என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

செவ்வாய், 6 டிசம்பர், 2016

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா இயற்கை எய்தினார்.



உயிரின் இறுதி நிலை மரணம். இது இயற்கையின் நியதிதான் என்றாலும் எளிதில் ஏற்றுக்கொள்ள முடியாதது. அன்பு, பாசம், பகை, வெறுப்பு என அனைத்தையும் தாண்டி எல்லோர் மனத்தையும் ஒருநிமிடமேனும் துக்கத்தில் ஆழ்த்திவிட்டுச் செல்வது மரணம் என்ற ஒற்றை வார்த்தை.

கட்சியில் வேறுபட்டாலும் களப்பணியில் வேறாய் நின்றாலும் அனைவரின் உள்ளத்தையும் கவலையில் தோய்த்துச் சென்றுள்ளது நம் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் மரணம்.

மாமேரு போல் நின்ற துணிவு மிக்க பெண்மணியாய் அனைவராலும் போற்றப்பட்டவர் போற்றப்படுபவர் என்றென்றும் அனைவர் மனதிலும் நிலைத்து நிற்பவரின் மரணம் தமிழகத்தையே துயரில் ஆழ்த்தியுள்ளது.

இவரின் துணிவும் ஆளுமையும் கண்டு பல நேரங்களில் வியந்தும் போற்றியும் உள்ளேன். பெண்கள் எப்படி துணிவுடன் இருக்க வேண்டும் என்பதற்கு சமகாலத்து உதாரணமாய் விளங்கியவர். தோல்வியைக் கண்டு துவளாமல் அடுத்தடுத்த வெற்றியை நோக்கிப் பயணித்தவர்.

தமிழக முதலமைச்சராக "அம்மா" என்று அவர்தன் தொண்டர்களால் அன்போடு அழைக்கப்பட்டவரின் மரணம் என்னை ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஒட்டுமொத்த தமிழகத்தையும் துயரத்தில் விட்டுச்சென்ற தமிழக முதலமைச்சர் - இரும்புப் பெண்மணி நிலைத்த புகழுடன் என்றென்றும் வரலாற்றில் இருப்பார்.
வீரப்பெண்மணிக்கு என் வீரவணக்கம்.

- - லதாராணி பூங்காவனம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக