நேற்று திரு.கலைவாணன் அவர்கள் பல்லாவரம் நகரில் தங்களுடைய பொம்மலாட்டம் நிகழ்ச்சியைக் காண என்னை அழைத்திருந்தார்.
அவரின் அழைப்பினை ஏற்று அந்நிகழ்ச்சியைக் காணச்சென்றேன்.
முதன் முதலாக நான் நேற்றுதான் பொம்மலாட்டம் நிகழ்ச்சியை நேரில் கண்டேன்.
உண்மையிலேயே வியந்து போனேன். சரியாக ஒரு மணி நேரம் நடந்த பொம்மலாட்ட நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்து.
சொல்லவேண்டிய கருத்துக்களை நகைச்சுவையோடு சொல்வதென்பது ஒருபுறம் இருந்தாலும் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கு ஏற்றவாறு பொம்மைகளை வடிவமைத்து அவற்றிக்குக் கச்சிதமாக உடைகள் மற்றும் அலங்காரங்கள் செய்து கதை ஓட்டத்திற்கு ஏற்ப அவற்றிற்கு அசைவு கொடுத்து அடடா... உண்மையிலேயே வியக்க வைக்கும்படி இருந்தது.
ஒவ்வொரு கருத்தையும் வடிவமைத்து அவற்றை மக்களிடம் கொண்டுசெல்ல அவர்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சியும் அதற்குப் பின்னால் இருக்கும் கடும் உழைப்பையும் பாராட்ட வேண்டும்.
நான் கண்டு வியந்த ஒரு காட்சி... வறட்சி பூதம் நாட்டிற்குள் புகுந்து கேடு விளைவிக்கப் போகிறது என்பதை காட்டும் ஒரு நிகழ்வில் உண்மையான புகையும் நெருப்பும் உபயோகித்ததுதான். எப்படி அந்த சின்ன திரைக்குள் அத்தனை லாவகமாக தீப்பந்தத்தோடு சண்டைசெய்வது போன்ற காட்சியை அமைக்க முடிகிறது? உண்மையிலேயே பாராட்டத்தக்கது ..
நேற்றைய பொம்மலாட்ட நிகழ்ச்சியின் ஒரு பகுதியை இணைத்துள்ளேன்/ பார்த்து மகிழுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக