் தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப் பட்டது.
தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப் பட்டது.

பேரா. சுபவீ அய்யா அவர்கள் கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் மிகச்சிறந்த கருத்துக்களுடன் தனித்தமிழ் இயக்க வரலாற்றை எடுத்துரைத்தார்.

இந்த விழாவில் திரு. சிங்கராயர் அவர்கள் என்னை அனைவரிடமும் "ஆர்க்காடு பூங்காவனம் ஆசிரியரின் மகள்" என அறிமுகப் படுத்தியது மிகவும் மகிழ்வாக இருந்தது .
மேலும் இந்த விழாவிற்கு என்னுடைய தம்பி நிரைஞன் மற்றும் அவர் மனைவி சங்கீதா, மேலும் என் தங்கை அவருடைய மகளுடனும் மற்றும் இன்னொரு தங்கை (சித்தப்பா மகள்) வந்திருந்தனர். மற்றும்
என் அப்பாவின் மாணவர்கள் சிலர் (தற்போது ஆசிரியர்களாக பணிபுரிபவர்கள்) நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். அப்பாவின் மேடைத் தமிழ் கேட்டு ரசித்தவர்கள் நான் பேசும் தமிழ் கேட்பது மிகவும் மகிழ்வாக இருப்பதாகக் கூறினர். என் தந்தையுடன் பணியாற்றியவர் மற்றும் என் தம்பியின் நண்பர்கள் சிலரும் வந்திருந்தனர்.
மிக்க மகிழ்வான மறக்க முடியாத நிகழ்ச்சியாக இருந்தது. சிங்கராயர் அய்யாவிற்கு என் நன்றிகள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக