என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

புதன், 23 நவம்பர், 2016

இசைக் கலைஞர் டாக்டர். பாலமுரளி கிருஷ்ணா...


இசைக்கலைஞர் டாக்டர். பாலமுரளி கிருஷ்ணா அவர்களை குவைத்தில் இருந்தபோது நேரில் சந்தித்து அரைமணி நேரத்திற்கும் மேல் அவருடன் அமர்ந்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. 

2006 ஆம் ஆண்டுடாக்டர். பாலா முரளி கிருஷ்ணா அவர்களின் 75 ஆவது பிறந்தநாள் விழாவை குவைத் நாட்டில் வெகு விமரிசையாகக் கொண்டாடினோம். அந்த விழாவில் அவர் பிறந்த நாள் விருந்தாக குவைத் வாழ் இந்தியர்களுக்கு தன் குரலால் இரண்டு மணிநேரம் இசை விருந்து அளித்தார். அப்பப்பா... என்ன ஒரு கம்பீரமான குரல்?

அன்று பாடிய "எந்தரோ மகானு பாவுலு'  என்ற கீர்த்தனை இன்னும் என்காதுகளில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது.  75 வயது ஆனவரா இப்படிப் பாடுகிறார் என்று பிரமித்தோம். அப்படி ஒரு கம்பீரம் அந்தக் குரலில்.  


அந்த அரங்கில் ஒரு நாள் போதுமா? பாடலையும் பாடினார். அப்போது என் கலைக்கிந்த குவைத் நாடு சமமாகுமா? என்று பாட அரங்கமே கரவொலியால் அதிர்ந்தது. 

கர்நாடக சங்கீதம், திரைப்படப் பாடல்கள் என்று எல்லாவிதமான இசையிலும் எல்லோர் மனத்தையும் கவர்ந்த இந்த மூத்த கலைஞரின் மூச்சு ஓய்வெடுத்தது  இயற்கையின் நியதி தான் என்றாலும் இந்த இழப்பு ஈடுசெய்ய முடியாதது.

வருத்தம் மனதில் வரிவரியாக ஓடிக்கொண்டிருந்தாலும் நினைவினில் அவர் குரல் அலை அலையாக இனிமையாக எப்போதுமே ஒலித்துக்கொண்டு தான் இருக்கும்.

- லதாராணி பூங்காவனம்

-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக